நீலகிரி - தமிழக மாவட்டங்கள்
இயற்கை வளங்கள்
ஆறுகள்:
நீலகிரி மலைவளம் மிகுதியுள்ள மாவட்டம். அதனால் இங்கு மலைகளிலிருந்து ஓடிவரும் ஓடைகளால் பல ஆறுகள் உருவாகியுள்ளன. அவைகளில்: சீகூர் ஆறு, சாந்தி நல்லா ஆறு, முதுகாடு ஆறு, கல்ஹட்டி அருவி, செயின்ட் கேதரின் அருவி, கூனுர் ஆறு, காட்டேரி அருவி, குலகம்பை ஆறு, குந்தா நதி, பிலிதடாஹல்லா ஆறு, பைக்காரா நதி, மேயாறு முதலியன உள்ளன.
அணைகள்:
பைக்காரா, முக்குருத்தி, சாண்டிநல்லா, சிளன்மார்கன், மரவகண்டி, அப்பர் பவானி, எமரால்டு, குந்தா, அவலாஞ்சி, போர்த்திமந்து, பார்சன்ஸ் வேலி, முதலிய அணைகளிலிருந்து நீர் தேக்கப்பட்டு விவகாரத்திற்கும், நீர்மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பைக்காரா அணை |
அணையின் நீளம் 705 அடி. 100 அடி ஆழமுள்ளது. 3080 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கீழேயுள்ள மின்சார உற்பத்தி நிலையத்திற்கு செங்குத்தாய் வீழ்கிறது. இவ்வணை மூன்று கட்டமாக முடிக்கப்பட்டு 1933 இலிருந்து இன்று பலவாறு வளர்ச்சியடைந்துள்ளது. இன்று 13,600 கிலோ வாட் ஆம்பியர் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மோயாறு திட்டம்:
பைகாராவின் நான்காவது கட்டமாகும் இவ்வணை. இங்கு 12,000 கிலோவாட் ஆம்பியர் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய மூன்று இயந்திரங்கள் உள்ளன. இந்த திட்டத்தின்படி கட்டப்பட்டுள்ள அணைக்கு மரவகண்டி அணை என்று பெயர். இத்தேக்கத்தின் மூலம் 2 கோடி 80 லட்சம் கன அடி தண்ணீர் தேக்க முடியும்.
குந்தாமின் திட்டம்:
இந்திய-கனடா நாட்டு ஒப்பந்தப்படி ரூ.12.5 லட்சம் உதவியுடன் இத்திட்டம் 1956 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. குந்தா, பெரும்பஹல்லா, காரமடை, பல்லூர், உதகை (அருகே) என 5 இடங்களில் அமைந்துள்ளன. 1961 ஆம் ஆண்டு உற்பத்தி 1,40,000 கிலோ வாட்டுகளாகும். மற்ற மூன்று அணைகளிலும், 1,90,000 வாட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சாந்தி நல்லா நீர்த்தேக்கம்:
உதகை-மைசூர் பாதையில், உதகையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 540 லட்சம் யூனிட் அதிக மின்சக்தி இங்கு பெறப்படுகிறது.
காமராஜ் சாகர்: உதகையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 540 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காட்டுவளம்:
1948 அக்டோபர் முதல் மரம் நடுவிழா தொடங்கியது. 20 ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டு 3000 ச.மைல் பரப்புக்கு காடுகளைக் கையகப்படுத்தி சவுக்கு, யூகலிப்டஸ், வாட்டில் பட்டை மரங்களாகவும் ஏராளமாக நட்டு வளர்க்கத் தொடங்கினர். இதன் மூலம் பல விரிந்த காடுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பரவியுள்ளன. தேக்கும், ரப்பரும் அதிகளவு வளர்ந்துள்ளன. இக்காடுகளில் உள்ள மூலிகைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சித் துறையால் ஆய்வு செய்யப்பட்டு, நன்கு பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பல அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு உதவுகின்றன.
பழச்சாகுபடி:
1946 ஆம் ஆண்டிலிருந்து பழங்களைப் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி நீலகிரியில் கூனுர், பர்லியார், கல்லார் என்ற இடங்களில் ஆய்வு நிலையங்கள் அமைத்திருக்கிறார்கள். அங்கு 6000 அடி, 2,500 அடி, 1500 அடி உயரங்களில் சாகுபடி செய்யக்கூடிய பழ இனங்களைப் பற்றிய ஆய்வுகள் செய்யப்படுகின்றன. கூனுரில் முக்கியமாக ஆப்பிள், பேரி, ப்ளம் முதலியனவும், பரிலியாரிலும், கல்லாரிலும் மங்குல்தான், ஆரஞ்சு, பலாவும்; ஏலம், ஜாதிக்காய், கிராம்பு, முதலிய வாசனைப் பொருட்களும் உற்பத்தியாகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீலகிரி - The Nilgiris - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உற்பத்தி, நீலகிரி, பைக்காரா, இங்கு, லட்சம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, திட்டம், குந்தா, மூலம், அருவி, மூன்று, தமிழ்நாட்டுத், மின்சாரம், ஆண்டு, தகவல்கள், இந்திய, உதகை, தொலைவில், பற்றிய, ஆய்வுகள், | , ஆய்வு, இதன், செய்யப்படுகின்றன, உதகையிலிருந்து, யூனிட், இடங்களில், இவ்வணை, சாந்தி, நல்லா, கூனுர், ஆறுகள், information, nilgiris, districts, மரவகண்டி, முதலிய, ஆம்பியர், செய்யக்கூடிய, கிலோ, இன்று, வருகின்றன, தண்ணீர், இயந்திரங்கள்