முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 306. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 306. நெய்தல் - தலைவி கூற்று
(காப்பு மிகுதியால் வருந்திய தலைவி, வரையாது வந்தொழுகும்தலைவனிடத்துச் சிறிது வேறுபாடுடையளாகியும் அவ்வேறுபாடுஅவனைக் கண்டக்கால் மறைவதைத் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவாளாய்க் கூறியது.)
மெல்லிய இனிய மேவரு தகுந இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன் காமர் மாஅத்துத் தாதமர் பூவின் வண்டுவீழ் பயருங் கானல் |
5 |
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே. | |
- அம்மூவனார். |
முடிபு: நெஞ்சே, மொழியாமெனச் சொல்லினும் சேர்ப்பனைக்கண்டபின், நீ அவை மறத்தியோ?
கருத்து: தலைவனைக் காணின் எல்லாத் துன்பங்களையும் மறந்துவிடுகின்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 304 | 305 | 306 | 307 | 308 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 306. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, நெஞ்சே, மறத்தியோ, எட்டுத்தொகை, சங்க