முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வெற்றிமுரசு முதல் - வெறுந்தரை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வெற்றிமுரசு முதல் - வெறுந்தரை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வெற்றிமுரசு | வெற்றிக்கறிகுறியாக முழங்கப்படும் பேரிகை . |
| வெற்றிமை | வெற்றியாகிய தன்மை ; மேம்பாடு ; வெறுமை . |
| வெற்றிலை | கொடிவகை ; வெற்றிலைக் கொடியின் இலை . |
| வெற்றிலைக்கால் | காண்க : வெற்றிலைத்தோட்டம் . |
| வெற்றிலைச்சுருள் | வெற்றிலையில் பாக்கு வைத்துக் கட்டிய சுருள் . |
| வெற்றிலைச்செல்லம் | காண்க : வெற்றிலைப் பெட்டி . |
| வெற்றிலைத்தோட்டம் | வெற்றிலைக்கொடி பயிர்செய்யும் தோட்டம் . |
| வெற்றிலைப்பட்டி | காண்க : வெற்றிலைச்சுருள் . |
| வெற்றிலைப்படலிகை | வெற்றிலை வைக்குங் கூடை . |
| வெற்றிலைப்பெட்டி | வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்குஞ் சிறுபெட்டி . |
| வெற்றிலைப்பை | வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்கும் பை . |
| வெற்றிலைபாக்கு | தாம்பூலம் . |
| வெற்றிலைவைத்தல் | தாம்பூலம் வைத்துத் திருமணம் முதலியவற்றுக்கு உறவினர் நண்பர் முதலியோரை அழைத்தல் . |
| வெற்றிவாகை | போர் வென்றோர் சூடும் மாலை . |
| வெற்றுடல் | பிணம் ; வெறிதாய உடம்பு . |
| வெற்றுரை | பொருளற்றசொல் . |
| வெற்றெனத்தொடுத்தல் | நூற்குற்றம் பத்தனுள் ஒன்றான பயனில் சொற்றொடர்படக் கூறுவது . |
| வெற்றெனல் | வெறுமையாதற்குறிப்பு . |
| வெற்றொழிப்பு | அணிவகை . |
| வெற்றோலை | எழுதப்படாத ஓலை ; மகளிரணியும் பனையோலைச் சுருளால் ஆன காதணி . |
| வெறி | பயித்தியம் ; மதம் ; சினம் ; கலக்கம் ; ஒழுங்கு ; வட்டம் ; கள் ; குடிமயக்கம் ; விரைவு ; மணம் ; காண்க : வெறியாட்டு ; வெறிப்பாட்டு ; மூர்க்கத்தனம் ; பேய் ; தெய்வம் ; ஆடு ; பேதமை ; அச்சம் ; நோய் ; ஆள்களின்றி வெறுமையாகை . |
| வெறிக்கப்பார்த்தல் | இமையாது வெகுண்டு நோக்குதல் . |
| வெறிக்களம் | வெறியாட்டு ஆடும் களம் . |
| வெறிக்கூத்து | வேலனாடல் ; களியாட்டம் . |
| வெறிகொள்ளுதல் | மயக்கங்கொள்ளுதல் ; பயித்தியங் கொள்ளுதல் ; கடுமையாதல் . |
| வெறிகோள் | காண்க : வெறியாட்டு , வெறிக்கூத்து . |
| வெறிச்சு | ஆள்களின்றி வெறுமையாகை . |
| வெறிச்செனல் | ஆள்களின்றி வெறுமையாதற் குறிப்பு . |
| வெறித்தல் | குடியால் மயங்குதல் ; பயித்தியம் பிடித்தல் ; மதங்கொள்ளுதல் ; திகைத்தல் ; கடுமையாதல் ; வெருவுதல் ; விலங்கு முதலியன வெருளுதல் ; ஆவலோடு பார்த்தல் ; விறைத்து நிற்றல் ; ஆள்களின்றி வெறுமையாதல் ; வானம்தெளிதல் . |
| வெறிதல் | செறிதல் . |
| வெறிது | அறிவின்மை ; ஒன்றுமின்மை ; பயனின்மை . |
| வெறிநாய் | பைத்தியம் பிடித்த நாய் . |
| வெறிநாற்றம் | புணர்ச்சிக்குப்பின் பிறக்கும் நாற்றம் . |
| வெறிப்பாட்டு | வெறியாட்டில் நிகழும் பாடல் . |
| வெறிப்பு | மதுமயக்கம் ; ஏக்கறவு ; அச்சம் ; கண்கூச்சம் ; பஞ்சம் . |
| வெறிபிடித்தல் | காண்க : வெறிகொள்ளுதல் . |
| வெறிமலர் | மணமுள்ள பூ ; தெய்வத்துக்குரிய பூ . |
| வெறியயர்தல் | வெறியாட்டுதல் . |
| வெறியன் | பைத்தியக்காரன் ; குடிவெறியுள்ளவன் ; கடுமையானவன் ; யாதுமற்றவன் . |
| வெறியாட்டாளன் | வெறியாடல் புரியும் வேலன் . |
| வெறியாட்டு | வேலன் ஆடுதல் ; களியாட்டம் . |
| வெறியாடல் | வேலன் ஆடுதல் ; களியாட்டம் . |
| வெறியாள் | காண்க : வெறியாட்டாளன் . |
| வெறியெடுத்தல் | வெறியாட்டு நிகழ்த்துதல் . |
| வெறியோடுதல் | ஒளிமிகுதியாற் கண்வெறித்துப் போதல் ; ஆற்றாமையுறுதல் . |
| வெறுக்கை | அருவருப்பு ; வெறுப்பு ; மிகுதி ; செல்வம் ; பொன் ; வாழ்வின் ஆதாரமாயுள்ளது ; கையுறை ; கனவு . |
| வெறுக்கைக்கிழவன் | செல்வத்துக்குரிய குபேரன் . |
| வெறுங்காவல் | வேலை வாங்காமல் அடைத்து வைத்திருக்கும் சிறை . |
| வெறுங்கை | வறுமை . |
| வெறுங்கோது | பயனற்றது ; ஒன்றுக்கும் உதவாதவர் . |
| வெறுஞ்சோறு | கறிவகையில்லாத அன்னம் . |
| வெறுத்தகுதல் | செறிதல் . |
| வெறுத்தல் | அருவருத்தல் ; பகைத்தல் ; சினத்தல் ; விரும்பாதிருத்தல் ; பற்றுவிடுதல் ; மிகுதல் ; துன்புறுதல் . |
| வெறுத்தார் | வெறுப்புற்றவர் ; பற்றற்றோர் . |
| வெறுத்திசை | யாப்பின் ஓசைக்குற்றவகை . |
| வெறுத்திசைப்பு | யாப்பின் ஓசைக்குற்றவகை . |
| வெறுந்தரை | விரிப்பு முதலியன இல்லாத தரை ; கட்டாந்தரை ; பயனில்லாப்பொருள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1002 | 1003 | 1004 | 1005 | 1006 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெற்றிமுரசு முதல் - வெறுந்தரை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வெறியாட்டு, வெற்றிலை, முதலியன, ஆள்களின்றி, களியாட்டம், வேலன், பாக்கு, செறிதல், கடுமையாதல், வெறியாட்டாளன், வெறியாடல், யாப்பின், ஆடுதல், வெறிகொள்ளுதல், ஓசைக்குற்றவகை, வெறிக்கூத்து, வெற்றிலைச்சுருள், பயித்தியம், தாம்பூலம், வெறிப்பாட்டு, அச்சம், வெறுமையாகை, வெற்றிலைத்தோட்டம், சுண்ணாம்பு

