விலங்கியல் :: உணவும் ஊட்டமும்

21. இதன் குறைநோய் யாது?
தசைப்பிடிப்பு.
22. பான்தோதெனிகக்காடி என்றால் என்ன?
வைட்டமின் B தொகுதியைச் சார்ந்தது. இது குறையுமானால் தோல் கோளாறு, உணவு வழிக்கோளாறு ஏற்படும்.
23. அடர்மின் என்றால் என்ன? இது எவற்றில் காணப்படுகிறது?
வைட்டமின் B4 பால்காடி நுண்ணுயிரிகள், சில பூஞ்சைகள். ஈஸ்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
24. வைட்டமின் B4 இன் வேலை யாது?
அமினோ காடித்தொகுப்பைக் கட்டுப்படுத்துகிறது.
25. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?
ஈரல், இலைக்காய்கறிகள்.
26. இதன் குறைநோய் யாது?
உறக்கமின்மை.
27. வைட்டமின் B12 இன் வேலை யாது?
குருதி உண்டாக இன்றியமையாதது.
28. இது அடங்கியுள்ள உணவுப் பொருள்கள் யாவை?
ஈரல், இறைச்சி.
29. இதன் குறைநோய் யாது?
குருதிச் சோகை.
30.போலிகக் காடி என்றால் என்ன?
நீரில் கரையக்கூடிய வைட்டமின் B தொகுதியில் ஒன்று. பசுங்காய்கறிகளில் உள்ளது. இது குறையுமானால் குருதிச்சோகை ஏற்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உணவும் ஊட்டமும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வைட்டமின், யாது, குறைநோய், என்ன, என்றால், இதன்