நீலகிரி - தமிழக மாவட்டங்கள்
நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகள் நிறைய வளர்க்கப்படுகின்றன. தோதவர்கள் என்ற பழங்குடியினர் எருமைகள் நிறைய வளர்ப்பதால் அவர்களை 'எருமைகளின் நண்பர்கள்' என்றே குறிப்பிடுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் காளை மாடுகள் விநியோகத் திட்டம் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படுகிறது. காளைகளை நன்கு பேணி வளர்க்கும் தனிப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்கிறது.
ஆட்டுப்பண்ணை:
1948 ஆம் ஆண்டு சுமார் 600 ஏக்கர் நிலத்தில், வெல்லக்கடவுன் என்ற இடத்தில் ஆட்டுப்பண்ணை விஞ்ஞான முறையில் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. சாந்தி நல்லா என்ற இடத்தில் உள்ள செம்மறியாட்டு இனம் ஆண் பெண்ணுக்கு 2.5 கிலோ கம்பள ரோமத்தைத் தருகிறது. ஒரு செம்மறியாட்டினால் 75 ரூ. வருமானம் மாதந்தோறும் கிடைக்கும். இதுபோலவே இந்தியாவிலேயே சிறந்த கம்பளி உரோமத்தைக் கொடுக்கும் 'நீலகிரி இனம்' வளர்க்கப்பட்டு கம்பளி உரோகம் தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆடுகள் போலவே கோழிகளும் உதகமண்டலம், கூனுர் விலங்கு மருத்துவமனைகளில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. பழங்குடிகளில் சில பிரிவுகள் பன்றிகள் வளர்த்து வருவாயைப் பெறுகின்றனர்.
பழங்குடியினர்:
நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் தொகை கணிசமாகக் காணப்படுகிறது. இங்கு பாரம்பரியமாக இருந்து வரும் பழங்குடிகள்: 1) இருளர் 2) குறும்பர் 3) பனியர் 4) தோதவர் 5)படகர் 6) கோதவர் 7) நாயக்கர் என்ற ஏழு பெரும் பிரிவுகள் ஆகும். இவர்களில் பழமையான இனத்தவர் தோதவர் ஆவர். தோதவரும், படகரும் உதகமண்டலத்திலும், மற்ற ஐவரும் நீலகிரியிலுமாக வாழ்கின்றனர். இப்பழங்குடிகளில் இருளரே கடுமையான உழைப்பாளிகள். வேளாண்மையிலும் ஈடுபடுகின்றனர். படகர் கல்வி, வாழ்க்கை வசதி, உணவு, வணிகம் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் குடகில் புறப்பட்டு மைசூரில் இருந்து நீலகிரி வந்தவர்களாகும். இவர்கள் பேசும் மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடச் சொற்கள் காணப்படுகின்றன. தோதவர் வாழும் இடம் 'மந்து' எனப்படும்; படகர்கள் வாழிடம் 'பதி' எனப்படும்; அதுபோல கோதவர் வாழிடம் 'கோகால்' என அழைக்கப் படுகிறது. குறும்பர் பேசும் மொழியில் நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெறுகின்றன. குறும்பரில் பல வகையுண்டு அதில் பெட்ட குறும்பர் 28 சந்ததிகளாகப் பிரிந்துள்ளனர். இவர்களைத் தவிர 'கசவர்' என்ற பழங்குடிகள் நீலகிரி மாவட்டத்தில் சில ஊர்களில் வசிக்கின்றனர். பழங்குடி மக்களிடத்தில் அடிப்படை தேவையை நிறைவு செய்துகொள்ளும் மனப்பான்மையே காணப்படுகிறது. மற்ற மாநில பழங்குடிகளோடு ஒப்பிடும்போது நீலகிரிப் பழங்குடியினர் நல்ல நாகரீகம் பெற்றவர் என்றே சொல்லலாம்.
தொழில் வளர்ச்சி:
பெரிய தொழிற்சாலைகள் 126; சிறிய தொழிற்சாலைகள்-105; தேயிலை
தொழிற்சாலைகள் 167;
மிதமான கால நிலை நிலவுவதால் எலக்ட்ரானிக்
பொருட்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. புகைப்படச் சுருள் (இந்து)
தயாரிப்பு; துப்பாக்கி மருந்து தொழிற்சாலை போன்றவை
குறிப்பிடத்தக்கன.
ஜெரோனியம், பினாயில், யூகாலிப்டஸ் எண்ணெய் போன்றவையும்
தயாரிக்கப்படுகின்றன. ஊசி தொழிற்சாலை, புரோட்டின் தயாரிப்பு,
போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.
கொயினா உற்பத்தி:
நீலகிரியில் அரசு சின்கோனா தோட்டம் 2,500 ஏக்கருக்கும் அதிகமான
நிலத்தில் பயிராகிறது. 'நடுவட்டம்' என்னுமிடத்தில் கொயினா
மருந்து உற்பத்தியாகிறது. இது காய்ச்சலுக்கு ஏற்ற மருந்து.
வாட்டில் பட்டை உற்பத்தி நிலையம்:
1948-49 இல் சுமார் 8300 வாட்டில் மரப்பதியங்கள்
விநியோகிக்கப்பட்டு இன்று சுமார் 6000 ஏக்கர் நிலத்தில்
பயிராகிறது. இப்பட்டையிலிருந்து தைலம் இறக்கப்பட்டு ஏற்றுமதி
செய்யப்படுகிறது.
பைரோசைட் எண்ணெய்:
'பைரீத்ரம்' செடியின் பூவிலிருந்து 'பைரோசைட்' எண்ணெய்
எடுக்கப்படுகிறது. இது ஈ கொடு போன்றவற்றைத் தடுக்கும் பூச்சிக்
கொல்லி மருந்தான இது இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
நீலகிரி - The Nilgiris - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நீலகிரி, மாவட்டத்தில், உற்பத்தி, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், மருந்து, பழங்குடியினர், நிலத்தில், எண்ணெய், குறும்பர், தோதவர், தொழிற்சாலைகள், தமிழ்நாட்டுத், தகவல்கள், சுமார், வாழிடம், சொற்கள், இவர்கள், பேசும், நல்ல, இடம், எனப்படும், தொழிற்சாலை, செய்யப்படுகிறது, பைரோசைட், | , வாட்டில், பயிராகிறது, மற்ற, போன்றவையும், கொயினா, தயாரிப்பு, இங்கு, என்றே, மலைவாழ், அரசு, ஆட்டுப்பண்ணை, வளர்க்கப்படுகின்றன, நிறைய, nilgiris, districts, information, ஏக்கர், இடத்தில், காணப்படுகிறது, இருந்து, பழங்குடிகள், படகர், பிரிவுகள், தொழில், வருகிறது, இனம், கம்பளி, கோதவர்