இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 9

81. நுண்ணோக்கியை செப்பப்படுத்தியவர் யார்?
மூக்குக்கண்ணாடி செய்த டச்சுக்காரராகிய சக்காரியாஸ் ஜேன்சன், 1590.
82. நுண்ணோக்கியின் வகைகள் யாவை?
1. தனி நுண்ணோக்கி – பூதக்கண்ணாடி
2. கூட்டு நுண்ணோக்கி - பொருள்களை அதிகம் பெருக்கிக் காட்டுவது.
3. மின்னணு நுண்ணோக்கி - உருப்பெருக்கம் 2,50, 000 தடவைகள் இருக்கும்.
4. புறஊதாக் கதிர் நுண்ணோக்கி - புற ஊதாக் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. உருப்பெருக்கம் 1500 தடவைகள்.
83. புல அயனி நுண்ணோக்கி எப்பொழுது புனையப்பட்டது? இதன் சிறப்பென்ன?
1951இல் புனையப்பட்டது. தனி அணுக்களை இது படம் பிடிக்க வல்லது.
84. தொலைநோக்கி என்றால் என்ன?
தொலைவிலுள்ள பொருள்களைப் பார்க்க உதவும் கருவி.
85. தொலைநோக்கியின் வகைகள் யாவை?
1. நிலத் தொலைநோக்கி - நிலப் பொருள்களைப் பார்க்க உதவுவது.
2. வானத் தொலைநோக்கி - வானப் பொருள்களைப் பார்க்க உதவுவது.
86. கலிபோர்னியாவில் பலோமர் மலையிலுள்ள 200-அங்குல தொலைநோக்கி எப்பொழுது நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது?
1948இல் நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.
87. தொலைநோக்கி அமைக்கும் முயற்சியைத் தொடங்கிய வர் யார்?
மூக்குக்கண்ணாடி செய்த டச்சுக்காரரான ஹேன்ஸ் லிபர்சே, 1608.
88. பிரதிபலிக்கும் தொலைநோக்கியைப் புனைந்தவர் யார்?
1668இல் நியூட்டன் புனைந்தார்.
89. எட்டப்பார்வை என்றால் என்ன?
விழிக்கோளம் சுருங்குவதால் அருகிலுள்ள பொருள்களில் இருந்து வரும் ஒளிக்குவியம் விழித்திரைக்குப் பின் விழுகிறது. இதனால் அருகிலுள்ள பொருள்களை மட்டுமே பார்க்க இயலும். இதைப் போக்கக் குவி வில்லையைப் பயன்படுத்த வேண்டும்.
90. கிட்டப்பார்வை என்றால் என்ன?
விழிக்கோளம் முன்னும் பின்னும் நீண்டு விடுவதால் தொலைபொருள்களிலிருந்து வரும் ஒளிக்குவியம் விழித் திரைக்கு முன் விழுகிறது. இதனால் தொலைவிலுள்ள பொருள்களைப் பார்க்க முடிவதில்லை.இதைப் போக்கக் குழிவில்லையைப் பயன்படுத்த வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 9 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பார்க்க, தொலைநோக்கி, நுண்ணோக்கி, பொருள்களைப், என்றால், யார், என்ன