தமிழ் - தமிழ் அகரமுதலி - இயற்பலகை முதல் - இரங்கேசன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இயன்மொழிவாழ்த்து | தலைவன் குலத்தோர் செய்திகளை அவன்மே லேற்றி வாழ்த்தும் புறத்துறை ; ' இன்னார் இன்னது கொடுத்தார் ; அவர்போல நீயுங் கொடுப்பாயாக ' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை ; அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை . |
| இயனம் | கள்ளிறக்குவோனது கருவிபெய்புட்டில் . |
| இயனெறி | நல்லொழுக்கம் . |
| இயாகதம் | சிற்றகத்தி . |
| இயாகம் | கொன்றை ; பாண்டம் ; வேள்வி . |
| இயுசாவியம் | கொன்றைமரம் . |
| இயேசு | கிறிஸ்துநாதரின் பெயர் . |
| இயை | அழகு ; புகழ் ; இசைப்பு ; வாழை . |
| இயை | (வி) சேர் . |
| இயைத்தல் | பொருத்துதல் . |
| இயைதல் | பொருந்துதல் ; இணங்குதல் ; நிரம்புதல் ; ஒத்தல் . |
| இயைந்துரை | பல பொருள்களின் வரையறைப் பட்ட தொகுதி . |
| இயைபிலிசைக்குறி | இடைப்பிறவரலாக வரும் சொற்களை அடைக்கும் குறிகள் , வளைவுக் குறிகள் . |
| இயைபின்மை நீக்கம் | தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன . |
| இயைபின்மை நீக்கல் | தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன . |
| இயைபின்மையணி | பொருள் தனக்குத் தானே உவமை என்று உரைக்கும் அணி . |
| இயைபு | சேர்க்கை ; பொருத்தம் ; தொடர்ச்சி ; ' இது கேட்டபின் இது கேட்கத் தக்கது ' என்னும் யாப்பு ; இயைபுத் தொடை ; நூல் வனப்புள் ஒன்று . |
| இயைபுத்தொடை | ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது . |
| இயைபுருவகம் | பல பொருளையும் தம்முள் இயைபுடையனவாக வைத்து உருவகம் செய்வது ; உருவக அணியுள் ஒன்று . |
| இயைபுவண்ணம் | இடையெழுத்துகள் மிகுந்து வரும் சந்தம் . |
| இயைபுவனப்பு | ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்னும் பதினொரு மெய்களை ஈற்றில் கொண்டு முடியும் நெடும் பாடல் . |
| இயைபுளன் | புகழாளன் . |
| இயைமே | வாழைமரம் . |
| இயைய | ஓர் உவம உருபு . |
| இயைவது | தக்கது . |
| இயைவு | இணக்கம் ; பொருத்தம் ; சேர்க்கை . |
| இர் | முன்னிலைப் பன்மை விகுதி ; படர்க்கைப் பன்மை விகுதி ; கேளிர் ; பெண்டிர் . |
| இர | இரவு ; இரத்தல் . |
| இரக்கக்குறிப்பு | ஒன்றன் துயரம் முதலியன கண்டு இரங்கிக் கூறும் மொழி . |
| இரக்கம் | அருள் ; மனவுருக்கம் ; மனவருத்தம் ; ஒலி ; ஈடுபாடு . |
| இரக்கித்தல் | காண்க : இரட்சித்தல் . |
| இரக்கை | காண்க : இரட்சை . |
| இரகசியம் | கமுக்கம் , மறைபொருள் , அந்தரங்கம் . |
| இரகிதம் | இட்டம் ; விடப்பட்டது ; நீக்கப் பட்டது . |
| இரகுநாதன் | இரகு குலத்தில் சிறந்த இராமன் . |
| இரகுவமிசம் | இரகுவின் வழிவந்தவர் ; ஒரு தமிழ் நூல் . |
| இரங்கல் | அழுகை ; நெய்தல் ; உரிப்பொருள் ; ஒலி ; யாழ் நரம்போசை . |
| இரங்கற்பா | ஒருவரின் மறைவு குறித்து வருந்திப் பாடும் பாட்டு , கையறுநிலை . |
| இரங்குகெளிறு | கெளிற்று மீன்வகை . |
| இரங்குசொல் | இழுமென இசைக்கும் சொல் . |
| இரங்குதல் | வருந்துதல் ; அருளல் ; மனமழிதல் ; அழுதல் ; கழிவிரக்கம் கொள்ளல் ; ஒலித்தல் ; யாழொலித்தல் ; கூறுதல் ; ஈடுபடுதல் . |
| இரங்கூன்மல்லி | ஒருவகைப் பூங்கொடி . |
| இரங்கொலி | முறையீடு . |
| இரங்கேசன் | அரங்கநாதன் ; திருவரங்கத்தில் கோயில்கொண்டிருக்கும் கடவுள் . |
| இயற்பலகை | சங்கப் பலகை . |
| இயற்பழித்தல் | தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை . |
| இயற்பா | இயல்பான ஓசையுடைய பாட்டு ; வெண்பா ; திவ்வியப் பிரபந்தத்துள் ஒரு பகுதி . |
| இயற்பெயர் | வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப் பெயர் ; விரவுப் பெயர் , உயர்திணை அஃறிணைகளுக்குப் பொதுவாய் வரும் பெயர் . |
| இயற்றமிழ் | செந்தமிழ் ; இலக்கியத் தமிழ் ; முத்தமிழுள் ஒன்று . |
| இயற்றல் | செய்தல் ; முயற்சி . |
| இயற்றளை | காண்க : இயற்சீர்வெண்டளை . |
| இயற்றி | முயற்சி ; ஆற்றல் ; உதவி ; திறமை . |
| இயற்றியான் | செய்தவன் . |
| இயற்று | பாத்திரம் |
| இயற்றுதல் | செய்தல் ; நடத்துதல் ; சம்பாதித்தல் ; தோற்றுவித்தல் ; நூல் செய்தல் . |
| இயற்றுதற்கருத்தா | தொழில் புரிபவன் ; பயனிலைச் செயலை நேரே செய்யும் வினைமுதல் . |
| இயற்றும்வினை | தன்வினை . |
| இயறல் | முத்தி ; போதல் . |
| இயன்ஞானம் | நல்லறிவு . |
| இயன்மகள் | கலைமகள் . |
| இயன்மணம் | இயற்கையான மணம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 113 | 114 | 115 | 116 | 117 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்பலகை முதல் - இரங்கேசன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இயைபின்மை, பெயர், ஒன்று, காண்க, செய்தல், வரும், நூல், புறத்துறை, விகுதி, பன்மை, பாட்டு, முயற்சி, என்னும், தமிழ், கூறும், சேர்க்கை, நீக்கும், தன்னோடு, குறிகள், தலைவன், அடைமொழி, செஞ்ஞாயிறு, பொருத்தம், சொல், என்றாற்போல்வன, தக்கது

