இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 13
121. மாறியமைதல் என்றால் என்ன?
மற்றொரு ஒளிமாற்றுருவாக ஒர் ஒளிமாறுதல்.
122. குண்ட் விளைவு என்றால் என்ன?
முனைப்படுதலுக்குட்படுத்திய ஒளியின் அதிர்வுத் தலச் சுழற்சி பற்றி ஆராய்வது. ஒளிக் கதிரின் திசையில் பகுதி பெற்றிருக்கும் காந்தப்புலத்தில், ஒருபடித்தான தனிமப் பண்புள்ள ஒளி ஊடுருவு ஊடகத்தில், இந்த ஒளி செல்லும்போது ஆய்வு நடைபெறுவது.
123. குண்ட் குழாய் என்றால் என்ன?
ஆகஸ்ட் குண்ட் என்பவர் பெயரால் 1866இல் அமைந்த கருவி. ஒளியின் விரைவை அளக்கப் பயன்படுவது.
124. நிக்கல் முப்பட்டகம் என்றால் என்ன?
கால்சைட்டுப் படிகத்திலிருந்து செய்த ஒளிக்கருவி, தள முனைப்படு ஒளி பெறப் பயன்படுவது.
125. கணு என்றால் என்ன?
நிலையான அலைக்கோலத்தில் அதிர்வு குறைவாக இருக்கும் புள்ளி.
126. எதிர்க்கணு என்றால் என்ன?
நிலையான அலைக்கோலத்தில் காணப்படும் பெரும அதிர்வுப்புள்ளி.
127. பார்வைமானி என்றால் என்ன?
பார்வையை அறியப் பயன்படும் கருவி.
128. சினெல் விதி என்றால் என்ன?
எவ்வகை இரு ஊடகங்களுக்கும் படுகோணச் சைன் வீதமும் விலகு கோணச் சைன் வீதமும் மாறா எண்.
129. முப்பரும நோக்கி என்றால் என்ன?
இது ஒரு இருகண் நோக்கியே.
130. சூம் வில்லை (லென்ஸ்) என்றால் என்ன?
திரைப்பட ஒளிப்படப் பெட்டியில் பயன்படும் வில்லைத் தொகுப்பு. ஒரே உருத்தளத்தில் உரு இருக்குமாறு குவிய நீளம் தொடர்ச்சியாக இருக்கவும் குவிய இழப்பு இல்லாமல் இருக்குமாறும் சரி செய்யப்படுதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 13 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, குண்ட்