இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 10

91. நிழல் என்றால் என்ன?
ஊடுருவாப் பொருள் ஒளியைத் தடுக்கும் பொழுது ஒரு பரப்பில் உண்டாகும் இருட்டு.
92. நிழலின் வகைகள் யாவை?
1. முழு நிழல்
2. அரை நிழல். கோள்மறைவில் இந்நிகழ்ச்சி உள்ளது.
93. குறுந்துளை என்றால் என்ன?
ஒளிக்கருவிகளில் ஒளியினை உள்விடுந் திறப்பு. எ-டு. ஒளிப்படப் பெட்டி, நுண்ணோக்கி.
94. துகள் கொள்கை என்றால் என்ன?
துகள்களாலனது ஒளி என்னுங் கொள்கை - நியூட்டன். அலைகளாலானது ஒளி என்பது மற்றொரு கொள்கை - தாமஸ் யெங்.
95. உருக்குறைபாடுகள் என்பவை யாவை?
நிறப்பிறழ்ச்சியும் கோளப்பிறழ்ச்சியும் ஆகும். முன்னதைக் கிரவுண் கண்ணாடியிலான குவிவில்லை, பிளிண்ட கண்ணாடியிலான குழிவில்லை ஆகியவற்றைக் கொண்டு போக்கலாம். பின்னதைத் வளைய வடிவத் தடைகளைப் பயன்படுத்தியும் குறுக்கு வட்டமான வில்லைகளைப் பயன்படுத்தியும் போக்கலாம்.
96. உருமாற்றி என்றால் என்ன?
தெரியா உருவைத் தெரியும் உருவாக மாற்றும் மின்னணுக் கருவியமைப்பு.
97. முன்னேறுஅலைகள் என்றால் என்ன?
இவை பரவும் பொழுது துகளில் உண்டாகும் அதிர்வியக்கம் இதர துகள்களுக்கு ஊடகத்தின் வழியாகப் பரவும். எ-டு. நீரலைகள்.
98. நிறமாலை நோக்கி என்றால் என்ன?
நிறமாலையைப் பெறவும் உற்றுநோக்கவும் பயன்படும் கருவி.
99. துவக்கி என்றால் என்ன?
குழாய் விளக்கில் மின்சுற்றை மூடித் திறக்கும் குமிழ் போன்ற அமைப்பு.
100. நிலை அலைகள் என்றால் என்ன?
ஒரே அலை நீளமும் ஒரே வீச்சுங் கொண்ட இரு அதிர்வுகள் எதிர் எதிர்த்திசையில் ஒர் ஊடகத்தில் பரவும் பொழுது, இவை உண்டாக்கும் அலைவியக்கம் முன்னேறுவதில்லை. ஊடகத்தில் கணுக்களும் நள்ளிடைக் கணுக்களும் உண்டாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 10 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பரவும், உண்டாகும், பொழுது, நிழல்