தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
இங்கிலீஸ் எலட்ரிகல்ஸ் :
மின்சார வேலைகளுக்குத் தேவையான சுவிட்சுகள், ஹோல்டர்கள், பியூஸ்காரியர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுவும் ஒரு கிளை நிறுவனமாகும். இதன் தலைமையிடம் சென்னையில் உள்ளது.
புரூட் ப்ராசசிங் சென்டர் :
பழரசங்கள், ஊறுகாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இங்கிருந்து பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இவற்றை டின்களில் அடைத்து வெளிநாடுகளுக்கும், பாட்டில்களில் அடைத்து உள் நாட்டிலும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். பழங்களை நெடுநாள் பாதுகாத்து வைக்கத்தக்க 'கோல்ட் ஸ்டோரேஜ்' வசதியும் உண்டு.
இண்டியன் டுபாக்கோ :
பலவகையான புகையிலைகளைத் தரம் பிரித்து, பக்குவப்படுத்தி பல்வேறு வடிவங்களில் சிகரெட், சுருட்டு, பீடி போன்ற பொருள்கள் தயாரிக்கத்தக்க வகையில் இங்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
லட்சுமி ஆடோமெடிக் லும்ஸ் :
தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஆலைகளுக்குத் தேவைப்படும் விசைத்தறிகள், மற்றும் உதிரிபாகங்கள் இங்கு தயாராகின்றன. பிரிமியர் மில்ஸ், ஏஷியன் பேரிங்ஸ், லக்ஷ்மி ரிங் டிராவலர்ஸ் போன்ற தொழில் நிறுவனங்களும் இம்மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகின்றன.
ஊத்தங்கரை நூற்பாலை :
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், ஊத்தங்கரையில் நிறுவப்பட்டுள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மொத்தம் 25520 கதிர்களுடன் இயங்கி வருகிறது. இவ்வாலை முழுதிறனில் செயல்பட்டால், மாவட்டத்தில் விளையும் மொத்த பருத்தியையும் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
கிருஷ்ணகிரி பால்பவுடர் தொழிற்சாலை :
3 கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி பால்பவுடர் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் செயலாற்றும் இந்தத் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் பதப் படுத்தும் பிரிவும், 10டன் பால் பவுடர் தயாரிக்கும் பிரிவும், 6 டன் வெண்ணெய் தயாரிக்கும் பிரிவும், 2டன் நெய் தயாரிக்கும் பிரிவும் அடங்கியுள்ளன.
ஸ்டார்ச் சர்வ் :
ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலைகள் 37 இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஸ்டார்ச் சர்வ் என்னும் தொழிற் கூட்டுறவு சங்கம் 1982-ஆம் ஆண்டு பாப்பி ரெட்டிப் பட்டியிலும் இதன் கிளை அலுவலகம் சேலத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் இச்சங்கத்தின் சுமார் 30 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மரவள்ளிக் கிழங்கு பயிரிடும் விவசாயிகள் நன்கு பயனடைந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 45,000 மூட்டைகள் மரவள்ளிக் கிழங்கு மாவு விற்பனையாகிறது. இம்மாவு மூட்டைகளைத் தேசிய பஞ்சாலை நிறுவனம், கூட்டுறவு நூற்பாலைகள், இண்டோ பர்மா பெட்ரோலியம் கம்பெனி மற்றும் வெளிமாநில நிறுவனங்களும் கொள்முதல் செய்கின்றன.
தர்மபுரி :
காமாட்சி ஆலயம் |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தர்மபுரி, tamilnadu, பிரிவும், மாவட்டங்கள், தமிழக, இங்கு, பல்வேறு, போன்ற, தயாரிக்கும், ஸ்டார்ச், இதன், சுமார், கூட்டுறவு, தகவல்கள், தமிழ்நாட்டுத், தொழிற்சாலைகள், அமைந்துள்ளன, சர்வ், dharmapuri, பால், districts, ஆண்டு, மரவள்ளிக், கல்வெட்டு, | , முதலியவை, பாளையம், காமாட்சி, விளங்குகிறது, கிழங்கு, தொழிற்சாலை, பொருட்கள், அத்தியாவசியப், தொழில், அடைத்து, இடங்களுக்கும், ஏற்றுமதி, இங்கிருந்து, நிறுவனங்களும், நூற்பாலை, கிருஷ்ணகிரி, பால்பவுடர், இருக்கிறது, மாவட்டத்தில், information, இயங்கி, கிளை