இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 8
71. ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
ஒர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும் பொழுது படுகோணத்தின் சைனுக்கும் விலகு கோணத்தின் சைனுக்குமுள்ள வீதம்.
72. சில பொருள்களின் விலகல் எண் யாது?
கிரெளன் கண்ணாடி 1.53, பனிக்கட்டி 1.31, வைரம் 2.417.
73. ஒளி விலகுதிறன் என்றால் என்ன?
தன்மேற்பரப்பில் நுழையும் ஒளிக்கதிரைத் திரிபடையச் செய்யும் ஊடகத்தின் அளவு.
74. ஒளி விலகல்எண்மானி என்றால் என்ன?
ஒரு பொருளின் ஒளிவிலகல் எண்ணைக் கண்டறியப் பயன்படுங் கருவி.
75. உருப்பெருக்கம் என்றால் என்ன?
உருவின் நீளத்திற்கும் பொருளின் நீளத்திற்கும் உள்ள வீதம். இது அதிகமாக அதிகமாகப் பொருள் பெரிதாகத் தெரியும். நோக்கு கருவிகளுக்குரியது.
76. ஒளிர் அளவு என்றால் என்ன?
விண்மீன்களின் சார்பு ஒளிர்த்தன்மை. இது தோற்ற ஒளிர் அளவு, தனி ஒளிர் அளவு என இருவகை.
77. ஒளிக்கருவிகள் யாவை?
புகைப்படப்பெட்டி, நுண்ணோக்கி, தொலை நோக்கி.
78. புகைப்படப்பெட்டி என்றால் என்ன?
நிழற்படங்கள் எடுக்க உதவும் கருவி.
79. பூதக்கண்ணாடி என்றால் என்ன?
ஒரு பொருளின் உருவைப் பெருக்கிக் காட்டும் கண்ணாடி கைக்கண்ணாடி வில்லை ஒரு பூதக்கண்ணாடியே.
80. நுண்ணோக்கி என்றால் என்ன?
பூதக்கண்ணாடியே நுண்ணோக்கி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 8 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், அளவு, நுண்ணோக்கி, பொருளின்