தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
குண்டணி :
குண்டணி மலையில் நிறைய கோவில்கள் உள்ளன. குண்டீஸ்வரர் ஆலையம் தனித்துவம் மிக்கது. நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன.
மகாராஜாக்கடை :
கிருஷ்ணகிரியிலிருந்து ஏழாவது மைலில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 4000 அடி உயரத்தில் உள்ள மலையை மகாராஜா மலை என்பர். இங்கும் குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலே கோட்டை இருக்கிறது.
மாடக் கொண்டம் பள்ளி :
ஓசூரிலிருந்து 10 மைலில் உள்ளது. கிருத்துவ சமயத்தலம்.
மட்டிகிரி :
ஓசூருக்கு 4 மைலில் உள்ளது. இங்கு பால் பண்ணை உள்ளது.
நாகமலை :
கிருஷ்ணகிரி வட்டத்தில், ஜகதேவி, மல்லப்பாடி ஊர்களுக்கு இடையில் நாகமலை உள்ளது. கிழக்குப் புறமாக இம்மலை மீது ஏற முடியும். மேற்கிலிருந்து மலை உச்சியை அடைவது கடினம். கோட்டையின் மதிற்சுவர்கள் உறுதியானவை.
நாகராசம்பட்டி :
காவிரிப்பட்டணம் ஒன்றியத்தைச் சேர்ந்தது. மலையிலுள்ள சிறு முடிச்சுக்குக் கோட்டை மலை எனப்பெயர். இங்குள்ள மண்டபத்தை அடுத்து ஆறு அங்குல சுற்றளவுக்கு ஒரு பொந்து காணப்படுகிறது. அதன் வழியாக சிறு கல்லையோ அல்லது கனமான பொருளையோ போட்டால் 100 அடிக்குக் கீழே போய் விழுகிறது. போர்க்காலங்களில் அவசர செய்தி அனுப்புவதற்கு இதை பயன்படுத்த இருக்கலாம் என்று சொல்கின்றனர்.
பஞ்சப்பள்ளி :
மேலகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்த அழகான ஊர்.
பாப்பாரப்பட்டி :
தர்மபுரிக்கு 10வது மைலில் உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, இங்கு ஆசிரமம் அமைத்து தங்கி இருந்தார். வியாழக்கிழமை சந்தை கூடுகிறது. கைத்தறிக்குப் புகழ்பெற்றது.
பெரும்பாலை :
பெண்ணாகரத்திற்குக் கிழக்கில் உள்ளது. இந்த ஊர்க்கோட்டையைச் சுற்றி பாம்பாறு இருக்கிறது. வணிகத்தலம்.
பொச்சம் பள்ளி :
தர்மபுரியிலிருந்து 18 மைல் தொலைவில் உள்ளது. பழப் பாதுகாப்பு பண்ணை உள்ளது. ஞாயிற்றுக் கிழமை சந்தை கூடுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, தர்மபுரி, tamilnadu, மைலில், தமிழக, மாவட்டங்கள், இங்கு, தகவல்கள், தமிழ்நாட்டுத், பண்ணை, நாகமலை, சந்தை, | , கூடுகிறது, dharmapuri, சிறு, கோட்டை, information, districts, குண்டணி, நிறைய, இருக்கிறது, பள்ளி