திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
போடிக்காமன்வாடி :
இது ஒரு சிற்றுர். இங்கிருந்து சம்பங்கி, கனகாம்பரம், சிவந்தி, செண்டு, மல்லிகை, மருகு, அரளி ஆகியப் பூக்களும், தக்காளியும், நிலக்கடலையும் ஏற்றுமதி செய்வதால் இவ்வூர் புகழ்பெறுகிறது.
அம்பாத்துறை :
இரு நூ ற்றாண்டுகளுக்கு முன்பு பாளையமாகக் சிறந்திருந்தது. இரயில் நிலையம், கோழிப்பண்ணைகள், காந்தி கிராமம் ஆகியவற்றால் இவ்வூர் பிரபலமாக விளங்குகிறது. கடல் மட்டத்திற்கு மேல் இவ்வூர் இருப்பதால் சிறந்த சுகவாசஸ்தலமாகவும் விளங்கு கிறது.
காந்திகிராமம் :
1947 ஆம் ஆண்டில் திருமதி செளந்தரம் இராமச்சந்திரன் இவ்வூரைப் படிப்படியாக ஏற்படுத்தினார். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சூழலில், சிறுமலையின் அடி வாரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கிராமியப் பல்கலைக் கழகமாக வளர்ச்சிப் பெற்றுள்ளது. இரயில் பாதையின் இருபக்கமும் காந்திக் கிராமக் கட்டிடடங்கள் காணப் படுகின்றன. சர்வோதய முறையில் கூட்டுறவு வங்கியும் நடத்தப்படுகிறது.
பஞ்சம்பட்டி :
வெள்ளேடு இரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிற்றுர். காந்தி கிராமத்திற்கு வடமேற்கே எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. வெற்றிலைக்கொடிக்கால்கள் இங்கு அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. சிவந்தி, கனகாம்பரம் முதலிய பூக்களும், கரும்பு, நெல், வெங்காயம் சோளம், மணிலா, கம்பு முதலியனவும் விளைவிக்கப்படுகின்றன.
செம்பட்டி :
இது வளம் கொண்ட செம்மன் பூமியாதலால், இங்கு பெருமளவில் திராட்சை பயிராகிறது. இவ்வூரில் மின்சார நிலையம் அமைந்துள்ளது.
சித்தரேவு :
சித்தர்கள் இங்கு வாழ்ந்ததால் இப்பெயர் வழங்குகிறது. உடல் உறுப்பு குறைந்தவர் களுக்கு மறுவாழ்வு இல்லம் இயங்குகிறது. திண்டுக்கல்-அய்யம்பாளையம் சாலையில் இதுவே முக்கியமான ஊர்.
வக்கம்பட்டி :
சின்னாளம்பட்டியிலிருந்து 8கி.மீ தொலைவில் உள்ளது. ஒயில் கும்மி ஆட்டக்காரர்கள் இவ்வூரிலும் சுற்றுப்புறங்களிலும் வாழுகின்றனர். கிறிஸ்துவர்களாக உள்ளவர்கள் வேளாங்கண்ணி மாதாவைப் பற்றி பாடல்களை எழுதி ஆகிறார்கள்.
பன்றிமலை :
திண்டுக்கல்லுக்கு மேற்கில் உள்ள இக்குன்றுகள் பன்றிநாடு என்று கூறப்படுகின்றன. இப்பகுதிகள் காப்பித் தோட்டங்களும் வாழைத் தோட்டங்களும் நிறைந்து வளம் கொழிக்கின்றன. இவ்வூரினரான பன்நறிமலை சுவாமிகள் இறையருளோடு பல்கலை அறிஞராக எட்டுத்திக்கும் புகழ்பெற்று விளங்கியவர். சென்னை நுங்கம்பாக்கத்தில் பன்றிமலை சுவாமிகளின் ஆசிரமம் உள்ளது.
கன்னிவாடி :
திண்டுக்கல்லிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூர் மலை வளம் மிகுந்ததாகும். மலையடிவாரத்தில புன்செய் பயிர்கள் விளையகின்றன. மலைப்பகுதியில் காடுகளும், காப்பித் தோட்டங்களும் உள்ளன. வாழை, பலா, திராட்சை, ஆரஞ்சுத் தோட்டங்களும் உள்ளன. புகையிலை விளைச்சலும் மிகுதி. இப்பகுதியில் ரெட்டியார்கள் மிகுதியாக வாழ்கின்றனர். இது செம்பட்டியிலிருந்து ஒட்டன் சத்திரம் செல்லும் வழியில் உள்ளது.
கரிசல்பட்டி :
கன்னிவாடிக்கு அருகே உள்ள இச்சிற்றுரில் கத்தோலிக்கரும் வன்னியரும் அதிகமாக உள்ளனர். திராட்சை, வெங்காயம், பருத்தி, மிளகாய் ஆகியன ஏராளமாய் பயிராகின்றன. நவதானியங்களின் விளைச்சலும் மிகுதி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், இவ்வூர், தோட்டங்களும், உள்ள, tamilnadu, உள்ளது, தமிழக, மாவட்டங்கள், இரயில், திராட்சை, தகவல்கள், தொலைவில், தமிழ்நாட்டுத், வளம், இங்கு, வெங்காயம், காப்பித், | , மிகுதி, விளைச்சலும், பன்றிமலை, நிலையம், information, districts, dindigul, சிற்றுர், கனகாம்பரம், காந்தி, பூக்களும், சிவந்தி, அமைந்துள்ளது