முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 12. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 12. பாலை - தலைவி கூற்று
(‘தலைவி தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையிலளாயினாள்’ என்று கவலை உற்ற தோழி கேட்கும்படி, ‘‘தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்தே யான் வருந்துகின்றேன் என்பதை உணராமல் இவ்வூர், பிரிவை ஆற்றேனாயினேன் என்று வேறொன்றைக் கூறாநின்றது; இஃது என்ன பேதைமை!’’ என்று தலைவி சொல்லியது.)
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் கவலைத் தென்பவர் தேர் சென்ற ஆறே அதுமற் றவலங் கொள்ளாது |
5 |
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. | |
- ஓதலாந்தையார். |
முடிபு: அவர் சென்ற ஆறு கவலைத்து என்ப; ஊர் அவலங் கொள்ளாது கழறும்.
கருத்து:தலைவர் சென்ற வழி மிக்க கொடுமையை உடையது; அதனைத் தோழி நினைந்திலள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 12. பாலை - தலைவி கூற்று, உடைய, இலக்கியங்கள், தலைவி, சென்ற, பாலை, குறுந்தொகை, கூற்று, தலைவர், உடையது, கொள்ளாது, பிரிவை, எட்டுத்தொகை, சங்க, தோழி, கொடுமையை