இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 14

131. வாலஸ்டன் முப்பட்டகம் என்றால் என்ன?
இது முனைப்படு விளைவு கொண்ட கண்ணாடி, தல முனைப்படு ஒளியைப் பெறப் பயன்படுவது.
132. பிரஸ்னல் வில்லை (லென்ஸ்) என்றால் என்ன?
ஒளி வில்லை. இதன் மேற்பரப்பு சிறிய வில்லைகளைக் கொண்டிருக்கும். குறுகிய குவியத் தொலைவை அளிக்குமாறு இவை அமைக்கப் பெற்றிருக்கும். தலை விளக்குகளிலும் துருவுவிளக்குகளிலும் பயன்படுவது.
133. கோள் மறைவு (கிரகணம்) என்றால் என்ன?
ஒரு விண்பொருள் மற்றொரு விண்பொருளால் மறைக்கப்படுவதற்குக் கோள் மறைவு என்று பெயர். இதில் மறைக்கும் பொருள், மறைக்கப்பட்ட பொருள், உற்றுநோக்கு நிலை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமையும்.
134. திங்கள் மறைவு (சந்திர கிரகணம்) என்றால் என்ன?
கதிரவன், புவி, திங்கள் ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் இருக்கும். இப்பொழுது புவிநிழல் திங்களில் விழும். நன்றாகத் தெரியும். நிறைநிலாவில் நிகழ்வது.
135. கதிரவன் மறைவு (சூரிய கிரகணம்) என்றால் என்ன?
புவியின் மேல் திங்களின் நிழல் விழுவதால் இது ஏற்படுகிறது. திங்கள் முழுதாக மூடினால் அது முழு மறைவு. பாதியாக மூடினால் அது பாதி மறைவு. திங்கள் மறைவு போன்று அவ்வளவு தெளிவாகத் தெரியாது.
136. பிரோனோஃபர் வரிகள் என்றால் என்ன?
கதிரவன் நிறமாலையிலுள்ள இருள் வரிகள். கதிரவனின் வெப்ப உட்பகுதிப் பார்வைக் கதிர்வீச்சை உமிழ்கிறது. இவ்வீச்சின் சில அலை நீளங்களின் கதிரவ நிற வெளியில் தனிமங்கள் உள்ளன. இத்தனிமங்களின் உறிஞ்சுதலால் இவ்வரிகள் ஏற்படுகின்றன. இதைக் கூறியவர் ஜான் ஹெர்ஷல், 1823.
137. ஒளி மின்விளைவைக் கண்டறிந்தவர் யார்?
1887இல் ஹென்றி ஹெர்ஷல் கண்டறிந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 14 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மறைவு, என்ன, என்றால், திங்கள், கதிரவன், கிரகணம்