காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | காஞ்சிபுரம் |
பரப்பு : | 4,483 ச.கீ.மீ |
மக்கள் தொகை : | 3,998,252 (2011) |
எழுத்தறிவு : | 3,013,382 (84.49 %) |
ஆண்கள் : | 2,012,958 |
பெண்கள் : | 1,985,294 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 892 |
வரலாறு :
காஞ்சிபுரம் மாவட்டம் என்று இன்று அழைக்கப்படுவது அண்மை காலம் வரை செங்கல்பட்டு மாவட்டம் என்றே வழங்கிற்று. காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வளமும் தொழில்வளமும் கலைவளமும் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு காஞ்சிபுரம் நகரம் தலைநகராய் விளங்கி வருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான். பின்னர் இம்மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடப் பட்டது.
காஞ்சிபுரம் |
1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின. 18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.
எல்லைகள் :
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், மேற்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. தலைநகர் காஞ்சிபுரத்தின் பரப்பளவு 11.65 ச.கிமீ ஆகும்.
வழிபாட்டுத்தலங்கள் :
காஞ்சி கைலாசநாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில், ஏகாம்பரேஸ்வர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில், காமச்சியம்மன் கோவில், குமரக்கோட்டம் ஆகிய கோயில்கள், அச்சிறுப்பாக்கம், குன்றத்தூர், திருவிடைச்சுரம், திருப்போரூர், திருமாற்பேறு, திருவான்மியூர், திருக்கழுக்குன்றம், திருமேற்றளி, திருப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், மகாபலிபுரம் குடைவரைக் கோயில்கள், மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்.
கைலாசநாதர் கோயில் |
இந்த சிவன் கோயிலை 7 ஆம் நூற்றாண்டில் ராயசிம்ம பல்லவன் கட்டினான். பிறகு 8-ஆம் நூற்றாண்டில் கோயிலின் முகப்பு மூன்றாம் மகேந்திர வர்மனால் கட்டப் பட்டது. இது ஆரம்பகால திராவிட கட்டிடக் கலையின் புதுமையும் எளிமையும் பிரதிபலிக்கும் கோயிலாகும். இதன் கட்டிடக்கலை மகாபலிபுரக் கோயில்களை ஒத்திருக்கிறது. பல நடன மாந்தர் நடுவே சிவனும் பார்வதியும் ஆடும் போட்டி நடனச் சிற்பங்கள் காணத் தக்கவை. இக்கோயிலின் எதிரே இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அலுவலகம் அமைந்திருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காஞ்சிபுரம், கோயில், கோவில், கைலாசநாதர், மாவட்டம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, நூற்றாண்டில், காஞ்சிபுரமும், காலத்தில், பிறகு, கோயில்கள், காஞ்சி, தமிழ்நாட்டுத், தகவல்கள், | , ஆங்கிலேயர், ஆகிய, மாவட்டமும், மூன்றாம், பெருமாள், ஆங்கிலேயர்கள், கொண்டு, இந்தியா, information, districts, kancheepuram, மக்கள், நகரம், இம்மாவட்டம், பல்லவர்கள், திகழ்ந்த, என்றும், பட்டது