தமிழ் - தமிழ் அகரமுதலி - வேதனம் முதல் - வேயாமாடம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வேதனம் | அறிவு ; வேதம் ; உணர்ச்சி ; வேதனை ; பொன் ; துளைத்தல் ; கூலி ; கூலியாகக் கொடுக்கக்கூடிய சம்பளம் . |
| வேதனை | வருத்தம் ; நோய் ; உணர்ச்சி ; நுகர்ச்சி ; காண்க : வேதநீயம் . |
| வேதா | கடவுள் ; பிரமன் ; சூரியன் . |
| வேதாகமம் | வேதமும் ஆகமமும் ; விவிலியநூல் . |
| வேதாங்கம் | சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தசு , சோதிடம் என அறுவகைப் பட்ட வேதப்பொருளை உணர்தற்குரிய கருவி . |
| வேதாத்தியயனம் | வேதம் ஓதுதல் . |
| வேதாதி | வேதத் தொடக்கத்திலுள்ள பிரணவம் . |
| வேதாதிவண்ணன் | ஓங்கார வடிவினனாகிய கடவுள் . |
| வேதாந்தம் | உபநிடதம் ; வேதாந்த மீமாஞ்சை மதம் ; வேதமுடிவு ; காண்க : அத்துவைதம் . |
| வேதாந்தன் | கடவுள் ; அருகன் . |
| வேதாந்தி | வேதாந்தக் கொள்கையினன் ; உலகப் பற்றற்றவர் ; அத்துவைதி ; நஞ்சீயர் . |
| வேதார்த்தன் | வேதத்திற்குப் பொருளாகவுள்ள கடவுள் . |
| வேதாரணியம் | திருமறைக்காடு . |
| வேதாளம் | பேய்வகை ; பிசாசு . |
| வேதாளி | காளி . |
| வேதாளிகர் | அரசரைப் புகழ்ந்து பாடுவோர் . |
| வேதாளியர் | அரசரைப் புகழ்ந்து பாடுவோர் . |
| வேதி | அறிந்தவன் ; பிரமன் ; பண்டிதன் ; மணம் முதலிய சடங்கு நிகழ்த்தும் மேடை ; திண்ணை ; மதில் ; காலுள்ள பீடம் ; ஓமகுண்டம் ; கேட்டைநாள் ; தாழ்ந்தவற்றை உயர்பொருளாக மாற்றுகை ; ஆயுதம் . |
| வேதிகை | திண்ணை ; மணமேடை ; காலுள்ள பீடம் ; பலிபீடம் ; பூசைமேடை ; பலகை ; தெரு ; வேறுபடுத்துகை ; கேடகம் ; அம்பு . |
| வேதித்தல் | வேறுபடுத்துதல் ; தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றுதல் ; பாகையுண்டாக்குதல் ; நலிதல் ; தீற்றுதல் . |
| வேதித்தார் | பகைவர் . |
| வேதிதம் | துளைத்தல் ; துளையுடைப்பொருள் . |
| வேதியன் | பார்ப்பான் ; பிரமன் ; வேதத்தினால் அறியக்கூடிய கடவுள் ; சீனக்காரம் . |
| வேதினம் | ஈர்வாள் , கருக்கரிவாள் . |
| வேது | வெம்மை ; சூடான ஒற்றடம் ; காரமருந்து ; வேறுபாடு ; வேதனை . |
| வேதுகொள்ளுதல் | ஆவி , புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல் ; ஒற்றடங் கொடுத்தல் ; நீராவியால் உடலை வேர்க்கச்செய்தல் . |
| வேதுசெய்தல் | ஆவி , புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல் ; ஒற்றடங் கொடுத்தல் ; நீராவியால் உடலை வேர்க்கச்செய்தல் . |
| வேதுபிடித்தல் | ஆவி , புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல் ; ஒற்றடங் கொடுத்தல் ; நீராவியால் உடலை வேர்க்கச்செய்தல் . |
| வேதை | துன்பம் ; இரேகை ; இரசவாதம் ; துளைத்தல் ; கலியாணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று . |
| வேதைசிந்தூரம் | உலோகங்களைப் பொன்னாக்கும் மருந்து . |
| வேந்தவை | காண்க : வேத்தவை . |
| வேந்தன் | எல்லா ஆற்றலும் பெற்ற அரசன் ; இந்திரன் ; சந்திரன் ; சூரியன் ; வியாழன் . |
| வேந்து | அரச பதவி ; ஆட்சி ; மன்னன் ; இந்திரன் . |
| வேந்துரு | ஏழாந் தலைமுறையில் தந்தைவழி முன்னோன் . |
| வேப்பநெய் | காண்க : வேப்பெண்ணெய் . |
| வேப்பலகு | வேப்பிலையின் ஈர்க்கு . |
| வேப்பெண்ணெய் | வேப்பங் கொட்டையினின்று எடுக்கும் நெய் . |
| வேபம் | அசைவு , புடைபெயர்ச்சி . |
| வேபனம் | நடுக்கம் ; அச்சம் . |
| வேபாக்கு | வேகுதல் . |
| வேபித்தல் | நடுங்குதல் . |
| வேம்பன் | வேப்பம்பூ மாலையை உடைய பாண்டியன் . |
| வேம்பனம் | கள் . |
| வேம்பாதல் | கசப்பாதல் ; வெறுப்புக்குரியதாதல் . |
| வேம்பின்தாரோன் | காண்க : வேம்பன் . |
| வேம்பு | வேப்பமரம் ; கசப்பு ; வெறுப்பு . |
| வேமம் | நெசவுத்தறி . |
| வேமா | நெசவுத்தறி . |
| வேமானியர் | விமானத்திற் செல்வோரான தேவர் . |
| வேய் | மூங்கில் ; மூங்கிற்கோல் ; உட்டுளைப்பொருள் ; புனர்பூசநாள் ; வேய்கை ; மாடம் : வினை ; குறளைச்சொல் ; யாழ் கவனஞ் செய்கை ; ஒற்றன் ; ஒற்றினைத் தெரிந்து கொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை . |
| வேய்க்கண் | மூங்கிற்கணு . |
| வேய்ங்குழல் | புல்லாங்குழல் . |
| வேய்த்தல் | ஏய்த்தல் ; ஒற்றரால் செய்தி அறிதல் . |
| வேய்தல் | சூடுதல் ; மூடுதல் ; மலர்தல் ; சூழ்தல் ; பதித்தல் ; பொருந்துதல் ; கூரையால் மூடப்பட்ட வீடு ; ஒற்று ; துளைபோடுதல் ; துளை . |
| வேய்ந்துணி | ஊதுகுழல் . |
| வேய்வனம் | திருநெல்வேலி . |
| வேய்வு | மூடுதல் ; ஏய்ப்பு . |
| வேய்வை | யாழ்நரம்புக் குற்றவகை . |
| வேயர் | ஒற்றர் ; சிறுமூங்கில் ; பார்ப்பனக் குடிவகை . |
| வேயல் | சிறுமூங்கில் . |
| வேயாமாடம் | நிலாமுற்றம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1006 | 1007 | 1008 | 1009 | 1010 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதனம் முதல் - வேயாமாடம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உடலை, கடவுள், காண்க, கொடுத்தல், முதலியவற்றால், வேர்க்கச்செய்தல், புகை, பிரமன், ஒற்றடங், வேதனை, துளைத்தல், நீராவியால், வெம்மைசெய்தல், வேம்பன், சிறுமூங்கில், மூடுதல், நெசவுத்தறி, வேப்பெண்ணெய், இந்திரன், பீடம், அரசரைப், சூரியன், உணர்ச்சி, புகழ்ந்து, பாடுவோர், காலுள்ள, திண்ணை, வேதம்

