நீலகிரி - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | உதகமண்டலம் |
பரப்பு : | 2,565 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 735,394 (2011) |
எழுத்தறிவு : | 569,647 (85.20 %) |
ஆண்கள் : | 360,143 |
பெண்கள் : | 375,251 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 287 |
பெயர்க் காரணம்:
நீலகிரி மலையைக் காண்பதற்கு நீலமாக இருப்பதால், 'நீலகிரி' என அழைக்கப்படுகிறது.உதகமண்டலம் என்ற பெயருக்கு பல வகைகள் காரணங்களாக கூறப்படுகின்றன. 'ஒத்தைக் கல் மந்து' என்ற பெயரே உதகமண்டலம் ஆயிற்று என தோதவர் சொல்கின்றனர். மூங்கில் காடு இருந்தாலும், நீர் அதிகம் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது என பலவாறு உரைக்கின்றனர்.
பொது விவரங்கள்:
எல்லைகள்:
கிழக்கில் கோயம்புத்தூர், பெரியார் மாவட்டங்களையும்; மேற்கிலும், தெற்கிலும் கேரள மாநிலத்தையும்; வடக்கில் கர்நாடக மாநிலத்தையும் கொண்டு விளங்குகிறது.
உள்ளாட்சி நிறுவனங்கள்:
நகராட்சி-2: உதவை, குன்னுர். நகரியங்கள்-1, ஒன்றியங்கள்-4, பேரூராட்சிகள்-21. பஞ்சாயத்துக்கள்: 27, கிராமங்கள்-54.
சட்டசபை தொகுதிகள்-
1; குன்னுர், உதகமண்டலம், கூடலூர்.
பாராளுமன்றத் தொகுதி-
1, நீலகிரி.
கல்வி:
பள்ளிகள்: தொடக்கப்பள்ளி 379; நடுநிலை 59; உயர்நிலை 57; மேநிலை 39; கல்லூரி 3; தொழிற்கல்லூரிகள் 7.
வரலாறு:
வரலாற்று காலந்தொட்டு இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாகும். இம்மாவட்டத்தில் காடுகளும், மலைகளும் மிகுதியாக காணப் படுகின்றன. அதனாலே இங்கு பழங்குடியினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளை கங்கர்கள், கடம்பர்கள், ஹொய்சானர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கேரளவர்மா முதலியோர் இப்பகுதிகளை ஆண்டதற்கான விவரமான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹொய்சாள மன்னன் தன்னாயகா 'நீலகிரி கொண்டான்' என்ற சிறப்புப் பெயரோடு ஆண்டதாகத் தெரிகிறது.
15 ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகளுக்கு விஜயம் செய்த சேசுசபைத் துறவிகள் இப்பகுதிகளைப் பற்றி தம் குறிப்பேடுகளில் விவரித்துள்ளனர். ஆங்கிலேயர் இப்பகுதிகளை ஆளத் தொடங்கிய பின்னரே பல நகரங்களும் வசதிகளும் பெருக ஆரம்பித்தன. சென்னை கவர்னர் 1829 இல் உதகைக்கு விஜயம் செய்தார். அவர் வருகைக்கு முன்பே சுல்லிவன் என்பவர் முயற்சியில் கடலூர்ப் பகுதி வளர்ச்சி யடைந்திருந்தது. 1830 இல் ஜேம்ஸ் தாமஸ் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது, நீலகிரி மாவட்ட மலைகளில் பெரும்பகுதி, கோத்தகிரி தவிர்த்து, மலபாரில் இணைக்கப்பட்டன. 1831-32 இல் அவலாஞ்சி, சிஸ்பாரா, குந்தா, பகுதிகளில் சாலைகள் காப்டன் முர்ரே என்பவரின் தலைமையில் போடப்பட்டன.
1832 இல் சர்ச் மிஷனரி சொசைடி தோற்றுவிக்கப்பட்டு ஆங்கிலேயப் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டது. 1868 ஆம் ஆண்டுச் சட்டம், நீலகிரி மாவட்டத்திற்கு தனி மாவட்ட ஆட்சியரை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கியது. 1893 இல் ஆக்டர்லோனி பள்ளத்தாக்கும், 1877 இல் வடனாடு பகுதியில் தென்கிழக்குப் பகுதியிலும் நீலகிரி மாவட்டத்துடன் இணைந்தன. படிப்படியாக மாவட்டம் வளர்ச்சியடைந்தது. ஆங்கிலேயரால் இங்கு காப்பி, தேயிலை, சீன்கோனா பழவகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு சாகுபடி செய்யப்பட்டன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீலகிரி - The Nilgiris - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நீலகிரி, tamilnadu, மாவட்டங்கள், உதகமண்டலம், தமிழக, இப்பகுதிகளை, தகவல்கள், மாவட்ட, தமிழ்நாட்டுத், இங்கு, | , வரலாற்று, விஜயம், மாநிலத்தையும், districts, information, nilgiris, மக்கள், குன்னுர்