நற்றிணை - 226. பாலை

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்; உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப் பொன்னும் கொள்ளார், மன்னர்- நன்னுதல்!- நாம் தம் உண்மையின் உளமே; அதனால் தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, |
5 |
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய, சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும் இன்ன நிலைமைத்து என்ப; என்னோரும் அறிப, இவ் உலகத்தானே. |
அழகிய நுதலையுடையாய்! இவ்¢வுலகத்து மாந்தர் மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருந்தை முற்றுங் கொள்வார் அல்லர்; மற்றும் தம் வலிமை முற்றும் கெடுமாறு உயர்ந்த தவத்தைச் செய்யார்; அரசர் தம்முடைய குடிகளின் செல்வமெல்லாம் குறைபடும் வண்ணம் அவரிடத்து இறை வாங்குபவரல்லர்; அவற்றை உணர்ந்துவைத்தும் தாம் வருத்தம் மேற்கொண்டு வெயில் நிலைகொள்ள நீண்ட சுரத்துநெறி பின்னே ஒழிய எம்மைப் பிரிந்து சென்றவராகிய நங்காதலர்; தாம் எம்மைப் பிரியாதுறைதலின் நாம் உயிரோடிராநின்றோம்; தாம் ஈட்ட விரும்பும் பொருள் காரணமாக எம்மைப் பிரிவராயின் அதனாலே வருவது எமது இறந்துபாடு என்பதனைத் திண்ணமாக அறிந்தவரல்லர்; எக்காலத்தும் இதுவே ஆடவர் இயற்கை என்பர் சான்றோர்; இதனை யாவரும் அறிந்திருப்பர் கண்டாய்;
பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. - கணி புன்குன்றனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 224 | 225 | 226 | 227 | 228 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தாம், எம்மைப், நாம், ஒழிய, செய்யார், கொள்ளார், மாந்தர், மரம்