இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 12
111. ஒளிச்சிதறல் (பிரிகை) என்றால் என்ன?
கலப்பு அலை நீளமுள்ள ஓர் ஒளிக்கதிரை அதன் பகுதிகளாகப் பிரித்தல்.
112. நிறப்பிரிகை என்றால் என்ன?
ஒளிக்கதிர் முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும் பொழுது, அதன் பகுதிகளாகப் பிரியும். இதற்கு நிறப் பிரிகை என்று பெயர்.
113. நிறமாலை என்றால் என்ன?
நிறப்பிரிகையினால் கிடைக்கும் முழு நிறத்தொகுதி.
114. நியூட்டன் வட்டு என்றால் என்ன?
இதில் முதன்மை நிறங்கள் வரையப்பட்டிருக்கும். இதை ஒரு மின்னுந்தி இயக்கும். இப்பொழுது அது வெள்ளையாகத் தெரியும். இதிலிருந்து வெண்ணொளியில் ஏழு நிறங்கள் இருப்பது தெரிய வருகிறது.
115. நியூட்டன் என்றால் என்ன?
எம்.கே.எஸ். முறையில் விசையின் சார்பலகு. மதிப்பு மாறாதது.
116. நியூட்டன் வளையங்கள் என்றால் என்ன?
பிரதிபலிக்கும் பரப்பில் அதிக அளவு ஆரங் கொண்ட வில்லையை வைத்து மேலிருந்து ஒற்றை நிற ஒளியில் ஒளி பெறச் செய்து உண்டாக்கப்படும் குறுக்கீட்டுக் கோலங்கள். இதை மேலிருந்து நுண்ணோக்கியால் பார்க்கத் தொடுபுள்ளிக்குப் பொது மையமாக ஒளிர்வான வளையங்களும் கறுப்பு வளையங்களும் மையத்தில் கறுப்புப் புள்ளியும் தெரியும்.
117. குறுக்கீடு என்றால் என்ன?
ஒரே பகுதியில் ஒரே அலைகள் செல்லும்பொழுது ஏற்படும் விளைவு. ஒவ்வொரு புள்ளியிலும் வீச்சு என்பது ஒவ்வொரு அலை வீச்சின் கூட்டுத் தொகை ஆகும்.
118. பிரிப்புமானி என்றால் என்ன?
பல கற்றைகளாக ஒளியைப் பிரிக்குங் கருவி. வில்லை களையும் முப்பட்டகங்களையும் ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. ஒளிக்கற்றைகளை இணைத்துக் குறுக் கீட்டை உண்டாக்குவது.
119. இருமடி எதிர்வீத விதி என்றால் என்ன?
ஒரு புள்ளியில் ஒளியூட்டச் செறிவு, அப்புள்ளிக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்வீதத்திலும் அம்மூலத்தின் ஒளி வீசுதிறனுக்கு நேர் வீதத்திலும் இருக்கும்.
L1L2=d12d22
L1, L2, - ஒளி வீசுதிறன். d1, d2, - தொலைவு.
120. இவ்விதியின் பயன் யாது?
இதைப் பயன்படுத்தி இரு விளக்குகளின் ஒளிவீசு திறனை ஒப்பிடுவதற்கான ஒளிமானிகள் செய்யலாம். அவற்றில் ஒன்று புன்சன் கிரீஸ் புள்ளி ஒளி மானி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 12 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நியூட்டன்