நீலகிரி - தமிழக மாவட்டங்கள்
இயற்கைச் சூழல்:
முதுமலை உயர்ந்த மலைகளும், ஆறுகளும் மழை இருப்பதால் உயர்ந்த மரங்களும் சூழ அமைந்துள்ளது. 3000-3800 அடி குத்துயரம் உள்ள இடத்தில் அமைந்துள்ளதால், இங்கு சராசரி 55 அங்குலம் மழை பெய்கிறது. வெப்ப அளவு 55 முதல் 90 டிகிரி பாரன்ஹஂட் அளவினது. கோடைக்காலத்தில் அருகிலுள்ள வறண்ட காடுகளிலிருந்து இப்பகுதிக்கு விலங்குகள் வந்துவிடும். இங்கு பயிர் வகைகளும், விலங்குகளுக்கு தேவையான அளவு உணவும் கிடைத்து விடுகிறது. இங்குள்ள மரங்கள் பாதி இலையுதிர்க்கும் வகையை சார்ந்ததால் இலையுணவு விலங்குகளுக்கு பெருத்த தீனி கிடைக்கிறது. முதுமலை யானைகளுக்கும், புலிகளுக்கும் தாயகமாக விளங்கி வருகிறது. கார் என்று சொல்லப்படும் காட்டுக் காளையும், சம்பூர் மான்களும் இங்கு உள்ளன. இவை தவிர எலிமான், வேலிமான், சிறுத்தை, சாதாரண குரங்கு (மா முகமுக), எபினட் குரங்கு என்கிற செம்முக மந்தி, மலபார் அணில் போன்றவைகளும் உள்ளன. வனத் துறையினரால் யானைகள் போற்றிக் காக்கப்படுகின்றன; இங்கு யானைகள் பலவிதவேலைகளையும் செய்து வருகின்றன. பறவை இனங்களில் ஹனி புகார்ட், மலபார் டிரோகான், கருந்தலை மஞ்சட் கொழும்பன், மரங்கொத்தி, மீன்கொத்தி போன்றவைகள் சாதாரணமாகப் பார்க்க முடியும்.
கூனுர்:
சிம்ஸ் பூங்கா |
1874-ஆம் ஆண்டு சென்னை மாநிலத் தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஜே.டி.சிம்மால் தோற்றுவிக்கப்பட்டதால் 'சிம்ஸ்' சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு மலர்க் கண்காட்சி மைதானத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பல வெளிநாட்டு மரங்களும், செடிகளும் இங்கு பயிரிடப்படுகின்றன.
பாஸ்ட்சர் இன்ஸ்டிடியூட்:
இவ்வாராய்ச்சி நிலையம் 1907 ஆம் ஆண்று தோற்றுவிக்கப்பட்டது. இங்கு வெறிநாய் கடிக்கு ஆராய்ச்சிகளும் மருத்துவமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு இளம்பிள்ளைவாதத் தடுப்பு நோய்க்கான போலியோ மருந்துகளும் தயாரிக்கப் படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் பார்வையாளர்கள் இவ்வாராய்ச்சி நிலையத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இதன் அருகிலேயே மத்திய அரசின் பட்டு உற்பத்தி ஆராய்ச்சி நிலையம் உள்ளளது.
பழ ஆராய்ச்சி நிலையம்:
கூனுரில் 1920-இல் அரசுத் துறையால் தொடக்கப்பட்டது. சுமார் 5600 அல்லது 5900 அடி கொண்ட மலைச்சரிவில் 16.10 ஏக்கர் நிலம்பரப்பில் ஆப்பிள், பிளம், பீச், பர்சிம்மன், லெமன், ஆப்ரிகாட் முதலிய பழவகைகள் பயிரிடப்படுகின்றன. 1949-இல் தொடங்கப்பட்ட நர்சரி ஒன்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
லாஸ் அருவி:
காட்டேரி-கூனுர் ஆறுகள் கூடும் இடத்தில் கூனுருக்கு அப்பால் 7 கி.மீ. தொலைவில் காணப்படுகிறது. சிறிய அருவி என்றாலும் பார்ப்பதற்கு இன்பமளிக்கும்.
விளக்குப் பாறை (லேம்ஸ் பாறை):
கூனுர் சாலை வழியாக இதை அடையலாம். இங்கிருந்து கோயமுத்தூர் மாவட்டத்தின் செழிப்பான சமவெளிப் பகுதிகளைக் காணமுடியும்.
லேடி கானிங் சீட்:
கூனுலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து, கூனுரின் மலைச்சரிவுகளில் பயிராகும் தேயிலைத் தோட்டங்களைச் சிறப்பாகக் காணலாம்.
துர்கம்:
கூனுரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்விடம் சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து கடக்க முடியாத பகுதிகளும் உள்ளன. இங்கு பாழடைந்த கோட்டை ஒன்று காணப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீலகிரி - The Nilgiris - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, நீலகிரி, சுமார், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, சிம்ஸ், நிலையம், கூனுர், தொலைவில், தமிழ்நாட்டுத், தகவல்கள், ஏக்கர், உள்ளது, | , பூங்கா, பயிரிடப்படுகின்றன, இவ்வாராய்ச்சி, பாறை, அருவி, ஆராய்ச்சி, இங்கிருந்து, காணப்படுகிறது, மலபார், உயர்ந்த, மரங்களும், முதுமலை, information, nilgiris, districts, அமைந்துள்ளது, இடத்தில், யானைகள், வருகின்றன, குரங்கு, வருகிறது, அளவு, விலங்குகளுக்கு, பார்க்க