தமிழ் - தமிழ் அகரமுதலி - வேண்டுமென்று முதல் - வேதன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வேண்டுமென்று | முழுமனத்தோடு ; பிடிவாதமாய் . |
| வேண்மாள் | வேளிர்குலப் பெண் . |
| வேண்மான் | வேளிர்குல மகன் . |
| வேண | வேண்டிய ; மிகுதியான ; போதுமான ; இன்றியமையாத . |
| வேணகை | சுற்றுமதில் . |
| வேணது | இன்றியமையாதது ; தேவையானது ; போதுமானது ; மிகுதியானது ; மனத்துத் தோன்றியது . |
| வேணளா | வேட்கைப்பெருக்கம் . |
| வேணாடு | செந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று . |
| வேணி | சடை ; பின்னிய மயிர் ; மரவேர் ; வசம்பு ; ஆறு ; நீர்ப்பெருக்கு ; தெரு ; சேரி ; வானம் ; வெளி . |
| வேணிகை | பின்னிய மயிர் . |
| வேணினர் | விரும்புபவர் . |
| வேணீர் | நீர்வேட்கை நீங்க உண்ணும் நீர் . |
| வேணு | மூங்கில் ; இசைக்குழல் ; புல்லாங்குழல் ; வில் ; தனுசு ராசி ; வாள் . |
| வேணுகம் | யானைத்தோட்டி . |
| வேணுகானம் | வேய்ங்குழல் இசை . |
| வேணுகோபாலன் | புல்லாங்குழல் ஊதும் கண்ணபிரான் . |
| வேணுசம் | மூங்கிலரிசி . |
| வேணுநாதன் | குழல் இசைப்போன் . |
| வேணுபலம் | காண்க : வேணுசம் . |
| வேணுபுரம் | சீகாழி . |
| வேத்தவை | அரசவை . |
| வேத்தன் | அறிந்தவன் ; அறியத்தக்கவன் . |
| வேத்தியம் | அறியத்தக்கது ; அடையாளம் . |
| வேத்தியல் | அரசர்க்காடுங் கூத்து ; வேந்தனது தன்மை ; காண்க : வேத்தியன்மலிபு . |
| வேத்தியன் | அறியத்தக்கவன் . |
| வேத்தியன்மண்டபம் | அரசனது அரசவை மண்டபம் . |
| வேத்தியன்மலிபு | வீரமிக்க மன்னனது மேம்பாட்டினை வீரர் சொல்லுதலைக் கூறும் புறத்துறை . |
| வேத்திரகரன் | பிரம்பைக் கையில்கொண்ட நந்திதேவன் . |
| வேத்திரத்தாள் | பிரப்பங்கிழங்கு . |
| வேத்திரதரன் | வாயில்காப்போன் ; கட்டியக்காரன் ; நந்திதேவன் . |
| வேத்திரப்படை | பிரம்பாகிய ஆயுதம் . |
| வேத்திரம் | பிரம்பு ; அம்பு ; இலந்தைமரம் . |
| வேத்திராசனம் | பிரப்பம்பாய் . |
| வேதகப்பொன் | புடமிட்ட பொன் . |
| வேதகம் | வேறுபடுத்துகை ; வேறுபாடு ; பகைமை ; இரண்டகம் ; புடமிடுகை ; புடமிட்ட பொன் ; இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம் ; சிறுதுகில் ; கருப்பூரம் ; தானியம் ; வெளிப்படுத்துகை . |
| வேதகன் | ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன் ; அறிவிப்பவன் . |
| வேதகீதன் | வேதத்தினாற் புகழ்ந்து பாடப்படுவோனாகிய கடவுள் . |
| வேதங்கம் | ஓர் ஆடைவகை . |
| வேதசம் | பிரம்புவகை ; நாணற்புல் ; பெரு விரலடி . |
| வேதசாரம் | வேதத்தின் சத்து ; நாணற்புல் ; உபநிடதம் . |
| வேதஞ்ஞன் | மறையை அறிந்தவன் . |
| வேதண்டம் | மலை ; கைலாயம் ; பொதியமலை ; யானை . |
| வேததத்துவம் | வேதத்தின் மெய்ப்பொருள் . |
| வேதநாதன் | வேதங்களுக்குத் தலைவனான கடவுள் . |
| வேதநாயகன் | வேதங்களுக்குத் தலைவனான கடவுள் . |
| வேதநாயகி | பார்வதி ; திருமகள் . |
| வேதநீயம் | இன்பதுன்பங்களை நுகர்விக்கும் வினைப்பயன் . |
| வேதநெறி | காண்க : வேதமார்க்கம் . |
| வேதப்பிரான் | காண்க : வேதநாயகன் . |
| வேதபாரகன் | வேதத்தை நன்கு கற்றவனான பார்ப்பனன் ; யூதவேதத்தை விளக்குபவன் . |
| வேதபாராயணம் | வேதங்களை ஓதல் . |
| வேதம் | இந்து சமயிகளுக்குரிய சுருதி ; சமய முதனூல் ; சமணாகமம் ; விவிலியநூல் ; சாத்திரம் ; மறை அறிவு ; ஆழம் ; விவரிக்கை ; செடிவகை . |
| வேதமார்க்கம் | வேதத்தில் சொல்லப்பட்ட மதம் . |
| வேதமுதல்வன் | கடவுள் ; பிரமன் . |
| வேதமுதல்வி | கலைமகள் ; மலைமகள் ; அலைமகள் . |
| வேதரஞ்சகன் | நான்முகன் . |
| வேதவனம் | காண்க : வேதாரணியம் . |
| வேதவாணன் | பார்ப்பனன் . |
| வேதவித்தகன் | வேதங்களை நன்கு அறிந்தவன் ; கடவுள் . |
| வேதவித்து | வேதங்களை நன்கு அறிந்தவன் ; கடவுள் . |
| வேதவிருத்தி | வேதமோதுதற்காக விடப்படும் இறையிலிநிலம் . |
| வேதவேத்தன் | வேதத்தினாலே அறியக் கூடிய கடவுள் . |
| வேதவேத்தியன் | வேதத்தினாலே அறியக் கூடிய கடவுள் . |
| வேதவேதாந்தன் | கடவுள் . |
| வேதன் | கடவுள் ; பிரமன் ; வியாழன் ; கடுக்காய் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1005 | 1006 | 1007 | 1008 | 1009 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேண்டுமென்று முதல் - வேதன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடவுள், காண்க, அறிந்தவன், நன்கு, வேதங்களை, வேதமார்க்கம், வேதநாயகன், பார்ப்பனன், தலைவனான, பிரமன், கூடிய, அறியக், வேதத்தினாலே, வேதங்களுக்குத், நாணற்புல், அறியத்தக்கவன், அரசவை, வேணுசம், புல்லாங்குழல், வேத்தியன்மலிபு, நந்திதேவன், மயிர், பின்னிய, பொன், புடமிட்ட, வேதத்தின்

