தமிழ் - தமிழ் அகரமுதலி - இலக்கணி முதல் - இலஞ்சி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இலகுபதனன் | எளிதாகப் பறப்பவன் . |
| இலகுவியாக்கியானம் | சிற்றுரை . |
| இலகுளீசன் | சிவபிரான் கூறான ஒரு குருமூர்த்தம் . |
| இலகோட்டா | மரவகை . |
| இலங்கடை | இல்லாதபோது . |
| இலங்கணம் | தடை ; கடக்கை ; பட்டினி கிடக்கை . |
| இலங்கனம் | தடை ; கடக்கை ; பட்டினி கிடக்கை . |
| இலங்கம் | கூடுகை ; எறும்பு ; கூட்டம் ; மூடம் ; களரி . |
| இலங்கர் | நங்கூரம் . |
| இலங்காபுரம் | இராவணனின் தலைநகரம் . |
| இலங்காபுரி | இராவணனின் தலைநகரம் . |
| இலங்கிகன் | துறவி . |
| இலங்கிசார் | அலைக்கழிவு ; இடைஞ்சல் . |
| இலங்கித்தல் | குதித்தல் ; கடத்தல் . |
| இலங்கு | குளம் . |
| இலங்குதல் | ஒளிசெய்தல் ; விளக்கமாகத் தெரிதல் . |
| இலங்குபொழுது | படுஞாயிறு ; சூரியன் மறையும் வேளை . |
| இலங்கேசன் | இலங்கைத் தலைவன் ; இராவணண் . |
| இலங்கை | ஆற்றிடைக்குறை ; ஈழ மண்டிலம் ; இராவணன் தலைநகர் ; தொண்டைநாட்டின் ஓர் ஊரான மாவிலங்கை . |
| இலங்கோடு | கீழுடை ; சல்லடம் ; சன்னியாசிகளுடைய உடை . |
| இலச்சித்தல் | நாணுதல் . |
| இலச்சினை | அடையாளம் ; முத்திரை ; முத்திரை மோதிரம் . |
| இலச்சை | கூச்சம் ; நாணம் . |
| இலச்சைகெட்ட மரம் | சுண்டிமரம் ; கல்தேக்கு மரம் . |
| இலச்சைப்படுதல் | நாணுதல் . |
| இலசுனம் | வெள்ளைப் பூண்டு ; மாணிக்கக் குணத்துள் ஒன்று . |
| இலசுனி | மாணிக்கக் குணத்துள் ஒன்று . |
| இலஞ்சம் | பரிதானம் , கைக்கூலி . |
| இலஞ்சி | வாவி ; ஏரி ; கொப்பூழ் ; குணம் ; சாரைப்பாம்பு ; மகிழமரம் ; மதில் ; புன்கு ; மாமரம் ; சவுக்கம் என்னும் ஆடைவகை . |
| இலக்கணி | இலக்கணம் அறிந்தவன் ; அழகன் . |
| இலக்கணை | ஒரு பொருளை நேரே உணர்த்தும் சொல் , அப் பொருளை உணர்த்தாது அதனோடு இயைபுடைய மற்றொரு பொருளை உணர்த்துவது . |
| இலக்கம் | விளக்கம் ; குறிப்பொருள் ; நூறாயிரம் ; எண் ; எண்குறி ; இலக்கு ; காணுதல் . |
| இலக்கமடைத்தல் | எப்படிக் கூட்டினும் மொத்த எண் ஒன்றேயாகும்படி எண்களைக் கட்டங்களில் அடைத்தல் . |
| இலக்கமிடுதல் | எண் குறித்தல் ; கணக்கிடுதல் . |
| இலக்கர் | இலக்கமென்னும் தொகையினர் ; ஆடை ; கந்தை ; சீலை . |
| இலக்காந்தரம் | இடையிலக்கம் . |
| இலக்காரம் | சீலை ; ஆடை . |
| இலக்கித்தல் | உருவரைதல் . |
| இலக்கிதம் | இலட்சிதம் , குறிக்கப்பட்டது . |
| இலக்கியம் | இலக்கணம் அமையப் பெற்ற பொருள் ; ஆன்றோர் நூல் ; எடுத்துக்காட்டு ; குறி . |
| இலக்கியார்த்தம் | இலக்கணையால் அறியும் பொருள் . |
| இலக்கினச்சட்டுவருக்கம் | இராசிக்குரிய ஆறு செயல்கள் ; அவை : ஓரை , சுடர்ச் செலவு , திரேக்காணம் , நவாமிசம் , துவாதசாமிசம் , கோட்கூறு என்பன . |
| இலக்கினம் | இராசியின் உதயம் ; நல்ல வேளை . |
| இலக்கினாதிபதி | இலக்கினத்திற்கு உடையவன் . |
| இலக்கு | குறிப்பொருள் ; அம்பெய்யும் குறி ; அடையாளம் ; இடம் ; நாடிய பொருள் ; எதிரி ; அளவு ; சமயம் ; அசாதாரண தருமம் . |
| இலக்குதல் | அடையாளம் இடுதல் ; இலங்கப்பண்ணுதல் ; வரைதல் . |
| இலக்குப் பார்த்தல் | குறிபார்த்தல் ; சமயம் பார்த்தல் . |
| இலக்குமணை | சாரசப் பறவையின் பேடு . |
| இலக்குமி | திருமால் தேவி ; செல்வம் ; மஞ்சள் ; முத்து ; அழகு . |
| இலக்குவைத்தல் | குறிவைத்தல் . |
| இலக்கை | ஆடை ; மாதச்சம்பளம் ; பாதுகாவல் . |
| இலகடம் | யானை மேலிடும் இருக்கை , அம்பாரி . |
| இலகம் | ஊமத்தைப் பூண்டு . |
| இலகரி | கத்தூரி ; மது ; பெருந்திரை ; மகிழ்ச்சி ; வெறி . |
| இலகல் | எழுத்து ; அகில் ; நொய்ம்மை . |
| இலகாம் | கடிவாளம் . |
| இலகான் | கடிவாளம் . |
| இலகிமா | எண்வகைச் சித்திகளுள் நொய்மையதாகும் ஆற்றல் . |
| இலகிரி | மயக்கமூட்டும் பொருள்கள் ; அபின் ; கஞ்சா ; சாதிக்காய் ; சாதிபத்திரி . |
| இலகு | எளிது ; சிறுமை ; காலவகை ; தணிவு ; குற்றெழுத்து . |
| இலகுசம் | ஈரப்பலாமரம் . |
| இலகுத்துவம் | நொய்ம்மை , கனமற்ற தன்மை . |
| இலகுதல் | விளங்குதல் ; மிகுதல் ; ஒளிசெய்தல் . |
| இலகுநட்சத்திரம் | நுட்பமான நட்சத்திரம் ; அசுவினி , பூசம் , அஸ்தம் என்னும் நட்சத்திரங்கள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 129 | 130 | 131 | 132 | 133 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணி முதல் - இலஞ்சி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருளை, அடையாளம், பொருள், குறிப்பொருள், கடிவாளம், இலக்கணம், என்னும், நொய்ம்மை, இலக்கு, சமயம், குறி, ஒன்று, சீலை, பார்த்தல், மாணிக்கக், இராவணனின், தலைநகரம், கிடக்கை, பட்டினி, கடக்கை, ஒளிசெய்தல், வேளை, பூண்டு, சொல், மரம், முத்திரை, நாணுதல், குணத்துள்

