அகநானூறு - 361. பாலை
|
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண், மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன, திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண், அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், |
5 |
| கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய், பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே! கரியாப் பூவின் பெரியோர் ஆர, |
10 |
| அழல் எழு தித்தியம் அடுத்த யாமை நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு, உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று, சில் மொழி, அரிவை தோளே பல் மலை வெவ் அறை மருங்கின் வியன் சுரம், |
15 |
| எவ்வம் கூர, இறந்தனம், யாமே. |
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 359 | 360 | 361 | 362 | 363 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மொழி, பூவின்

