நற்றிணை - 373. குறிஞ்சி

முன்றிற் பலவின் படு சுளை மரீஇ, புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை மை படு மால் வரை பாடினள் கொடிச்சி, ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு சூருடைச் சிலம்பின் அருவி ஆடி, |
5 |
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் பா அமை இதணம் ஏறி, பாசினம் வணர் குரற் சிறு தினை கடிய, புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே? |
தோழீ! இன்று அன்னை நம்மை நோக்கி ஐயப்பாடெய்தி இல்வயிற் செறிப்பக் கருதியதனால் மெல்லிய தலையையுடைய மந்தி இல்லின்முன்புள்ள பலாமரத்திலிருந்து அதன் பழத்தைக் கீண்டு நிறைந்த சுளைகளை யுண்டு அவற்றின் வித்தினைக் கீழே யுதிர்ப்ப; அயலிலே நின்ற கொடிச்சி தன் தந்தையினது மேகந்தவழும் கரிய மலைவளம் பாடி வெளிய ஐவன நெல்லைக் குத்துகின்ற மலைநாடனாகிய நம் காதலனொடு; அச்சஞ் செய்யும் மலைப்பக்கத்திலுள்ள அருவியாடிக் கரிய நிறத்தையுடைய அரும்பு மலர்ந்த சோதிடம் வல்லார் போன்ற வேங்கை மரத்தின்மேலே கட்டிய; பரப்பமைந்த பரண்மீது ஏறி; வளைந்த கதிர்களையுடைய சிறிய தினைப்புனத்தின்கண்ணே வருகின்ற பசிய கிளியினத்தைக் கடிந்து போக்குமாறு; இன்றிருந்தது போல நாளையும் நமக்குப் பொருந்துவதாமோ? அங்ஙனம் பொருந்தாது போலும்;
செறிப்பு அறிவுறீஇயது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 371 | 372 | 373 | 374 | 375 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கரிய, நாளையும், அரும்பு, கொடிச்சி, மந்தி