அகநானூறு - 55 . பாலை
| காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின், ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை, உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின், விளி முறை அறியா வேய் கரி கானம், வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் |
5 |
| கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ, வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு கண்படை பெறேன், கனவ ஒண் படைக் கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் |
10 |
| பொருது புண் நாணிய சேரலாதன் அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென, இன்னா இன் உரை கேட்ட சான்றோர் அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர், பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் |
15 |
| காதல் வேண்டி, எற் துறந்து போதல்செல்லா என் உயிரொடு புலந்தே. |
புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -

