முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வெளிப்படுதல் முதல் - வெற்றிமாலை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வெளிப்படுதல் முதல் - வெற்றிமாலை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வெளிப்படுதல் | வெளியே வருதல் ; வெளிப்படத்தோற்றுதல் ; பொருள் விளக்கமாதல் ; பதிப்பிக்கப்படுதல் . |
| வெளிப்படை | தெளிவானது ; மேற்பார்வையில் தோன்றுவது ; அணிவகை . |
| வெளிப்படைச்சொல் | இயல்பாகப் பொருள் விளங்கி நிற்கும் மொழி . |
| வெளிப்படையுவமம் | குறிப்பால் அன்றித் தெளிவாக அறியப்படும் உவமம் . |
| வெளிப்பயன் | வெளிப்படத் தெரியக்கூடிய இலாபம் ; தெளிவாய் அறியப்படும் பொருள் . |
| வெளிப்பாடு | வெளிப்படை ; காணிக்கை . |
| வெளிப்பு | வெளியிடம் ; வெளிப்புறம் ; தெளிவு . |
| வெளிப்பேச்சு | நாட்டுச்செய்தி ; உண்மையற்ற பேச்சு . |
| வெளிமடை | கோயில் புறம்பேயுள்ள சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் பலி ; குளம் முதலியவற்றிலிருந்து வெளியே நீர் செல்லும் மதகு . |
| வெளிமயக்கு | வெளித்தோற்றத்தால் உண்டாம் மதிமயக்கம் . |
| வெளிமான் | மான்வகை ; பெண்மான் ; சங்ககாலத்துத் தலைவருள் ஒருவன் . |
| வெளிமுகடு | வானத்தின் புறவெல்லை . |
| வெளிமுற்றம் | வீட்டின் வெளிப்புறத்துள்ள திறந்தவெளி . |
| வெளியடை | திரைச்சீலை . |
| வெளியரங்கம் | தெளிவானது . |
| வெளியாக்குதல் | காண்க : வெளிப்படுத்துதல் . |
| வெளியாடை | தோரணம் ; புறவுடை . |
| வெளியாதல் | காண்க : வெளிப்படுதல் . |
| வெளியார் | அறிவிலார் ; புறம்பானவர் . |
| வெளியிடுதல் | காண்க : வெளிப்படுத்துதல் ; வெளிவாங்குதல் . |
| வெளியீடு | நூல் முதலியவற்றின் பதிப்பு ; நூற்பதிப்பு . |
| வெளியேற்றுதல் | வெளியே போகச்செய்தல் ; நாடு கடத்துதல் ; காண்க : வெளிப்படுத்துதல் . |
| வெளியேறுதல் | வெளியே போதல் ; வீட்டை விட்டு ஓடிப்போதல் ; வெளியூருக்குப் போதல் ; கேட்டினின்றும் தப்பித்துவருதல் . |
| வெளிர்த்துக்காட்டுதல் | மழை நின்ற பின் வானம் வெளுத்தல் ; வெளிறின நிறமாகத் தோன்றுதல் . |
| வெளில் | யானைகட்டுந் தூண் ; தயிர்கடையும் மத்து ; கம்பம் ; அணில் . |
| வெளிவருதல் | பலராலும் அறியப்படுதல் ; பலருக்குங் கிடைக்குமாறு பதிப்பிக்கப்படுதல் . |
| வெளிவாங்குதல் | மழை பெய்தபின் மேகங்கலைந்து வெளிச்சமாதல் . |
| வெளிவாசல் | கட்டடத்தின் வெளியிலிருக்கும் வாசல் ; வீட்டின் முகப்பிலுள்ள முற்றம் . |
| வெளிவாய்ப்படுகை | ஆறு குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம் . |
| வெளிவிடுதல் | வெளிப்படுத்துதல் ; பலரறியச் செய்தல் . |
| வெளிவேடம் | தன்னுருவைப் பிறர் அறியாதபடி மறைக்கை ; வெளித்தோற்றம் ; கபடம் . |
| வெளிற்றுப்பனை | வயிரமற்ற பனை . |
| வெளிற்றுமரம் | காண்க : அலிமரம் ; மரவகை . |
| வெளிற்றுரை | பயனில் சொல் . |
| வெளிறன் | அறிவில்லாதவன் ; கீழ்மகன் . |
| வெளிறு | வெண்மை ; நிறக்கேடு ; வெளிச்சம் ; வெளிப்படுகை ; பயனின்மை ; அறியாமை ; இளமை ; திண்மையற்றது ; குற்றம் ; வயிரமின்மை ; மரவகை ; காண்க : அலிமரம் . |
| வெளிறுதல் | வெண்மையாதல் ; நிறங்கெடுதல் . |
| வெளுத்தல் | காண்க : வெளிறுதல் ; உண்மைநிலை வெளிப்படுதல் ; ஆடை வெளுத்தல் ; புடைத்தல் . |
| வெளுத்துவாங்குதல் | மிக நன்றாகச் செய்தல் ; நிறம் கெடுதல் . |
| வெளுப்பு | வெண்மை ; ஆடைவெளுத்தல் ; நோயால் உடல் வெளிறுகை ; புடைக்கை . |
| வெளேரெனல் | வெண்மையாதற்குறிப்பு ; நிறம் வெளிறுதற்குறிப்பு . |
| வெற்பன் | குறிஞ்சிநிலத் தலைவன் . |
| வெற்பு | மலை ; பக்கமலை . |
| வெற்றம் | வெற்றி ; வீரம் . |
| வெற்றர் | ஏழைகள் ; பயனற்றார் . |
| வெற்றரையவர் | சமணர் . |
| வெற்றல் | வெற்றி . |
| வெற்றவெறிது | பயன் சிறிதுமின்மை . |
| வெற்றாள் | தனியாயிருப்பவர் ; வேலை இல்லாத ஆள் ; பயனற்றவர் . |
| வெற்றி | வென்றி ; வாகைசூடுதல் . |
| வெற்றிக்கொடி | வெற்றியைக் குறிக்க எடுக்கும் கொடி . |
| வெற்றிடம் | வெறுமையான இடம் . |
| வெற்றித்தண்டை | வீரத்துக்கு அறிகுறியாகக் காலில் அணியும் தண்டை . |
| வெற்றிப்பாடு | வெற்றியாற் பெற்ற பெருமை . |
| வெற்றிப்புகழ் | வெற்றியால் உண்டாம் கீர்த்தி ; போரிலடைந்த வெற்றியைப் புகழ்தல் . |
| வெற்றிப்பூ | வெற்றிக்கறிகுறியாக அணியும் பூ . |
| வெற்றிமகள் | வீரத்திருமகள் . |
| வெற்றிமடந்தை | வீரத்திருமகள் . |
| வெற்றிமாலை | போர் வென்றோர் சூடும் மாலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1001 | 1002 | 1003 | 1004 | 1005 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெளிப்படுதல் முதல் - வெற்றிமாலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வெளியே, வெளிப்படுத்துதல், வெற்றி, வெளிப்படுதல், பொருள், வெளுத்தல், மரவகை, அலிமரம், வெளிறுதல், வீரத்திருமகள், அணியும், நிறம், செய்தல், வெண்மை, போதல், தெளிவானது, வெளிப்படை, பதிப்பிக்கப்படுதல், அறியப்படும், உண்டாம், சொல், வீட்டின், வெளிவாங்குதல்

