முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இறுகநீக்குதல் முதல் - இறைமகன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இறுகநீக்குதல் முதல் - இறைமகன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இறை | உயரம் ; தலை ; கடவுள் ; தலைவன் ; அரசன் ; உயர்ந்தோன் ; மூத்தோன் ; பெருமையிற் சிறந்தோன் ; கணவன் ; பறவையிறகு ; கடன் ; வீட்டிறப்பு ; மறுமொழி ; மணிக்கட்டு ; குடியிறை ; சிறுமை ; அற்பம் ; காலவிரைவு ; சிவன் ; பிரமன் ; மாமரம் . |
| இறை | (வி) இறைத்துவிடு ; தூவு ; எறி , வீசு ; தங்கு . |
| இறைக்கட்டு | வரி . |
| இறைக்கள்ளன் | காண்க : இறைப்பிளவை . |
| இறைக்காசான் | முருகக்கடவுள் . |
| இறைகுடி | வரி கொடுப்போன் . |
| இறைக்குத்து | சாகுந்தறுவாயில் கண்விழி அசைவற்று இருக்கை . |
| இறைகாவல் | தலையாரிக்குரிய வரி . |
| இறைகிழவன் | அரசனாதல் தன்மையை உடையவன் . |
| இறைகுத்துதல் | மதிப்பிடுதல் ; விரலிறையால் அளவிடுதல் . |
| இறைகூடுதல் | அரசாளுதல் . |
| இறைகூடை | நீரிறைக்குங் கூடை . |
| இறைகூர்தல் | தங்குதல் . |
| இறைச்சி | மாமிசம் ; இறைச்சிப் பொருள் ; கருப்பொருள் ; விருப்பமானது . |
| இறைச்சிப்பொருள் | கருப்பொருளினுள்ளே கொள்ளும் பொருள் ; புறத்துச் செல்லும் குறிப்புப் பொருள் . |
| இறைச்சிப்போர் | உடம்பு . |
| இறைசூதன் | நான்முகன் . |
| இறைஞ்சலர் | பகைவர் . |
| இறைஞ்சார் | பகைவர் . |
| இறைஞ்சி | மரவுரி . |
| இறைஞ்சு | வளை ; வணங்கு . |
| இறைஞ்சுதல் | தாழ்தல் ; கவிழ்தல் ; வளைதல் ; வணங்குதல் . |
| இறைத்தல் | சிதறுதல் ; நீர் பாய்ச்சுதல் ; நிறைத்தல் ; மிகுதியாகச் செலவிடுதல் . |
| இறைதல் | சிதறிப்போதல் , சிந்துதல் ; வணங்குதல் . |
| இறைதிரியல் | அரசநீதி திறம்பல் . |
| இறைப்பாரம் | உயிர்களைக் காக்கும் அரசனுடைய பொறுப்பு . |
| இறைப்பிணைப்படுதல் | ஒருவன் செலுத்த வேண்டும் வரிக்குப் பிணைகொடுத்தல் . |
| இறைப்பிளவை | கைவிரலிடுக்கில் வரும் ஒருவகைப் புண் . |
| இறைப்பு | நீர் இறைக்கை . |
| இறைப்புப்பட்டரை | கிணற்றுப் பாய்ச்சலுள்ள இடம் . |
| இறைபயப்பது | குறிப்பாகப் பொருளை விளக்கும் விடை . |
| இறைமகள் | தலைவி ; அரசன் மகள் ; துர்க்கை . |
| இறைமகன் | அரசன் ; அரசன் மகன் . |
| இறுகநீக்குதல் | கைவிடுதல் . |
| இறுகரை | இடிகரை . |
| இறுகல் | சுருங்குகை ; கடினமாதல் ; பதுமராக மணியின் குற்றங்களுள் ஒன்று . |
| இறுகால் | ஊழிக்காற்று . |
| இறுகுதல் | அழுத்தமாதல் ; கெட்டியாதல் ; உறைதல் ; நெருங்குதல் ; உறுதியாதல் ; நிலைபெறுதல் ; மூர்ச்சிதல் ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று . |
| இறுங்கு | சோளவகை ,காக்காய்ச் சோளம் . |
| இறுத்தருதல் | வருதல் . |
| இறுத்தல் | தங்குதல் ; ஒடித்தல் ; சொல்லுதல் ; வடித்தல் ; விடைகூறல் ; முடித்தல் ; வெட்டல் ; கடன் செலுத்தல் ; அழித்தல் ; வீழ்த்துதல் ; எறிதல் ; வினாதல் ; தைத்தல் . |
| இறுதல் | ஒடிதல் , முறிதல் ; கெடுதல் ; அழிதல் ; முடிதல் ; தளர்தல் ; முடிவுறுதல் ; சாதல் . |
| இறுதி | முடிவு ; சாவு ; வரையறை . |
| இறுதிக்காலம் | இறப்புக்காலம் ; ஊழிக்காலம் . |
| இறுதிநிலைத்தீபகம் | கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது . |
| இறுதிநிலைத்தீவகம் | கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது . |
| இறுதிவிளக்கு | கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது . |
| இறுதிவேள்வி | அந்தியேட்டி ; ஈமக்கடன் செய்கை . |
| இறுநாகம் | காண்க : இலாமிச்சை . |
| இறுப்பு | தங்குகை ; குடியிறை ; கடன் செலுத்துகை . |
| இறும்பி | எறும்பு . |
| இறும்பு | குறுங்காடு ; சிறுதூறு ; சிறுமலை ; தாமரைப்பூ ; காந்தட் பூண்டு ; வியப்பு . |
| இறும்பூது | வியப்பு ; பெருமை ; மலை ; தளிர் ; சிறுதூறு ; தாமரைப்பூ . |
| இறுமாத்தல் | பெருமை பாராட்டுதல் ; செருக்கடைதல் ; நிமிர்தல் ; மிக மகிழ்தல் . |
| இறுமாப்பு | பெருமிதம் ; பெருமை பாராட்டுகை ; செருக்கு ; நிமிர்ச்சி . |
| இறுமுறி | கிழிந்துபோன பத்திரம் ; தீரந்துபோன பத்திரம் . |
| இறுவதஞ்சாமை | இழிப்புக்கு அஞ்சாதிருத்தல் ; வணிகர் குணங்களுள் ஒன்று . |
| இறுவரை | முடிவு ; அழியுங்காலம் ; பெரிய மலை ; பக்கமலை ; மலையின் அடிவாரம் . |
| இறுவரையம் | எல்லை ; தற்சமயம் . |
| இறுவாக | இறுதியாக . |
| இறுவாய் | முடிவு ; ஈறு ; இறப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 139 | 140 | 141 | 142 | 143 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இறுகநீக்குதல் முதல் - இறைமகன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், அரசன், சொல், முன்வருஞ், இறுதியிலே, விளக்கு, நின்று, பலவற்றோடும், பெருமை, விளைப்பது, பொருந்திப், சொற்கள், கடைநிலை, முடிவு, கடன், ஒன்று, சிறுதூறு, தாமரைப்பூ, வியப்பு, குடியிறை, பத்திரம், இறைப்பிளவை, நீர், வணங்குதல், பகைவர், தங்குதல், காண்க

