காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
வைகுந்தப் பெருமாள் கோவில் :
இந்த விஷ்ணு ஆலயம் நல்ல எழிலமைப்பைக் கொண்ட வைணவக் கோயிலாகும். கி.பி.674 இலிருந்து கி.பி. 800 வரையிலுமான காலத்தில் பரமேஸ்வர பல்லவனாலும், இரண்டாம் நந்தி
வைகுந்தப் பெருமாள் கோவில் |
ஏகாம்பரேஸ்வர் கோவில் |
இது சிவன் கோயிலாகும். இது காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களிலேயே பெரிய கோயிலாகும். 9 ஹெக்டேர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது. இதன் கோபுரத்தின் உயரம் 59மீ (192 அடி). பல்லவர்களும், அவர்களை அடுத்து சோழர்களும் இக்கோயிலைக் கட்டி முடித்தனர். இக்கோயிலைச் சுற்றி உயர்ந்துள்ள கல் மதில்சுவரை விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் 1509-இல் கட்டினார். கோயிலின் உள்ளே 5 தனித்தனி பிரகாரங்களும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. ஏக அமர நாதர் (மாமரக் கடவுள்) என்பதே ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயராக வழங்குகிறது. இங்குள்ள மாமரத்தின் நான்கு கிளைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாகும். தலவிருட்சமான இந்த மாமரத்தின் வயது 3500 ஆண்டுகள் ஆகும்.
வரதராஜப் பெருமாள் கோயில் |
காஞ்சியில் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட வைணவத் திருக்கோயில்களில் மிகச் சிறப்பு கொண்டது இக்கோயில். இது ஏறக்குறைய 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் அரசர்களால் கட்டப்பட்டதாகும். ஐந்து பிரகாரங்களும், இருபெரும் கோபுரங்களும் உள்ளன. நாற்பக்கமும் உயர்ந்தெழும்பிய மதிற்சுவர்களும் ஆயிரங்கால் மண்டபமும் இருக்கின்றன. முதற்பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் கலையழகுடன் கண்கவர் அமைப்பைக் கொண்டதாகும். ஒவ்வொருத் துணிலும் தேர்ந்தச் சிற்பிகளின் கைவண்ணம் மிளிர்கிறது. நான்கு மூலைகளிலும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சங்கிலிக் கோர்வை தொழில் நுட்பத்துடன் வியத்தகு முறையில் அமைந்துள்ளன. அன்னப்பறவை மற்றும் கிளியுடன் காதற்கடவுளும் அவரின் துணைவியும் காட்சியளிக்கும் சிற்பம் காணத்தக்கது. இம்மண்டபத்தைச் சார்ந்த ஆனந்த தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தின் நடுவே ஒரு நீராழி மண்டபமும் அத்திவரதர் மண்டபமும் அமைந்துள்ளன.
காமாட்சியம்மன் கோவில் |
பார்வதிக்கு (காமாட்சி) அர்ப்பணிக்கப்பட்ட இச்சிறு கோவில் 14-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. வடிவில் சிறியதென்றாலும் இக்கோவில் இந்தியா முழுவதும் பிரசித்திப் பெற்றது. இந்தியாவில் சக்தியை வழிபடும் மூன்று இடங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. மற்ற இடங்கள் மதுரையும், வாரணாசியும் ஆகும். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் 9-ஆம் பிறை நாளில் இங்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
குமரக்கோட்டம் |
கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார் வழிபட்டு அருள் பெற்ற இடம். காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது. காஞ்சிபுரத்தில் எங்கு சென்றாலும் கோயில்கள் உள்ளன. இந்தியாவிலேயே கோயில்கள் நிறைந்த நகரம் இதுவே ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் வெள்ளித் தேர்த் திருவிழாவும், மாவடி சேவை, கருடச் சேவை விழாக்களும் மிகச் சிறப்புடையன.
அச்சிறுபாக்கம் :
இது சிவன் கோயில். பாண்டிய அரசன் ஒருவன் கங்கையின் மணலை வண்டியில் கொண்டு வந்தபோது, இவ்வூர் அடைந்ததும் வண்டி மேற்கொண்டு செல்ல முடிய வில்லை. அச்சு முறிந்தது. அப்போது அசரீரி கூறிய மொழியைக் கேட்டு, பாண்டியன் இக்கோயில் திருப்பணியைச் செய்து முடித்தான் என்பது வரலாறு. இவ்வாலயத்தில் இரண்டு கருவறைகள் உள்ளன. கிழக்கில் பெரிய கோபுரம், கோபுர வாயிலுக்கு அப்பால் பானுதீர்த்தம், கோபுரவாயிலுக்கு நேரே இல்லாமல் கொடிமரமும் நந்தியும் சற்று வடக்கே தள்ளி அமைந்துள்ளன. கோபுரவாயிலுக்கு நேராக உமையாட்சி நாதர் என்னும் சிவலிங்கமும், மெல்லியலாள் என்னும் அம்மையும் இருக்கின்றனர். இவை பாண்டிய மன்னரால் நிறுவப்பட்டவை. இக்கோயில் சென்னை-விழுப்புரம் இருப்புப்பாதையில் சென்னையிலிருந்து தெற்கே 90கி.மீ. தொலைவில் உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோவில், கோயிலாகும், காஞ்சிபுரம், இக்கோயில், மண்டபமும், பெருமாள், கோயில், மாவட்டங்கள், தமிழக, tamilnadu, ஆகும், ஆயிரங்கால், தகவல்கள், காமாட்சியம்மன், அமைந்துள்ளன, தமிழ்நாட்டுத், உள்ளது, நான்கு, | , வரதராஜப், மிகச், குமரக்கோட்டம், பாண்டிய, கோபுரவாயிலுக்கு, சேவை, என்னும், கோயில்கள், மாமரத்தின், இங்கு, பெரிய, வைகுந்தப், கட்டி, மண்டபம், இந்தியா, information, kancheepuram, districts, ஏகாம்பரேஸ்வர், சிவன், விஜயநகரப், பிரகாரங்களும், அமைந்துள்ளது, நிலப்பரப்பில், காஞ்சிபுரத்தில், உள்ள, நாதர்