காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
பொலம்பாக்கம் :
சோத்துப்பாக்கம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவிலும், மதுராந்தகத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. கேணிப் பாசனத்தைப் பயன்படுத்தி, புஞ்செய் பயிர்களோடு திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களும் இவ்வூரில் மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன.
சூணாம்பேடு :
சூணாம்பேட்டிலிருந்து தென்னார்காடு மாவட்ட எல்லை 2 கி.மீ. தொலைவு. உப்பளத் தொழில் இங்கு பெரிய அளவில் நடைபெறுகிறது. அருகேயுள்ள காடுகளில் மரங்களை வெட்டி பங்கிங்காம் கால்வாய் வழியாகச் சென்னைக்கு அனுப்பும் வணிகம் சிறப்பாக நடைபெறுகிறது.
தொழில் :
சென்னை மாநகரம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. இரயில், பஸ், லாரி, விமான, கப்பல் போக்குவரத்து வசதிகள் நிறைந்தது. தொழில்சாலைகளுக்கு தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, மனித வளம் இம்மாவட்டத்தின் வடபால் மிகுதியால் கிடைக்கிறது.
பெருங்களத்தூர் மோட்டார் தொழிற்சாலை :
இது சென்னையிலிருந்து 18 மைல் தொலைவில் உள்ளது. இங்கிலாந்திலுள்ள ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியின் கிளை அலுவலகமாக இத்தொழிற்சாலை முன்பு இயங்கி வந்தது. முதலில் குரோம்பேட்டையில் ஆரம்பித்த போது ஸ்டாண்டர்டு வான் கார்டு, பெர்சென் இயந்திரக் கலப்பைகளை இக்கம்பெனி தயாரித்தது. அடுத்த ஆண்டே இத்தொழிற்சாலைப் பெருங்களத்தூரில் நிறுவப்பட்டது. இதன் மூலதனம் மூன்று கோடி ரூபாய் ஆகும். தற்போது இத்தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது.
இங்கிலிஷ் எலெக்ட்ரிக் கம்பெனி :
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 1959 இல் உற்பத்தி தொடங்கப்பட்டது. பியூஸ் வகைகள், மின் கம்பிகள், கீயர் பெட்டிகள் ஆகியன இங்கு தயாராகும் சிறப்பான பொருட்கள். இவை இந்தியாவெங்கும் அனுப்பப்படுகின்றன. அந்நிய நாடுகளுக்கும் மிகுதியாக ஏற்றுமதியாகின்றன.
படாளம் சர்க்கரை ஆலை :
1958 இல் படாளம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சக்கரை ஆலை, மதுராந்தகம்கூட்டுறவு சர்க்கரை ஆலை என்னும் பெயரால் இயங்கி வருகிறது. ரூ.60 இலட்சம் முதலீடு கொண்ட இந்த ஆலை நாள் ஒன்றுக்கு சுமார் 1000 டன் கருப்பஞ்சாறு பிழிந்தெடுக்கப்படுகிறது.
சதர்ன் டயர் மானியூபாக்சரிங் (பி) லிமிடெட் :
ரூ.40 இலட்சம் மூலதனத்தில் வண்டலூரில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கூப்பர் டயர் கம்பெனியின் தொழில் நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இத்தொழிற்சாலை மோட்டார்கார்கள், டிரக்குகள், ஸ்கூட்டர்கள் போன்ற வாகனங்களுக்குத் தேவையான டயர்களையும் டியூப்களையும் தயாரிக்கின்றது.
திருப்பெரும்புதூர் தொழிற்பூங்கா :
திருப்பெரும்புதூர் அருகில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இந்தியத் தொழில்துறை தேசவரைபடத்தில் முக்கிய இடமாக மாறும் அளவுக்கு, இத்தொழில் பூங்காவை இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் பெரிய, நடுத்தர, சிறிய அளவிலான நிறு தொழிற்சாலைகள் அமையவிருக்கின்றன. இதுவரை 15 தொழிற்சாலைகளுக்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவையாவன :
1) ஹூண்டாய் மோட்டார் இந்தியா
2) மாட்சு ஹூடா எலெக்ட்ரிக்
3) லுமாக்ஸ் சாம்லிப்
4) மர்குய்ப் இந்தியா
5) ஜே.பி.எம். சுங்க்வூ
6) லுஜூய் ஆட்டோ-மோடிவ்
7) ஜே.கே.எம். டேயரிம் ஆட்டோ மோடிவ்
8) டைனமேடிக் டெக்னாலஜஂஸ்
9) ஷர்டா மோட்டார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காஞ்சிபுரம், மோட்டார், tamilnadu, மாவட்டங்கள், தொழில், தமிழக, இயங்கி, தமிழ்நாட்டுத், தகவல்கள், இத்தொழிற்சாலை, படாளம், சர்க்கரை, அடுத்த, எலெக்ட்ரிக், டயர், ஆட்டோ, | , தொழிற்பூங்கா, திருப்பெரும்புதூர், இலட்சம், கம்பெனியின், வருகிறது, அருகில், இரயில், தொலைவிலும், information, districts, kancheepuram, அமைந்துள்ளது, போன்ற, உள்ளது, தேவையான, நடைபெறுகிறது, பெரிய, இங்கு, ஸ்டாண்டர்டு