நற்றிணை - 39. குறிஞ்சி

சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின் திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென; காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் |
5 |
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின் கண்ணே கதவ? அல்ல; நண்ணார் அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு, ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன் பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் |
10 |
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே. |
நங்காய்! யான் நின்னைத் தழீஇக் கொண்டு சில கூறின் அவற்றை எதிரேற்றுக் கொள்ளாயாய் நின் அழகிய முகம் இறைஞ்சி நின்று கண்புதைத்து நாணுகின்றனை; விரைவாகக் காமமானது கைகடந்து மிகுமாயின் அதனை யான் தாங்கியிருத்தல் எளியதொரு காரியமாமோ; புலி நடுங்குமாறு அதன் வளைந்த கரிய நிற முள்ள வரிகளையுடைய பெரிய முதுகிலே குத்தி வீழ்த்தி வளையாட்டயர்ந்த; புலவு நாற்றத்தையுடைய களிற்றின் இனிய நுனியையுடைய மருப்புப்போல; கடைமணி சிவந்த நின்கண்கள் தாமோ சினவா நின்றன; பகைவர் அரண்மிக்க மதிலிடத்திற் போந்தாராகவும்; உடனே மேல்வீழ்ந்து வென்று அவரது முரசைக் கைக்கொண்டு அவராற் பாதுகாக்கப்படுகின்ற அரணையும் கைப்பற்றிய போரிற் கொல்லவல்ல பாண்டியனது; பெரிய புகழையுடைய மதுரையை யொத்த நின்னுடைய தொய்யிலெழுதப்பட்ட கரும்பையுடைய தோள்களும் என்னை வருத்துதலை யுடையன காண்
!;
இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது. - மருதன் இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், கொண்டு, யான், பெரிய, அரண், சிவந்த, இறைஞ்சி, புலி, புலவு