தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
ஓசூர் பண்ணை :
1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பெல்லாரி, பிக்கானீர், மந்தியாவகை ஆடுகள் வளர்க்கப்பட்டு கம்பளிக்காக ரோமம் எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோழிப்பண்ணை அமைந்துள்ளது. இங்கு வொயிட் லெக்கார்ன், ரோட் ஐலண்டு, ரெட் வகைகள் வளர்க்கப்படுகின்றன. இதன் கிளை கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர் கால்நடைப்பண்ணை :
1924-ஆம் ஆண்டு ஓசூர் வட்டத்திலுள்ள மதிகிரி கிராமத்தில் தொடங்கப்பட்டது. இவ்விடம், 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குப் புல் ஏராளமாகக் கிடைக்கிறது. இப்பண்ணை சுமார் 1674 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு சிந்தி, கிர், ஹல்லி கார், காங்கேயம் முதலிய இனங்கள் வளர்க்கப்படுகின்றன.
பட்டுப் பூச்சி வளர்ப்பு :
பட்டுப் பூச்சி வளர்ப்பு |
நிலவளம் :
தர்மபுரி மாவட்டம் ஓர் மலைமாவட்டம் ஆகும். தர்மபுரியின் வடக்குப் பகுதி மைசூர் பீடபூமியும், கிழக்கில் ஜாவடி மலைத்தொடர்களும், தெற்கில் சித்தேரி, சேர்வராயன் மலைத்தொடர்களும் வளைத்து நிற்கிறது. தர்மபுரியின் நிலவியல் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதால் இங்கு கனிம வளம் நிறைந்துள்ளது.
அபாடைட் :
அபாடைட் கனிமம், சாமல்பட்டிக்கு அருகில் உள்ள ரெட்டிப்பட்டியிலும் ஓகனக்கல் பக்கத்தில் உள்ள ஊத்தாமலைப்பகுதியிலும் கிடைக்கின்றது. ஓகனக்கல் பகுதியில் 50,000 டன்னும், ஊத்தாமலையில் 3கி.மீ. தொலைவுக்கும், கெம்பகரைக்குத் தெற்கில் 2 கி.மீ. தொலைவுக்கும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பித்தளை :
பித்தளை தாது அரூர் வட்டத்தில் பைர நாயக்கன் பட்டியில் கிடைக்கிறது. இது தவிர ஈயம், சைனைட், கார்பனேட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
தங்கம் :
மகாராஜாக்கடை அருகில் உள்ள நாராபள்ளியில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
இரும்பு :
தீர்த்தாமலையில் மட்ட இரும்பு சுமார் 28 மில்லியன் டன் கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது.
சுண்ணாம்பு :
தர்மபுரிமாவட்டத்தில் கும்மனுர் பகுதியில் சுமார் 7 இலட்சம் டன்னும், திப்பம்பட்டியில் சுமார் 50,000 டன்னும் கிடைக்க வாய்ப்புள்ளது.
மாக்னசைட் :
கஞ்சனுரில் குறைந்த அளவு கிடைக்கிறது.
நிக்கல் :
கஞ்சனுரில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - சுமார், ஓசூர், பட்டுப்பூச்சி, தர்மபுரி, இங்கு, அமைந்துள்ளது, தமிழக, tamilnadu, மாவட்டங்கள், பட்டுப், ஏக்கர், வளர்க்கும், கிடைக்க, வாய்ப்பு, டன்னும், உள்ள, கிடைக்கிறது, வளர்ப்பு, தகவல்கள், தமிழ்நாட்டுத், ஆண்டு, தொலைவுக்கும், ஓகனக்கல், அருகில், இருப்பதாக, பகுதியில், கிடைக்கும், கஞ்சனுரில், | , இரும்பு, dharmapuri, அபாடைட், districts, பித்தளை, தெற்கில், பூச்சி, பண்ணை, தொடங்கப்பட்டது, நிலப்பரப்பில், வளர்க்கப்படுகின்றன, இதன், information, நூல், தர்மபுரியின், மலைத்தொடர்களும், படுகின்றன, வட்டத்தில், மல்பெர்ரி, கிராமத்தில்