இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 2
11. ஒளியின் விரைவென்ன?
2.997 925 (1) x 108 ms-1
12. ஒளியின் விரைவில் ஒரு பொருள் செல்ல இயலுமா?
இயலும்.
13. ஒளியாண்டு என்றால் என்ன? ஓராண்டு ஒளி வெற்றிடத்தில் கடக்கும் தொலைவு. வானியலில் தொலைவின் அலகு. 9.4650 X 1015 மீட்டருக்குச் சமம்.
14. ஒளியின் இயல்புகள் யாவை?
1. நேர்க்கோட்டில் செல்லும்.
2. ஒர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்பொழுது விலகும்.
3. அடியில் பட்டால் பிரதிபலிக்கும். பொருளின் உருவைக் காட்டும்.
4. அலையாகவும் துகளாகவும் இருப்பது.
5. காந்தப்புலத்தில் வளைந்து செல்லும்.
15. ஒளியின் நேர்விரைவை அளக்க ஆய்வு செய்தவர்கள் யார்?
மைக்கல்சன் - மார்லி (1887).
16. ஒளி பிரதிபலித்தல் என்றால் என்ன?
ஒளி ஒரு பளபளப்பான பரப்பில் பட்டு எதிரொளித்தல்.
17. ஒளி பிரதிபலித்தலின் விதிகள் யாவை?
1. படுகதிர், செங்குத்துக்கோடு, பிரதிபலித்த கதிர் ஆகியவை ஒரே மட்டத்தில் இருக்கும். செங்குத்துக் கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகரும் பிரதிபலித்த கதிரும் இருக்கும்.
2.படுகோணம் = பிரதிபலித்த கோணம்.
18. ஒளிவிலகல் என்றால் என்ன?
ஒளி ஒர் ஊடகத்தின் வழியாகச் சென்று வெளிவரும் பொழுது தன் பாதையை விட்டு நீங்குதல்.
19. ஒளிவிலகலின் விதிகள் யாவை?
1. படுகதிர், செங்குத்துக்கோடு, விலகுகதிர் ஆகியவை ஒரே சமதளத்தில் இருக்கும். செங்குத்துக் கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் விலகுகதிரும் இருக்கும். 2. படுகோணத்தின் சைனும் விலகுகோணத்தின் சைனும் எப்பொழுதும் மாறா வீதத்தில் இருக்கும். வீதம் ஒளியின் நிறத்தையும் ஊடகங்களையும் பொறுத்தது.
20. ஒளிவிலகல்மானி என்றால் என்ன?
இது ஒருவகை நிறமாலை நோக்கி ஒளிவிலகல் எண்களைத் துல்லியமாகக் கணக்கிடுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இருக்கும், ஒளியின், என்ன, என்றால், பிரதிபலித்த, யாவை