நீலகிரி - தமிழக மாவட்டங்கள்
யூகலிப்டஸ் எண்ணெய்:
இம்மாவட்டத்தில் அதிகமாக வளர்ந்துள்ள இம்மரத்திலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் 7 இலட்சம் ரூபாய்க்கு கூட்டுறவு சங்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஊசி தயாரிக்கும் தொழிற்சாலை:
உதகையிலுள்ள கேத்தியில் தையல் ஊசிகள் கிராமபோன் ஊசிகள், கொக்கிகள் போன்ற 300 விதமான ஊசிகள் செய்யப்பட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வெடி மருந்து தொழில்:
மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை கூனுரிலிருந்து 4வது மையில் உள்ள அரவங்காட்டில் அமைந்துள்ளது. இங்கு அக்கினி திராவகம், கந்தக திராவகம், துப்பாக்கி மருந்து போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
கச்சா பிலிம் தொழிற்சாலை:
1967ஆம் ஆண்டில் 14 கோடி முதலீட்டில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் உற்பத்தி நிறுவனம், மத்திய அரசால் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 50,000 ச.மீ. பிலிம் சுருள் தயாராகிறது. 2000 மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
கூட்டுறவு பால் உற்பத்தி:
1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு 14,679 லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் 6890 கால்நடை வளர்ப்போர் பயனடைந்து வருகின்றனர். தீவிர பால் பெருக்குத் திட்டத்தின்படி 59,000 லிட்டராக உயர்ந்துள்ளது.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு உற்பத்தியில் 6 கோடி ரூபாய்க்கும் மேலாக விற்பனை நடந்து வருகிறது. சுமார் 75 இலட்சம் ரூபாய்க்கு காய்கறிகளின் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தேயிலை:
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 20,000 ஏக்கர் தேயிலை சிறு விவசாயிகளால் பயிர் செய்யப்படுகிறது.
வேளாண்மை:
9.70 இலட்சம் ஹெக்டேர் நிலமே வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது. நெல், இஞ்சி, ஆரஞ்சு, மிளகு நிலக்கடலை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
இருப்புப் பாதை:
மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் வரை இரயில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். உதகமண்டலம்-ரன்னி மேடு வரையிலான 23 கி.மீ. இரயில் பாதை தனியார்வசம் விடுவதற்கான ஒப்பந்தம் 1996 இல் கையெழுத்தாகியுள்ளது.
சுற்றுலா மையங்கள்:
உதகை மலைவாசத்தலங்களின் அரசி என்று அழைக்கப்படும் உதகமண்டலம் சுற்றுலா சொர்க்கமாகும். தாவரவியல் பூங்கா, உதகமண்டலம் ஏரி, தொட்டபெட்டா, முதுமலை வன விலங்கு புகலிடம், சிம்ஸ்பார்க், குன்னுர், கோடநாடு வியூ பாயிண்ட், கோத்தகிரி, கல்லட்டி நீர் வீழ்ச்சி உதகை, ஊட்டி, கோத்தகிரி, குன்னுர் மிகச்சிறந்த கோடை வாழிடங்களாகும். இதனால் இந்தியாவின் மற்ற மாநில மக்களும் வெளிநாட்டினரும் பெருமளவில் வருகின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீலகிரி - The Nilgiris - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நீலகிரி, உற்பத்தி, செய்யப்படுகிறது, tamilnadu, உதகமண்டலம், தமிழக, மாவட்டங்கள், சுற்றுலா, தொழிற்சாலை, ஊசிகள், பிலிம், இலட்சம், செய்யப்படுகின்றன, சுமார், தமிழ்நாட்டுத், தகவல்கள், கோத்தகிரி, தேயிலை, விற்பனை, | , உருளைக்கிழங்கு, பாதை, districts, உதகை, nilgiris, இரயில், வருகின்றனர், குன்னுர், தொடங்கப்பட்டது, ஏற்றுமதி, எண்ணெய், மூலம், கூட்டுறவு, ரூபாய்க்கு, information, மருந்து, பால், கோடி, திராவகம், மத்திய, ஆண்டு