விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
91. நிணநீர் அணுக்கள் என்பவை யாவை?
ஒரு வகை வெள்ளணுக்கள். இவை குருதியில் சேரும் அயல் பொருள்களை அழிப்வை.
92. தெளிநீர் (சீரம்) எதிலுள்ளது? அதன் வேலை என்ன?
கணிமத்திலுள்ளது. இதன் நிறம் வெளிறிய மஞ்சள். ஊட்டச்சத்தையும் எதிர்ப்புப் பொருள்களையும் எதிர்ப் பிகளையும் எடுத்துச் செல்வது.
93. அலெக்சின் என்றால் என்ன?
இது ஒரு நச்சுமுறிவு. குருதித் தெளிநீரில் இருப்பது. எதிர்த்தெளிநீரோடு சேரும்பொழுது நோய்க்கு எதிராகக் பாதுகாப்பு அளிப்பது.
4. எலும்பு மண்டலம்
94. எலும்பு என்றால் என்ன?
எலும்புக் கூட்டைத் தோற்றவிக்கும் கடினத்திசு. உடலுக்கு உரத்தையும் வடிவத்தையும் கொடுப்பது. நம் உடலிலுள்ள
95. எலும்புகள் எத்தனை?
206 எலும்புகள்.
96. எலும்பு மண்டலம் என்றால் என்ன?
எலும்புகளாலானது எலும்பு மண்டலம். உடலுக்குத் திண்ணிய வடிவத்தையும் அசைவையும் தருவது.
97. அகச் சட்டகம் என்றால் என்ன?
உடலிலுள்ளே அமைந்த சட்டகம். தலைஎலும்புக்கூடு, முதுகெலும்பு, புறத்துறுப்பு எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டது.
98. குருத்தெலும்பு என்றால் என்ன?
செறிவான இணைப்புத்திசு. அழுத்தத்தைத் தாங்க வல்லது. வேலைக்கேற்ப வேறுபடுவது. குழந்தைச் சட்டகத்தில் அதிகமாகவும் மனிதச்சட்டகத்தில் குறைவாகவும் இருப்பது.
99. குருத்தெலும்பு காணப்படும் பகுதிகள் யாவை?
மூக்கு செவிமடல், முள் எலும்புத் தட்டுகள். இவற்றின் வேலை தாங்குதலும் நெகிழ்ச்சியும் அளிப்பது.
100. பளிங்குக் குருத்தெலும்பு என்றால் என்ன?
மென்மையாகவும், முத்துப்போன்றும் இருப்பது. எலும்புகளின் புழக்கப்பரப்பை மூடுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், எலும்பு, குருத்தெலும்பு, எலும்புகள், மண்டலம், இருப்பது