முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வெள்ளைப்புத்தி முதல் - வெளிப்படுத்துதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வெள்ளைப்புத்தி முதல் - வெளிப்படுத்துதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வெள்ளைப்புத்தி | அறியாமை ; அறிவுக்குறைவு . |
| வெள்ளைப்பூச்சு | வெள்ளையடிக்கை ; தவறு முதலியவற்றை மழுப்பி மறைக்கை . |
| வெள்ளைப்பூண்டு | ஒரு பூண்டுவகை . |
| வெள்ளைப்பேச்சு | வெளிப்படையான சொல் ; கபடமில்லாத பேச்சு . |
| வெள்ளைபூசுதல் | சுண்ணாம்படித்தல் ; தவறு முதலியவற்றை மழுப்புதல் ; வீட்டுக்கு மெருகு சுண்ணாம்பு பூசுதல் . |
| வெள்ளைபூணுதல் | வெள்ளையுடை தரித்தல் . |
| வெள்ளைமகன் | மூடன் . |
| வெள்ளைமயிர் | நரைமயிர் . |
| வெள்ளைமழை | குறைந்த மழை . |
| வெள்ளைமனம் | கபடமற்ற தூயமனம் . |
| வெள்ளைமனிதன் | காண்க : வெள்ளைக்காரன் ; கபடமற்றவன் . |
| வெள்ளைமிளகு | மிளகுவகை ; மரவகை . |
| வெள்ளைமூர்த்தி | தூயவடிவன் ; பலதேவன் . |
| வெள்ளைமெய்யாள் | கலைமகள் . |
| வெள்ளைமேனியாள் | கலைமகள் . |
| வெள்ளைமை | அறிவின்மை . |
| வெள்ளையடித்தல் | சுண்ணாம்படித்தல் ; தவறு முதலியவற்றை மழுப்புதல் . |
| வெள்ளையப்பன் | வெள்ளிநாணயம் ; செல்வம் . |
| வெள்ளையன் | வெண்ணிறத்தினன் ; காண்க : வெள்ளைக்காரன் ; வெள்ளையப்பன் . |
| வெள்ளையாடை | கைம்பெண்டிர் உடுக்கும் வெள்ளைப்புடைவை ; வெண்மையான ஆடை . |
| வெள்ளையானை | வெண்ணிறமுள்ள யானை ; கீழ்த்திசையானை ; காண்க : ஐராவதம் ; அதிகச்செலவு பிடிக்கக்கூடியது . |
| வெள்ளையானையூர்தி | இந்திரன் ; ஐயனார் . |
| வெள்ளையும்சள்ளையும் | வெண்மையான ஆடை . |
| வெள்ளையுருவாள் | காண்க : வெள்ளைமேனியாள் . |
| வெள்ளைவாயன் | இரகசியத்தை மறைக்க முடியாது வெளியிடுபவன் . |
| வெள்ளைவாரணன் | இந்திரன் . |
| வெள்ளைவிழி | கண்ணில் வெண்மையாயுள்ள பாகம் . |
| வெள்ளைவெளுத்தல் | ஆடையழுக் ககற்றல் . |
| வெள்ளைவெளேரெனல் | மிகுவெள்ளைக்குறிப்பு . |
| வெள்ளொக்கலர் | குற்றமரபினர் ; செல்வந்தர்களை உறவினர்களாக உடையவர் ; மாசற்ற சுற்றத்தினை உடையவர் . |
| வெள்ளொத்தாழிசை | வெண்பாவின் இனம் . |
| வெள்ளோசை | வெண்பாவுக்குரிய ஓசை ; பாடும் போது தோன்றும் வெடித்த குரலாகிய இசைக்குற்றம் ; பாடுகையில் தோன்றும் வெடித்தகுரல் . |
| வெள்ளோட்டம் | ஆய்வுக்காக முதன்முதலாகத்தேர் , மரக்கலம் முதலியவற்றை ஓடச்செய்தல் ; ஒன்றனைப் பயன்படுத்துதற்குமுன் செய்துபார்க்கும் ஆய்வு ; ஒருவன் நோக்கத்தை அறிய முன்னால் செய்யுல் செயல் . |
| வெள்ளோலை | எழுதப்படாத ஓலை ; முத்திரையிடப்படாத ஓலை . |
| வெளி | புறம் ; வெளிப்பக்கம் ; வானம் ; இடைவெளி ; வெளிப்படை ; வெட்டவெளி ; மைதானம் ; தூய்மை ; வெண்பா ; மேற்பார்வைக்குக் காணும் காட்சி . |
| வெளிக்கட்டு | வீட்டின் முன்பாகம் . |
| வெளிக்காட்சி | காண்க : வெளித்தோற்றம் . |
| வெளிக்குப்போதல் | மலங்கழித்தல் . |
| வெளிக்குவருதல் | வெளிப்படையாதல் ; மலங்கழிக்க உணர்வு உண்டாதல் . |
| வெளிகொடுவெளியே | வெளிப்படையாய் . |
| வெளிச்சங்காட்டுதல் | வழிதெரிய விளக்கின் மூலம் ஒளி காட்டுதல் ; வெளிக்குப் பகட்டாய்த் தோன்றுதல் ; ஒளி செய்தல் ; பகட்டுச் சொல்லால் மழுப்புதல் ; ஒளியால் கப்பல் முதலியவற்றுக்கு அடையாளம் தெரிவித்தல் . |
| வெளிச்சம் | ஒளி ; விளக்கு ; தெளிவு ; பகட்டு . |
| வெளிச்சம்போடுதல் | வாணிகப் பொருள்களை ஒளிபெறச்செய்தல் ; விளக்கேற்றுதல் ; உள்ளதை மறைத்துப் பொய்த்தோற்றம் காட்டுதல் . |
| வெளிச்சமாதல் | விடிதல் ; விளங்குதல் . |
| வெளிச்சாடை | வெளிப்பகட்டு ; மேற்பார்வைக்குக் காணும் காட்சி . |
| வெளிச்செண்ணெய் | தேங்காயெண்ணெய் . |
| வெளிசம் | தூண்டில் . |
| வெளித்தல் | வெளிப்படையாதல் ; சூழ்ச்சி வெளியாதல் ; விடிதல் ; தெளிவாதல் ; வெண்ணிறங் கொள்ளுதல் ; பயனிலதாதல் ; வெறிதாதல் . |
| வெளித்தோற்றம் | மேற்பார்வைக்குக் காணுங்காட்சி ; உற்பத்தி ; நேர்காட்சி ; உருவெளித்தோற்றம் . |
| வெளிதிறத்தல் | வெளியிடுதல் ; வெளிப்படையாதல் ; காண்க : வெளிர்த்துக்காட்டுதல் . |
| வெளிது | வெண்மையானது ; வெள்ளிய ஆடை . |
| வெளிநாட்டம் | தீநெறி ஒழுகுகை . |
| வெளிநாடு | அயல்நாடு ; வெளியுலகம் . |
| வெளிநாடுதல் | வெளியிற் காணப்படுதல் ; தீநெறியில் ஒழுகுதல் . |
| வெளிப்பகட்டு | காண்க : வெளிமயக்கு . |
| வெளிப்படுத்தல் | பலர் அறியத் தெரிவித்தல் ; காட்டுதல் ; வெளியே வரச்செய்தல் ; புத்தகம் பதிப்பித்தல் ; வெளியே போகச்செய்தல் . |
| வெளிப்படுத்துதல் | பலர் அறியத் தெரிவித்தல் ; காட்டுதல் ; வெளியே வரச்செய்தல் ; புத்தகம் பதிப்பித்தல் ; வெளியே போகச்செய்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1000 | 1001 | 1002 | 1003 | 1004 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெள்ளைப்புத்தி முதல் - வெளிப்படுத்துதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, காட்டுதல், முதலியவற்றை, வெளியே, வெளிப்படையாதல், தெரிவித்தல், மேற்பார்வைக்குக், மழுப்புதல், தவறு, வெளிப்பகட்டு, விடிதல், சுண்ணாம்படித்தல், பலர், அறியத், புத்தகம், வரச்செய்தல், போகச்செய்தல், பதிப்பித்தல், வெள்ளைக்காரன், இந்திரன், வெண்மையான, வெள்ளையப்பன், வெள்ளைமேனியாள், உடையவர், தோன்றும், வெளித்தோற்றம், காட்சி, காணும், சொல், கலைமகள்

