அகநானூறு - 233. பாலை
| அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின் அலர் முலை நனைய, அழாஅல் தோழி! எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென, ஊன் இல் யானை உயங்கும் வேனில், |
5 |
| மறப் படைக் குதிரை, மாறா மைந்தின், துறக்கம் எய்திய தொய்யா நல் இசை முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல் பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல் கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு, |
10 |
| குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ, பொருள்வயின் நீடலோஇலர் நின் இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே. |
15 |
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 231 | 232 | 233 | 234 | 235 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, நின்

