தமிழ் - தமிழ் அகரமுதலி - இடவயின் முதல் - இடிமேலிடி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
இடறல் | கால் தடுக்குகை ; தடை ; பழி ; தண்டனை . |
இடறு | தடை ; துன்பம் . |
இடறுகட்டை | தடையாயிருப்பது . |
இடறுதல் | கால் தடுக்குதல் ; துன்பப்படுதல் ; மீறுதல் ; ஊறுபடுத்துதல் ; தடுத்தல் . |
இடன் | அகலம் ; நல்ல நேரம் ; இடப்பக்கம் இருப்பவன் . |
இடனறிதல் | அரசன் வினை செய்தற்குரிய இடத்தைத் தெரிதல் . |
இடனெறிந்தொழுகல் | வணிகர் குணங்களுள் ஒன்று ; இருக்கும் இடம் நோக்கி அதற்கிசைய நடத்தல் . |
இடா | இறைகூடை ; ஓர் அளவு . |
இடாகினி | காளியேவல் செய்வோள் ; சுடுகாட்டில் பிணங்களைத் தினனும் பேய் . |
இடாகு | புள்ளி ; குறி . |
இடாகுபோடுதல் | கால்நடைகளுக்குச் சூடு போடுதல் . |
இடாசுதல் | நெருக்குதல் ; மோதுதல் ; மேற்படுதல் ; இகழ்தல் . |
இடாடிமம் | காண்க : தாதுமாதுளை . |
இடாதனம் | யோகாசனவகை . |
இடாப்பு | அட்டவணை . |
இடாப்புதல் | காலை அகலவைத்தல் . |
இடாம்பிகன் | பகட்டுக்காரன் . |
இடாமிடம் | ஒழுங்கற்ற பேச்சு . |
இடாமுடாங்கு | ஒழுங்கின்மை . |
இடாயம் | இசைத்துறை ஐந்தனுள் ஒன்று . |
இடார் | இறைகூடை ; எலிப்பொறி . |
இடாரேற்றுதல் | எலிப்பொறியைத் தயார் செய்து வைத்தல் . |
இடால் | கத்தி . |
இடாவு | காணக : இடைகலை . |
இடாவேணி | அளவிடப்படாத எல்லை . |
இடி | தாக்குகை ; மா ; சிற்றுண்டி ; பொடி ; இடியேறு ; பேரொலி கழறுஞ்சொல் ; குத்து நோவு ; அக்கினி ; உறுதிச்சொல் ; ஆட்டுக்கடா . |
இடிக்கடை | காண்க : இடுக்கடி . |
இடிக்கொடியோன் | இடியைக் கொடியாகவுடைய இந்திரன் . |
இடிக்கொள்ளு | காட்டுக்கொள் . |
இடிகம் | காண்க : பெருமருந்து . |
இடிகரை | ஆறு முதலியவற்றின் அழிந்த கரை . |
இடிகொம்பு | கழியில் அடித்துள்ள அதிர்வேட்டுக் குழாய் . |
இடிச்சக்கை | பலாப்பிஞ்சு . |
இடிச்சொல் | உறுதிச்சொல் . |
இடிசல் | நொறுங்கின தானியம் ; அழிவு ; நொய்யரிசி . |
இடிசாந்து | இடித்துத் துவைத்த சுண்ணாம்பு . |
இடிசாபம் | கெடுகாலம் ; நிந்தை . |
இடிசாமம் | கெடுகாலம் ; நிந்தை . |
இடிஞ்சில் | காண்க : இடுக்காஞ்சட்டி . |
இடித்தடு | பிட்டு . |
இடித்தல் | முழங்குதல் ; இடியிடித்தல் ; நோதல் ; தாக்கிப்படுதல் ; மோதுதல் ; கோபித்தல் ; தூளாக்குதல் ; தகர்த்தல் ; நசுக்குதல் ; தாக்குதல் ; முட்டுதல் ; கழறிச் சொல்லுதல் ; கொல்லுதல் ; தோண்டுதல் ; கெடுத்தல் . |
இடித்துக்கூறல் | உறுதிச் சொல்லுரைத்தல் . |
இடித்துரை | கழறிக் கூறுஞ்சொல் , உறுதிச் சொல் . |
இடிதல் | தகர்தல் ; உடைதல் ; சரிதல் ; கரையழிதல் ; திகைத்தல் ; முனை முரிதல் ; வருந்துதல் . |
இடிதலைநோய் | நோய்வகை . |
இடிதாங்கி | கட்டடத்தின்மீது இடி விழாதபடி காக்கவைக்கும் காந்தக்கம்பி . |
இடிப்பணி | குறிப்புரை . |
இடிப்பு | இடி ; ஒலி ; வீரமுழக்கம் . |
இடிபடுதல் | நெருக்கப்படுதல் ; தாக்கப்படுதல் ; நொறுங்குதல் ; வெடிபடுதல் ; துன்பப்படுதல் . |
இடிபூரா | வெள்ளைச் சருக்கரை . |
இடிம்பம் | கைக்குழந்தை ; பெருந்துன்பம் ; மண்ணீரல் ; பறவை முட்டை ; ஆமணக்கு . |
இடிம்பு | அவமதிப்பு ; இழிவு . |
இடிமரம் | உலக்கை ; அவல் இடிக்கும் ஏற்றவுலக்கை . |
இடிமருந்து | சூரணமருந்து . |
இடிமாந்தம் | பொய்யான குற்றச்சாட்டு . |
இடிமீன் | மீன்வகை . |
இடிமுழக்கம் | இடியொலி . |
இடிமேலிடி | மாட்டுக்குற்றம் ; துன்பத்திற்கு மேல் துன்பம் . |
இடவயின் | இடத்து . |
இடவழு | தன்மை முதலிய மூவகையிடங்களைப் பிறழக் கூறுகை . |
இடவன் | மண்ணாங்கட்டி ; நுகத்தின் இடப்பக்கத்து மாடு ; கூட்டெருது ; பிளக்கப்பட்ட பொருள் . |
இடவாகுபெயர் | இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆவது . |
இடவிய | பரந்துள்ள ; வேகமாக ; சார்ந்த . |
இடவியது | அகலமுள்ளது ; விரைவுள்ளது . |
இடவை | வழி ; பாதை . |
இடவோட்டம் | இராகுகேதுக்களின் இடப்பக்கமாகச் செல்லும் போக்கு . |
இடவோட்டு நாள் | காண்க : இடநாள் . |
இடற்சம் | செம்போத்து . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 103 | 104 | 105 | 106 | 107 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடவயின் முதல் - இடிமேலிடி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உறுதிச்சொல், கெடுகாலம், நிந்தை, உறுதிச், மோதுதல், இறைகூடை, கால், துன்பம், துன்பப்படுதல், ஒன்று, சொல்