காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
திருவான்மியூர் :
பழஞ்சிறப்பு வாய்ந்த இவ்வூர் அடையாற்றின் அருகாமையில் உள்ளது. முதல் இராஜேந்திர சோழனின் கல்வெட்டும் காணப்படுகின்றது. சமயக்குரவர்கள் பாடிய ஊர். இசை, நடனம், கற்பிக்க இங்கு கலா ஷேத்திரம் அமைந்திருக்கிறது. திருவான்மியூர் அருகே பெசண்ட்நகரில் கட்டப்பட்டுள்ள அஷ்டலட்சுமி கோயில் மற்றும் வேளாங்கண்ணி கோவிலும் அனைத்துப் பகுதி மக்களையும் ஈர்த்து வருகிறது.
மாதவரம் :
சென்னை நகரிலிருந்து 10கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூரில் தோல் பதனிடும் நிலையங்களும் பெரிய அளவில் சிறப்பாகப் பணியாற்றிவரும் மாதவரம் பால் பண்ணையும் உள்ளன. பால் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் உள்ளது.
மீனம்பாக்கம் :
இவ்வூரில் வெளிநாட்டுப் பயண விமான தளமும், பின்னி பொறியியல் தொழிற் சாலையும் உள்ளன. சமணக் கல்லூரி இங்குள்ளது.
திரிசூலம் :
சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் போக்குவரத்துப் பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட இரயில் நிலையம் திரிசூலமாகும். இதற்கு அருகில் உள்நாட்டு விமான தளம் புதிதாக அமைக்கப் பட்டுள்ளது. இங்குள்ள மூன்று மலைகளுக்கிடையில் அமைந்துள்ள திரிசூலநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வாலாஜாபாத் :
காஞ்சிபுரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. நேர்த்தியான கைத்தறித் துணிகளுக்குப் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள இந்து மதப் பாடசாலை புகழ் பெற்றது.
தென்னேரி :
இவ்வூர் காஞ்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவிலுள்ளது. தொண்டைமான் இளந்திரையன் என்ற அரசனால் இங்கு வெட்டப்பட்ட ஏரி திரையன் ஏரி என வழங்கியது. இதுவே இப்போது தென்னேரி என மருவியுள்ளது. சோழர் காலத்திய கல்வெட்டுகள் பல இவ்வூரில் காணப்படுகின்றன.
மதுராந்தகம் :
செங்கற்பட்டுக்குத் தெற்கில் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. உத்தம சோழன் என்ற மதுராந்தகச் சோழன் காலத்தில தோன்றிய ஊராதலின் இது இப்பெயரைப் பெற்றது. இங்கு வடமொழிக் கல்லூரியும், வேத பாடசாலையும் உள்ளன. இங்குள்ள ஏரி காத்தப் பெருமாள் கோவில் மிகுந்த புகழ் பெற்றது. இவ்வூர் ஏரி மிகப் பெரியது. மதுராந்தகம் வெற்றிலைக்குப் பெயர் பெற்றது.
செங்கற்பட்டு :
தென்னகத்து இரயில் சந்திப்புகளில் முக்கியமானது செங்கற்பட்டு. சென்னைக்கு 36வது மைலில் உள்ளது. இங்கு பெரிய அரசினர் மருத்துவ மனை ஒன்றுள்ளது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் மிகப் பழமையானது. இதில் சிந்தையைக் கரும் சிற்பங்கள் பல நிறைந்துள்ளன. இங்கு வைத்தே சோழ, பாண்டிய மன்னர்கள் முடி சூட்டிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள கோட்டை விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பெற்றது. இதில் இப்போது சீர்த்திருத்தப்பள்ளி ஒன்று நடைபெறுகிறது. இங்கு சாராய உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
செய்யூர் :
சேயூர் என்பதே செய்யூர் ஆயிற்று. இது மதுராந்தகத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. கல்வெட்டுகளிலிருந்து, இவ்வூர் ஒரு காலத்தில் இசைக்கும் நடனத்திற்கும் சிறப்புப் பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, இங்கு, இவ்வூர், இங்குள்ள, பெற்றது, தமிழக, காஞ்சிபுரம், tamilnadu, மாவட்டங்கள், இவ்வூரில், தகவல்கள், தமிழ்நாட்டுத், தொலைவில், தென்னேரி, மதுராந்தகம், இப்போது, சோழன், | , ஒன்று, செய்யூர், காலத்தில், இதில், செங்கற்பட்டு, மிகப், விமான, திருவான்மியூர், மாதவரம், information, districts, kancheepuram, சென்னை, பெரிய, பெயர், இரயில், புதிதாக, பால், புகழ்