தமிழ் - தமிழ் அகரமுதலி - இடும்பை முதல் - இடைநிகராதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
இடைச்சொல் | பெயர்வினைகளைச் சார்ந்து வழங்கும் சொல் . |
இடைச்சொற்பகாப்பதம் | நால்வகைப் பகாப்பதங்களுள் ஒன்று ; மற்று , ஏ , ஓ என்பனபோல வருவது . |
இடைச்சோழகம் | தென்றல் வீசும் பருவத்தின் இடைக்காலம் . |
இடைசுருங்குபறை | துடி , உடுக்கை . |
இடைசூரி | அரும்பு வளையம் ; உருத்திராக்கம் முதலியவற்றின் இடையில் கோக்கும் மணி . |
இடைஞ்சல் | நெருக்கம் ; தடை ; இடையூறு . |
இடைத்தட்டு | இடைக்கொள்ளை . |
இடைத்தரம் | நடுத்தரம் . |
இடைத்தீனி | சிற்றுண்டி . |
இடைத்தொடர்க் குற்றுகரம் | இடையின வொற்றைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் . |
இடைதல் | சோர்தல் ; மனந்தளர்தல் ; பின்வாங்குதல் ; விலகுதல் ; தாழ்தல் ; பூமி ; சீலை . |
இடைதெரிதல் | செவ்வியறிதல் , தக்க சமய மறிதல் . |
இடைநரை | அங்கும் இங்கும் சிறிது மயிர் வெளுத்திருத்தல் . |
இடைநாடி | காண்க : இடைகலை . |
இடைநாழிகை | கோயிலில் அர்த்த மண்டப மகாமண்டபங்கட்கு இடைப்பட்ட இடம் . |
இடைநிகராதல் | நடுத்தரமான நிலையிலிருத்தல் . |
இடும்பை | துன்பம் ; தீமை ; நோய் ; வறுமை ; அச்சம் . |
இடுமம் | குயவன் சக்கரத்தை பூமியில் பொருத்துதற்கு இடும் மண்கட்டி . |
இடுமயிர் | சவுரிமயிர் . |
இடுமருந்து | ஒருவரைத் தன்வயமாக்கும் மருந்து ; வசிய மருந்து . |
இடுமுள் | வேலியாக இடும் முள் . |
இடுமோலி | ஒருவகை மரம் . |
இடுலி | பெண்ணாமை . |
இடுவந்தி | குற்றம் செய்யாதவர்மேல் குறறத்தைச் சுமத்துதல் . |
இடுவல் | இடுக்கு ; வழி . |
இடுவை | சந்து . |
இடை | நடு ; மத்திய காலம் ; அரை ; மத்திய தரத்தார் ; இடைச்சாதி ; இடையெழுத்து ; இடைச்சொல் ; இடம் ; இடப்பக்கம் ; வழி ; தொடர்பு ; சமயம் ; காரணம் ; நீட்டல் அளவையுள் ஒன்று ; துன்பம் ; இடையீடு ; தடுக்கை ; தச நாடியுள் ஒன்று ; பூமி ; எடை ; நூறு பலம் ; பொழுது ; நடுவுநிலை ; வேறுபாடு ; துறக்கம் ; பசு ; வாக்கு ; ஏழனுருபு . |
இடைக்கச்சு | அரைக்கச்சை . |
இடைக்கச்சை | அரைக்கச்சை . |
இடைக்கட்டு | அரைக்கச்சு ; ஓர் அணிகலன் ; இடைகழி ; வீட்டின் நடுக்கட்டு ; சமன் செய்வதற்குரிய நிறை . |
இடைக்கணம் | இடையினவெழுத்துகள் . |
இடைக்கருவி | 'சல்லி ' என்னும் தோற்கருவி ; மத்தளத்திற்கும் உடுக்கைக்கும் இடைத்தரமான ஒலியுள்ளது . |
இடைக்கலம் | மட்பாண்டம் . |
இடைக்கார் | நெல்வகை . |
இடைக்காற்பீலி | பரதவ மகளிர் அணியும் கால்விரல் அணிவகை . |
இடைக்கிடப்பு | இடைப்பிறவரல் . |
இடைக்கிடை | ஊடேயூடே , நடுநடுவே , ஒன்றைவிட்டு ஒன்று ; நிறைக்கு நிறை . |
இடைக்குலநாதன் | இடையர்களின் தலைவன் ; கண்ணன் . |
இடைக்குழி | இடை எலும்பு இரண்டுக்கும் இடையிலுள்ள பள்ளம் . |
இடைக்குறை | தனிச்சொல்லின் இடைநின்ற எழுத்துக் குறைந்து வரும் செயயுள் விகாரம் ; ஆற்றிடைக் குறை . |
இடைக்கொள்ளை | ஊடுதட்டு ; நடுக்கொள்ளை ; கொள்ளைநோயால் வரும் அழிவு . |
இடைகலை | தச நாடியுள் ஒன்று ; இட மூக்கால் வரும் மூச்சு ; சந்திரகலை . |
இடைகழி | இடைக்கட்டு ; வெளிவாயிலை அடுத்த உள்ளிடப் பாதை . |
இடைச்சம்பவம் | தற்செயல் . |
இடைச்சரி | தோள்வளை . |
இடைச்சன் | இடையிலே பிறந்தவன் ; இரண்டாம் பிள்ளை . |
இடைச்சனி | பூரநாள் . |
இடைச்சி | முல்லைநிலப் பெண் ; இடைச் சாதிப் பெண் ; இடுப்புடையவள் . |
இடைச்சியார் | இடைச்சியின்மேல் காமம் பற்றிச் பாடும் கலம்பக உறுப்பு . |
இடைச்சீலை | திரைச்சீலை . |
இடைச்சுரிகை | உடைவாள் . |
இடைச்சுவர் | இரண்டு சுவர்களுக்கு மத்தியில் உள்ள சுவர் ; இடையூறு . |
இடைச்செருகல் | ஒருவருடைய செய்யுள் நூலின் பிறர் வாக்கைப் புகுத்தல் ; ஒருவருடைய படைப்பை இடையிடையே மாற்றியமைத்தல் . |
இடைச்செறி | குறங்குசெறி' என்னும் அணி வகை ; துணைமோதிரம் . |
இடைச்சேரி | இடையர் குடியிருப்பு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 105 | 106 | 107 | 108 | 109 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடும்பை முதல் - இடைநிகராதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, வரும், இடைக்கட்டு, அரைக்கச்சை, நாடியுள், இடைகழி, நிறை, பெண், என்னும், மத்திய, ஒருவருடைய, இடும், இடைக்கொள்ளை, இடையூறு, இடைச்சொல், பூமி, இடைகலை, சொல், துன்பம், இடம், மருந்து