தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
பஸ்தர் :
'பஸ்தர்' என்னும் கன்னடச் சொல்லுக்கு செம்படவர் என்று பொருள். இவர்களை மலைநாட்டு பரதவர் என்று சொல்லலாம். நீர் நிலைகளின் அருகிலேயே இவர்கள் குடியிறுப்புகள் அமைந்துள்ளது. காவிரியை ஒட்டி ஊட்ட மலைப்பகுதி, மேட்டூர் அணைப்பக்கம் உள்ளே கோட்டையூர், பண்ணவாடி, முதலிய இடங்களில் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வந்தாலும் ஒகேனேக்கல் பகுதியில் அதிகம் காணப் படுகின்றனர்.
சிவாச்சாரத்தார் :
சிவாச்சாரத்தார் இன்று பழங்குடிகளைப் போல இருந்தாலும். இவர்கள் பழங்குடிகள் அல்லர். முஸ்லீம் படையெடுப்பின் போது பயந்து தர்மபுரி மாவட்டத்தில் தஞ்சம் புகுந்தவர்கள். சைவ சமயத்தில் உட்பிரிவான 'லிங்காயத்'துக்கள் (கழுத்தில் லிங்கம் கட்டியிருப்பார்கள்). மற்ற மூன்று பழங்குடிகளுக்கும் இவர்களே குருக்களாக இருந்து திருமண சடங்கை நிறைவேற்றுவார்கள். தர்மபுரி மாவட்டத்திலுள்ள 'குடகபெட்டா' என்ற மலையில் வாழ்கின்றனர். இவர்கள் கன்னடத்தையே தாய்மொழியாகக் கொண்டவர்கள். பழங்குடியினரிடையே இருப்பதால் இவர்கள் வாழ்க்கை முறையும் அவர்களைப் போலவே இருக்கிறது. இருந்த போதிலும் கூட தங்கள் தனித்துவத்தை இழக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.
தர்மபுரிமாவட்ட திருவிழாக்கள் :
சனவரி மாதத்தில் ஓசூர் வட்டத்திலுள்ள திம்ம சமுத்திரத்தில் சாப்பாளம்மன் பெருவிழா நடக்கும். பிப்ரவரியில் ஓசூர் வட்டத்திலுள்ள மடகொண்டபள்ளித் தேர் திருவிழாவிலும், அரூர் வட்டத்திலுள்ள தீர்த்தாமலை தேர்த்திருவிழாவும், சோளமரத்துப்பட்டி சிவராத்திரி பெருவிழாவும் குறிப்பிடத்தக்கவை. மார்ச் மாதத்தில் ஓசூர், தர்மபுரி வட்டத்திலுள்ள சூடநாத சுவாமி தேர்திருவிழாவும், அதமன் கோட்டைக் காளியம்மன் பெருவிழாவும் காணத்தக்கவை. ஏப்ரலில் தென்கனிக் கோட்டை பெத்தராய சுவாமி கோவில் தேர்த்திருவிழாவும், இந்தூர் காளியம்மன் பெருவிழாவும் சிறப்பாக நடக்கும். ஆகஸ்ட் மாதத்தில் அரூர், தர்மபுரி வட்டங்களில், இருளப்பட்டி கன்னியம்மன் கோயில் பெருவிழாவும், ஒகனக்கல் ஆடிப் பெருக்கும் காணத்தக்கவை.
தொழில் வளர்ச்சி :
தர்மபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியே காணப்படுகிறது. தற்போது கிருஷ்ணகிரி, ஓசூர் வட்டங்கள் தொழில் மையங்களாக வளர்ந்து வருகின்றன. இம்மாவட்டத்தில் பதிவு பெற்ற சிறுதொழிற் கூடங்கள் 1108. இவற்றுள் ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களில் மட்டும் 384 சிறுதொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
மரவள்ளிக் கிழங்கிலிருந்து சேமியா போன்ற பொருள் தயாரிக்கும் தொழிலகங்கள் அரூர், தர்மபுரி வட்டங்களில் அதிகமாகக் காணப் படுகின்றன. கிருஷ்ணகிரியில், சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் ஆலை ஒன்றை அரசு நடத்துகிறது. அரூர் வட்டத்தில் உமியிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
சிப்காட் தொழிற்பேட்டைகள் :
பெங்களூருக்கு 35 கி.மீ. முன்பாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், 1200 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே இதற்கு 8 கி.மீ. தொலைவில் இரண்டாவது தொழிற்பேட்டை சுமார் 500 ஏக்கரில் ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் செயல்படுகிறது.
அசோக் லேலண்ட் :
ஓசூரில் இதன் கிளை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு பஸ், லாரி முதலியவற்றுக்குப் பாடி கட்டுதல் நடைபெறுகிறது. பேருந்துகளுக்கு தேவைப்படும் பலவித உதிரிப்பாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. வெளிநாட்டுத்தொழில் நுணுக்க உதவியுடன் நடைபெறும் இத் தொழிற்சாலை, பேருந்துகளை ஏற்றுமதியும் செய்து வருகிறது.
டி.வி.எஸ். மொப்பெட் :
டி.வி.எஸ் நிறுவனத்தினர் மொப்பெட் என்னும் இருசக்கர மோட்டார் சைக்கிள்களை இங்கு தயாரிக்கின்றனர். இவற்றுக்குத் தேவைப்படும் உதிரி பாகங்களும் இங்கேயே வடிவமைக்கப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தர்மபுரி, ஓசூர், தொழில், தமிழக, அரூர், பெருவிழாவும், இவர்கள், வட்டத்திலுள்ள, tamilnadu, மாவட்டங்கள், மாதத்தில், கிருஷ்ணகிரி, தயாரிக்கும், இங்கு, தமிழ்நாட்டுத், தகவல்கள், வட்டங்களில், காணத்தக்கவை, எண்ணெய், நெடுஞ்சாலையில், மொப்பெட், | , தேவைப்படும், தொழிற்பேட்டை, காளியம்மன், நடைபெறுகிறது, தேர்த்திருவிழாவும், செய்து, வாழ்ந்து, அமைந்துள்ளது, பொருள், என்னும், காணப், சிவாச்சாரத்தார், information, நடக்கும், districts, dharmapuri, சுவாமி