முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இரதபரீட்சை முதல் - இரவுத்திரியம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இரதபரீட்சை முதல் - இரவுத்திரியம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இரவுத்திரம் | காண்க : இரௌத்திரம் . |
| இரவுத்திரியம் | சிவதீக்கை . |
| இரதி | இலந்தை ; காந்தன் ; விருப்பம் ; புணர்ச்சி ; மன்மதன் மனைவி ; பெண்யானை ; பித்தளை . |
| இரதிக்கிரீடை | புணர்ச்சி . |
| இரதிகன் | தேரோட்டுவோன் ; தேர்க்குரியவன் . |
| இரதிகாதலன் | மன்மதன் . |
| இரதித்தல் | காண்க : இரசித்தல் . |
| இரதிபதி | காண்க : இரதிகாதலன் . |
| இரதோற்சவம் | தேர்த்திருவிழா . |
| இரந்திரம் | துளை ; வெளி ; ஜன்மலக்கினம் ; இரகசியம் ; சுருங்கை . |
| இரந்துண்ணி | பிச்சைக்காரன் . |
| இரந்தை | காண்க : இலந்தை . |
| இரப்பாளன் | பிச்சையெடுப்பவன் ; இரவலன் . |
| இரப்பாளி | பிச்சையெடுப்பவன் ; இரவலன் . |
| இரப்பான் | பிச்சையெடுப்பவன் ; இரவலன் . |
| இரப்பு | வறுமை ; பிச்சை ; யாசிக்கை . |
| இரப்புணி | காண்க : இரந்துண்ணி . |
| இரம்பக்கல் | குருந்தக்கல் . |
| இரம்பம் | கத்தூரி விலங்கு ; மரமறுக்கும் வாள் . |
| இரம்பிகம் | மிளகு . |
| இரம்பிலம் | மிளகு . |
| இரம்பை | இரம்பம் ; கத்தூரி விலங்கு ; தேவருலகப் பெண்டிருள் ஒருத்தி . |
| இரம்மியம் | மகிழ்ச்சி தருவது ; விரும்பத்தக்கது ; அழகிது . |
| இரமடம் | பெருங்காயம் . |
| இரமணம் | இன்புறச் செய்கை ; இன்பம் விளைப்பது ; கழுதை ; காமசேட்டை ; சுரதவிளையாட்டு . |
| இரமணன் | கணவன் ; தலைவன் ; மன்மதன் . |
| இரமணியம் | இன்பஞ்செய்வது ; சரச விளையாட்டு . |
| இரமணீயம் | இன்பஞ்செய்வது ; அழகுள்ளது . |
| இரமதி | காகம் ; காமி ; காலம் ; மன்மதன் . |
| இரமா | திருமகள் ; இன்பந்தருபவள் . |
| இரமாப்பிரியம் | தாமரை . |
| இரமாபதி | திருமால் . |
| இரமித்தல் | மகிழ்தல் ; புணர்தல் . |
| இரமியம் | மனநிறைவு ; அழகு . |
| இரமியவருடம் | உலகின் பகுதிகளுள் ஒன்று , ஒன்பான் கண்டத்துள் ஒன்று . |
| இரமை | திருமகள் ; செல்வம் ; மனைவி . |
| இரலை | கலைமான் ; புல்வாய் ; துத்தரி என்னும் ஊதுகொம்பு ; அசுவினி நாள் . |
| இரவச்சம் | மானந்தீரவரும் இரத்தலுக்கு அஞ்சுகை . |
| இரவணம் | ஒட்டகம் ; குயில் ; வண்டு ; கழுதைகத்துகை ; வெண்கலம் ; பரிகாசம் பண்ணுதல் ; வெப்பம் . |
| இரவதம் | குயில் . |
| இரவம் | ஒலி ; இருள்மரம் . |
| இரவரசு | சந்திரன் . |
| இரவல் | யாசகம் ; திருப்பித் தருவதாகக் கொண்ட பொருள் . |
| இரவலன் | பரிசில் விரும்புவோன் ; யாசகன் . |
| இரவாளன் | பரிசில் விரும்புவோன் ; யாசகன் . |
| இரவற்குடி | குடிக் கூலியின்றிக் குடியிருக்கும் குடும்பம் ; அடுத்து வாழுங் குடும்பம் . |
| இரவற்சோறு | பிறரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு ; ஒட்டுண்ணிப் பிழைப்பு . |
| இரவறிவான் | சேவற்கோழி . |
| இரவன் | சந்திரன் . |
| இரவி | சூரியன் ; மூக்கின் வலத்தொளை ; மலை ; எருக்கு ; வாணிகத் தொழில் . |
| இரவிக்கை | முலைக்கச்சு ; மாதர் உடைவகை . |
| இரவிகன்னம் | பூமிக்கும் சூரியனுக்குமுள்ள தொலைவு . |
| இரவிகாந்தம் | சூரியகாந்தக்கல் ; தாமரை . |
| இரவிகுலம் | சூரியமரபு . |
| இரவிகேந்திரம் | அணித்தான பாதையில் வரும் சூரியனுக்கும் கோளுக்கும் உள்ள தொலைவு . |
| இரவிநாள் | இரேவதி நாள் . |
| இரவிமது | வெள்ளி . |
| இரவிமைந்தர் | அசுவினிதேவர் . |
| இரவில்திரிவோன் | அரக்கன் . |
| இரவிவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
| இரவிவிக்கேபம் | கிரகணத்தில் சூரியன் சாய்வு வழியில் இருத்தல் . |
| இரவு | இராத்திரி ; மஞ்சள் ; இருள்மரம் ; இரத்தல் ; இரக்கம் ; பன்றிவாகை . |
| இரவுக்குறி | இரவிலே தலைவனும் தலைவியும் சேரும்படி தோழியால் குறிக்கப்படும் இடம் . |
| இரதபரீட்சை | தேர் செலுத்தும் கலை , அறுபத்துநான்கு கலையுள் ஒன்று . |
| இரதம் | புணர்ச்சி ; தேர் ; பல் ; சாறு ; அன்னரசம் ; சுவை ; இனிமை ; வாயூறு நீர் ; வண்டு ; பாதரசம் ; இரசலிங்கம் ; பாவனை ; அரைஞான் ; மாமரம் ; கால் ; உடல் ; வஞ்சிமரம் ; வாகனம் ; எழுதுவகை ; அனுராகம் ; நீர் ; ஏழு தாதுக்களுள் ஒன்று ; வலி ; நஞ்சு ; இத்தி . |
| இரதரேணு | பரமாணு நான்கு கொண்ட நீட்டலளவை . |
| இரதன் | கண் ; கிளி . |
| இரதனம் | அரைஞாண் . |
| இரதனை | அரத்தை ; நா . |
| இரதாங்கம் | தேர்க்கால் ; சக்கரவாகப் புள் . |
| இரதாரூடன் | தேரூர்வோன் ; தேர் செலுத்துவோன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 118 | 119 | 120 | 121 | 122 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரதபரீட்சை முதல் - இரவுத்திரியம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மன்மதன், இரவலன், ஒன்று, பிச்சையெடுப்பவன், தேர், புணர்ச்சி, பரிசில், கொண்ட, சந்திரன், இருள்மரம், விரும்புவோன், பிழைப்பு, தொலைவு, நீர், சூரியன், வண்டு, குடும்பம், யாசகன், தாமரை, இரந்துண்ணி, இரம்பம், இரதிகாதலன், மனைவி, இலந்தை, கத்தூரி, விலங்கு, நாள், திருமகள், இன்பஞ்செய்வது, மிளகு, குயில்

