தமிழ் - தமிழ் அகரமுதலி - வேட்கை முதல் - வேண்டுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வேட்கை | பற்றுள்ளம் ; காமவிருப்பம் . |
| வேட்கைநீர் | தாகந்தணிக்கும் நீர் . |
| வேட்கைநோய் | காண்க : வேட்கை ; கருப்ப காலத்து ஏற்படும் மசக்கைநோய் . |
| வேட்கைப்பெருக்கம் | பேராசை . |
| வேட்கைமுந்துறுத்தல் | தலைவி தன் விருப்பத்தை தலைவன்முன் கூறும் துறை . |
| வேட்கைமை | காண்க : வேட்கை . |
| வேட்கோ | குயவன் . |
| வேட்கோபன் | குயவன் . |
| வேட்கோவன் | குயவன் . |
| வேட்சி | காண்க : வேட்கை . |
| வேட்டக்குடி | வேட்டுவர் வீடு . |
| வேட்டகம் | மனைவி பிறந்த வீடு ; தலைப்பாகை . |
| வேட்டம் | வேட்டை ; கொலை ; விருப்பம் ; விரும்பிய பொருள் ; பிசின் ; சாரம் . |
| வேட்டல் | வேள்விசெய்தல் ; திருமணம் ; விரும்புதல் ; ஏற்குதல் . |
| வேட்டாள் | மனைவி ; மணம்புரிந்தவள் . |
| வேட்டான் | நண்பன் ; திருமணமானோன் ; கணவன் ; விரும்புபவன் . |
| வேட்டி | ஆடவர் அரையில் உடுத்தும் ஆடை . |
| வேட்டிதம் | சூழ்கை ; சூழப்பெற்றது ; தடை ; கூத்தின் விகற்பம் ; மடிப்பு . |
| வேட்டு | வேட்கைத்தொழில் ; வெடி . |
| வேட்டுவன் | பாலைநிலத்திற் குரியவன் ; வேட்டைக்குச் செல்வோன் ; குறிஞ்சிநிலத் தலைவன் ; குளவி ; மகநாள் . |
| வேட்டுவாளி | குளவி . |
| வேட்டுவிச்சி | குறிஞ்சிநிலப் பெண் . |
| வேட்டை | வேட்டையில் கிடைக்கும் பொருள் ; கொலை ; இளைப்பு ; துன்பம் . |
| வேட்டைகட்டுதல் | வேட்டைமேற் செல்லுதல் . |
| வேட்டைநாய் | வேட்டையாடப் பழகிய நாய் ; கடிக்கும் நாய் . |
| வேட்டையாடுதல் | கொல்லுதற்கேனும் பிடித்தற்கேனும் காட்டிலுள்ள விலங்கு முதலியவற்றைத் துரத்திச் செல்லுதல் . |
| வேட்டைவாளி | காண்க : வேட்டுவாளி . |
| வேட்டோன் | காண்க : வேட்டான் . |
| வேட்பாளர் | தேர்தலுக்கு நிற்க விரும்புவோர் . |
| வேட்பித்தல் | வேள்விசெய்தல் . |
| வேட்பு | விருப்பம் . |
| வேடகம் | காதணிவகை . |
| வேடங்காட்டுதல் | போலியாக நடித்தல் . |
| வேடச்சி | வேடர்குலப் பெண் . |
| வேடச்சேரி | வேடரூர் . |
| வேடதாரி | மாறுவேடம் பூண்டவர் ; வஞ்சக முடையோர் . |
| வேடம் | உடை முதலியவற்றால் கொள்ளும் வேற்றுவடிவம் ; உடை ; விருப்பம் . |
| வேடன் | வேட்டுவன் ; பாலைநிலத்துக்குரியவன் ; காண்க : வேடதாரி . |
| வேடிக்கை | விநோதம் ; அலங்காரம் ; விநோதக் காட்சி ; விளையாட்டு . |
| வேடிக்கைக்காரன் | விநோதஞ் செய்பவன் . |
| வேடிக்கைகாட்டுதல் | விநோதச்செயல் செய்தல் . |
| வேடிக்கைப்பேச்சு | சிரிப்பாகப் பேசுதல் . |
| வேடிச்சி | காண்க : வேடச்சி . |
| வேடிதம் | மருந்து நாற்றம் . |
| வேடு | வேடர்தொழில் ; வேடச்சாதி ; வேடன் ; வரிக்கூத்துவகை ; பாண்டத்தின் வாயை மூடிக்கட்டும் துணி ; மூடுகை ; வடிகட்டுஞ்சீலை ; பொட்டணம் . |
| வேடுபறி | வழிப்பறி ; திருமங்கை மன்னன் திருமாலை வழிப்பறிக்கவும் சுந்தரரிடம் வேடர்கள் வழிப்பறிக்கவும் முயன்றதைக் கொண்டாடும் திருவிழா . |
| வேடுவன் | வேடன் ; குளவி . |
| வேடை | வேட்கை ; காமநோய் ; மரக்கலம் ; வெப்பம் ; மழையில்லாக்காலம் ; கோடைக்காலம் . |
| வேண்டல் | விரும்புதல் ; விண்ணப்பம் . |
| வேண்டலன் | பகைவன் . |
| வேண்டற்பாடு | விருப்பம் ; தேவை ; பெருமை ; செருக்கு . |
| வேண்டாத்தலையன் | அஞ்சாதவன் ; முரடன் . |
| வேண்டாத்தனம் | தவறு ; வேண்டாப் பொறுப்பின்மை . |
| வேண்டாதகாரியம் | தேவையில்லாத செயல் . |
| வேண்டாதவன் | விருப்பப்படாதவன் ; பகைவன் . |
| வேண்டாதார் | காண்க : வேண்டார் . |
| வேண்டாமை | வெறுப்பு ; அவாவின்மை . |
| வேண்டார் | விரும்பாதவர் ; பகைவர் . |
| வேண்டாவெறுப்பு | விருப்பில்லாமை . |
| வேண்டிக்கொள்ளுதல் | குறைநீக்க வேண்டுதல் . |
| வேண்டியது | இன்றியமையாதது ; தேவையானது ; போதுமானது ; மிகுதியானது ; மனத்துத் தோன்றியது . |
| வேண்டியமட்டும் | தேவையான அளவு ; போதுமான அளவு . |
| வேண்டியவன் | நட்புக்குரியவன் ; பிரியமுள்ளவன் ; ஒருவன் நன்மையை நாடுபவன் . |
| வேண்டியிருத்தல் | இன்றியமையாததாயிருத்தல் . |
| வேண்டுகோள் | நேர்தல் . |
| வேண்டுதல் | விரும்புதல் ; விரும்பிக்கேட்டல் ; விலைக்கு வாங்குதல் ; இன்றியமையாததாதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1004 | 1005 | 1006 | 1007 | 1008 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேட்கை முதல் - வேண்டுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வேட்கை, விருப்பம், குயவன், குளவி, விரும்புதல், வேடன், வேண்டுதல், வேடச்சி, நாய், வேண்டார், வேடதாரி, வழிப்பறிக்கவும், அளவு, பகைவன், செல்லுதல், வேட்டுவன், வேட்டை, மனைவி, வீடு, கொலை, பொருள், வேட்டுவாளி, வேட்டான், வேள்விசெய்தல், பெண்

