தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | தர்மபுரி |
பரப்பு : | 4,497 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,506,843 (2011) |
எழுத்தறிவு : | 917,709 (68.54 %) |
ஆண்கள் : | 774,303 |
பெண்கள் : | 732,540 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 335 |
வரலாறு :
சங்க காலத்தில் தர்மபுரியின் பெயர் தகடூர். இவ்வூரை அதியமான் ஆண்டதாக இலக்கியம் கூறுகிறது. பிற்காலத்தில் சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையால் அதியமான் மகன் எழினி தோற்கடிக்கப்பட்டான். இதனை 'தகடூர் யாத்திரை' என்ற தமிழிலக்கியம் விரிவாக விளக்குகிறது. சேரரின் ஆட்சிக்குப் பிறகு தர்மபுரி என வழங்கும் தகடூர், நுளம்பர், சோழர், மீண்டும் அதியமான்கள், ஹொய்சாளர், விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் பிஜப்பூர் சுல்தான்களின் ஆளுகையின் கீழ் தருமபுரி இந்தது. 1652 முதல் 1768 வரை மைசூர் மன்னர்களின் மேலாண்மையின் கீழ் இருந்தது. இக்காலத்தில் கன்னடர்கள் பெருமளவில் இம்மாவட்டத்தில் குடியேறினர். இவர்களுக்கு முன்பே விஜயநகர காலத்தில் தெலுங்கர்கள் மாவட்டம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர். 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலத் தளபதி வுட் என்பவன் பிரிட்டீஸ் இந்தியப் பகுதிக்குள் தர்மபுரியை கொண்டு வந்தான். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்துடன் தர்மபுரி இணைந்தே இருந்தது. 1965-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் தமிழகத்தின் எல்லையில் இருப்பதால் கன்னட, தெலுங்கு செல்வாக்கு உண்டு. ஊர்களும் ஹல்லி, பள்ளி என்று அமைந்திருக்கும். இங்கு பழங்குடியினரும் அதிகம்.
பொது விபரங்கள் :
மழையளவு சராசரி : 857மி.மீ; காடுகள் : 3,66,231; ஹெக்டேர் சாலைகளின் நீளம் : 5,796கி.மீ; காவல் நிலையங்கள் : 52; பதிவுபெற்ற வாகனங்கள் : 18,640; திரையரங்குகள் : 142; வெப்பம் : 38நீ
எல்லைகள் :
வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கர்நாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
உள்ளாட்சி நிறுவனங்கள் :
நகராட்சிகள்-1 (தர்மபுரி);
ஊராட்சி ஒன்றியம்-8 (தர்மபுரி, அரூர்,காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம்);
பேரூராட்சிகள்-10 (அரூர், கடத்தூர், காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பி. மல்லாபுரம், கம்பைநல்லூர்);
கிராம பஞ்சாயத்துக்கள்-588;
சட்ட சபை தொகுதிகள்: 5;
பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்
கல்வி :
பள்ளிகள்:
தொடக்கநிலை 1,837 நடுநிலை 173 - உயர்நிலை 149 - மேல்நிலை 56 - கல்லூரிகள் 3 - பொறியியல் கல்லூரி 1
மருத்துவம் :
அரசு மருத்துவமனைகள்-7; ஆரம்ப சுகாதாரமையங்கள்-18; துணைமையங்கள்-62.
புகழ்பெற்ற பெரியோர் :
சங்ககால மன்னர் அதியமான், புலவர் அவ்வையார், சுதந்திர போராட்டவீரர் தீர்த்த கிரிகவுண்டர்; கவனர் ஜென்ரல் ராஜாஜி; விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தர்மபுரி, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, சேலம், அதியமான், மாவட்டமும், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், தகடூர், தமிழ்நாட்டுத், காலத்தில், தகவல்கள், districts, dharmapuri, | , கீழ், காரிமங்கலம், information, மாவட்டம், மக்கள்