முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இளங்குருத்து முதல் - இளவெயில் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இளங்குருத்து முதல் - இளவெயில் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
இளந்தேவி | அரசனின் இளைய மனைவி . |
இளந்தை | இளவயதுடையது ; இளமை ; குழந்தை . |
இளந்தோயல் | உறைந்துவருந் தயிர் ; ஆயுதங்களைப் பதமிடும் தோய்ச்சல் . |
இளநகை | புன்சிரிப்பு . |
இளநலம் | இளைய வடிவு ; இளமை இன்பம் . |
இளநாக்கடித்தல் | உறுதியில்லாமற் பேசல் ; உடன்படாததுபோற் காட்டுதல் . |
இளநாள் | இளவேனில் . |
இளநிலா | அந்திநிலா , பிறைச்சந்திரன் . |
இளநீர் | இளந்தேங்காய் ; தெங்கின் இளங்காயிலுள்ள நீர் ; மணியின் இளநிறம் ; வெள்ளொளி . |
இளநீர்க்கட்டு | உள்நாக்கு நோய் . |
இளநீர்க்குழம்பு | இளநீரால் செய்யப்படும் கண் மருந்துவகை . |
இளநீர்த்தாதல் | தேய்ந்து மெலிதல் . |
இளநீரமுது | வழிபாட்டில் படைக்கும் இளநீர் . |
இளநீலம் | வெளிறிய நீலம் . |
இளநெஞ்சன் | கோழை மனமுடையவன் ; இளகின மனமுடையவன் , இரக்கமுள்ள மனமுடையவன் . |
இளநெஞ்சு | இளகின மனம் , இரக்கமுள்ள மனம் ; கோழை மனம் . |
இளநேரம் | மாலை . |
இளப்பம் | திடமின்மை , உறுதியின்மை ; தாழ்வு ; மென்மை . |
இளம்பச்சை | நன்றாக பற்றாத பச்சை நிறம் . |
இளம்பசி | சிறுபசி . |
இளம்படியார் | இளம்பெண்கள் . |
இளம்பதம் | இளமை முற்றாநிலை ; இளம்பாகம் ; உருகுபதம் ; வேகாப்பதம் ; நெல் முதலியவற்றின் காய்ச்சற் குறைவு . |
இளம்பருவம் | இளவயது ; மெல்லிய பதம் . |
இளம்பாக்கு | பாக்குவகை ; பச்சைப் பாக்கு . |
இளம்பாகம் | காண்க : இளம்பதம் . |
இளம்பாடு | இளமையிற் படும்பாடு ; இளம்பதம் ; முற்றாமை . |
இளம்பாலாசிரியன் | இளம்பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன் . |
இளம்பிள்ளைவாதம் | குழந்தைகளுக்கு வரும் ஒருவகை வாதநோய் . |
இளம்பிறை | பிறைச்சந்திரன் ; இணையா வினைக்கைவகை . |
இளம்புல் | முதிராத புல் ; அறுகு . |
இளம்பெண் | இளம்பருவத்துப் பெண் ; கற்றாழை . |
இளமட்டம் | கீழ்மையும் இளமையும் உடையது ; குறுமட்டக் குதிரை ; காண்க : இளவட்டம் . |
இளமண் | மணல்கொண்ட தரை . |
இளமணல் | குருத்துமணல் . |
இளமரக்கா | வயல் சூழ்ந்த சோலை ; இளஞ்சோலை . |
இளமழை | பயன்படுவதாகிய மேகம் ; சிறு பெயலுள்ள முகில் . |
இளமார்பு | கருப்பூரவகை . |
இளமுறை | பின்வழிமுறை . |
இளமை | இளமைப் பருவம் ; சிறு பருவம் ; மென்மை ; அறிவு முதிராமை : ஒன்றை வேறொன்றாக மயங்கும் மயக்கம் ; காமம் . |
இளமைச்செவ்வி | சிறுபருவம் ; கோமளம் . |
இளமையாடுதல் | திரிபுணர்ச்சியுறுதல் . |
இளவட்டம் | இளமட்டம் , இளம்பருவத்தினர் . |
இளவணி | காலாட்படை . |
இளவரசன் | பட்டத்துக்குரிய அரசகுமாரன் ; இளம் பருவத்து அரசன் ; இராச குமாரன் . |
இளவரசு | அரசகுமாரன் ; பட்டத்துக்குரிய பிள்ளை ; இளமையான அரசமரம் . |
இளவல் | தம்பி ; குமாரன் ; இளைஞன் ; முதிராதது . |
இளவழிபாடு | சிறுபிள்ளைக் கல்வி . |
இளவாடை | மெல்லிய வாடைக்காற்று . |
இளவாளிப்பு | ஈரம் . |
இளவுச்சி | உச்சிக் காலத்துக்கு அணித்தான முற்பொழுது . |
இளவுடையான் | காண்க : இளவரசு . |
இளவுறை | இளந்தயிர் . |
இளவெந்நீர் | சிறு சூடான நீர் . |
இளவெயில் | காலை வெயில் ; முதிராத வெயில் . |
இளங்குருத்து | முதிராத குருத்து . |
இளங்கேள்வி | துணை மேலாளன் . |
இளங்கொடி | சிறுகொடி ; பசுவின் நஞ்சுக்கொடி ; பெண் . |
இளங்கொம்பு | வளார் . |
இளங்கொற்றி | இளங்கன்றையுடைய பசு . |
இளங்கோ | இளவரசன் ; பூவணிகன் . |
இளங்கோயில் | திருப்பணிக்காக மூர்த்தியை வேறிடத்தில் வைக்குமிடம் . |
இளசு | காண்க : இளைது . |
இளஞ்சூடு | சிறு சூடு . |
இளஞ்சூல் | பயிரின் இளங்கரு ; முதிராப் பிண்டம் . |
இளஞாயிறு | உதயசூரியன் . |
இளந்தண்டு | முளைக்கீரை . |
இளந்தலை | இளமைப் பருவம் ; எளிமை ; கனமின்மை ; மரத்தின் முற்றாத பாகம் . |
இளந்தாரி | இளைஞன் , வாலிபன் . |
இளந்தென்றல் | சிறு தென்றல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 136 | 137 | 138 | 139 | 140 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இளங்குருத்து முதல் - இளவெயில் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிறு, காண்க, இளமை, இளம்பதம், பருவம், மனம், முதிராத, மனமுடையவன், பட்டத்துக்குரிய, இளவரசன், இளநீர், அரசகுமாரன், இளமைப், குமாரன், வெயில், இளைஞன், இளவரசு, நீர், இளமட்டம், இளம்பாகம், கோழை, மென்மை, இரக்கமுள்ள, மெல்லிய, இளைய, இளகின, பெண், பிறைச்சந்திரன், இளவட்டம்