காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
காஞ்சிபுரம் :
ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்படும் வரலாற்றுச் சிறப்புடைய காஞ்சிபுரம் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இப்போது காஞ்சியில் 126 கோயில்களே எஞ்சியுள்ளன. காஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில கோயில்கள் உள்ளன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பகால சோழர்களுக்கும், பிறகு கி.பி. 6லிருந்து 8-ஆம் நூற்றாண்டு வரையிலுமான காலத்தில் பல்லவர்களுக்கும் காஞ்சிபுரம் தலைநகரமாய் விளங்கிற்று.
தற்போது மாவட்டத் தலைநகராய்த் திகழ்கிறது. இது போர்களை எதிர்கொண்டு, பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்த தொன்மையான நகரமாகும். இது சின்னக் காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம் என இருப்பிரிவுகளைக் கொண்டது. பழைய காஞ்சி தமிழ் கற்பதற்கும், புத்த, ஜெயின், இந்து பக்தர்களுக்கும் மிக முக்கியத் தலமாக இருந்தது.
பற்பல அழகிய தொல்சிற்பங்களைத் தாங்கிய பழங்கோயில்கள் பல இவ்வூரில் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிகமாய் வருகின்றனர். இங்கு கைலாசநாதர் கோவில், ஏகாம்பரேஸ்வர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், காமாட்சியம்மன் கோயில், குமரக்கோட்டம் ஆகியக் கோயில்கள் பிரசித்திப் பெற்றவை. புஷ்பேஸு ஜாதி (பூக்களில் சிறந்தது ஜாதி மல்லிகை), புருஷேஷு விஷ்ணு (ஆண்களில் சிறந்தவன் விஷ்ணு), நாரிகேஷு ரம்பா (பெண்களில் சிறந்தவள் ரம்பை), நகரேஷு காஞ்சி (நகரங்களில் சிறந்தது காஞ்சி) என்று பாணப்பட்டரின் சமஸ்கிருத ஸ்லோகம் கூறுகிறது. இங்கு அமைந்துள்ள சங்கராச்சாரியர் மடத்திற்கும், அண்ணா நினைவிடத்திற்கும் பலர் வருகின்றனர். காஞ்சிபுரம் வாணிபத்தாலும் நெசவினாலும் பெயர் பெற்ற நகரமாகும்.
குறிப்பாக இங்கு பட்டு நெசவு வெகு சிறப்பாகவும் மிகுதியாகவும் நடைபெறுகிறது. பட்டு நெசவாளர்கள் சுமார் 400 வருடங்களுக்கு முன்பே காஞ்சியில் குடியேறி பரம்பரை பரம்பரையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். காஞ்சிபுரம் பட்டுச்சேலை இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றதாகும். காஞ்சிபுரம் சென்னையிலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ளது.
வேடந்தாங்கல் |
சென்னையிலிருந்து சுமார் 52 மைல் தொலைவில் வேடந்தாங்கல் பறவை சரணாலயம் உள்ளது. இவ்வூரில் உள்ள ஏரியின் இடையிடையே அடம்பு மரங்கள் அடர்ந்த தோப்பு காணப்படுகிறது. 50 ஏக்கர் நிலப்பரப்புடைய இத்தோப்பில் நூற்றுக்கணக்கான மரங்கள் செறிந்துள்ளன. ஆண்டுதோறும் மழைக்காலத்தில் நீர் தேங்கியுள்ள இந்த ஏரித் தோப்பிற்கு நமது நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரமாயிரம் விதவிதமான நீர்பறவைகள் வந்து கூடுகின்றன.
வேடந்தாங்கலில் பறவை பரவலாக இருக்கும் காட்சி வேறெங்கும் காணவியலா கண்கொள்ளாக் காட்சியாகும். அக்டோபரிலிருந்து மார்ச் வரை, குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டும், ஆயிரக்கணக்கான பறவைகள் (30,000க்கும் மேலாக) இங்கு வருகின்றன. காலை நேரமும் மாலையும் பார்க்கத் தகுந்த நேரங்களாகும். இவ்வாறு பறவைகள் இங்கு கூடுவது இருநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இக்காலத்தில் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாய் வருகின்றனர். வேடந்தாங்கல் ஏரி உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும்.
கரிக்கிலி :
வேடந்தாங்கலுக்கு வடமேற்கு திசையில் 11 கி.மீ. தொலைவில் உள்ள கரிக்கிலியில் இருக்கும் இரண்டு ஏரிகளும், 1975 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. இவ்வேரிகளில் கடப்பமரங்கள் நிறைய உள்ளன. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், பல வெளிநாடுகளிலிருந்தும் பறவைகள் இங்கு வருவதால், வேடந்தாங்கலைப் போல் இங்கும் பறவைகள் சரணாலயம் உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காஞ்சிபுரம், இங்கு, வேடந்தாங்கல், பறவைகள், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், கோயில், வருகின்றனர், உள்ளது, தொலைவில், காஞ்சி, தமிழ்நாட்டுத், தகவல்கள், பறவை, | , சென்னையிலிருந்து, சுற்றுலாத், சரணாலயம், பகுதிகளிலிருந்தும், மரங்கள், உள்ள, வெளிநாடுகளிலிருந்தும், இருக்கும், சுமார், ஜாதி, கோயில்கள், நகரமாகும், காஞ்சியில், information, kancheepuram, districts, இவ்வூரில், அதிகமாய், பெற்ற, குறிப்பாக, விஷ்ணு, சிறந்தது, பெருமாள், பட்டு