இயற்பியல் :: வெப்பவியல் - பக்கம் - 9
81. கதிர்வீசல் என்றால் என்ன?
இதில் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடைப் பொருள் சூடடையாமல் வெப்பம் செல்லுதல். எ-டு கதிரவன் ஒளி புவியை அடைதல். குளிர்காயும்பொழுது வெப்பம் உடலில் உறைத்தல்.
82. கடத்தல், சுழற்சி, கதிர்வீசல் ஆகிய மூன்றும் அமைந்த கருவி யாது?
வெப்பக் குடுவை. (திவார்)
83. வெப்பக் குடுவையின் பயன் யாது?
குளிர்பொருள்களைக் குளிர்ச்சியாகவும், வெப்பப் பொருள்களை வெப்பமாகவும் வைத்திருக்கப் பயன்படுவது.
84. காற்றோட்டம், நீரோட்டம் எதன் அடிப்படையில் நடை பெறுபவை?
வெப்பச் சுழற்சி அடிப்படையில்.
85. குளிர்விப்பான் என்றால் என்ன?
உந்து எந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் சிறிய தொட்டி போன்ற அமைப்பு. இதிலுள்ள நீர், சூடேறும் எந்திரத்தைக் குளிர்விக்கும்.
86. திறன் என்றால் என்ன?
ஒரு வினாடி நேரத்தில் செய்யப்படும் வேலை. P=WT. P-திறன். W- வேலை. T. காலம்.
87. வெப்ப எண் என்றால் என்ன?
ஒரு கிராம் பொருளை 1o செக்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கும் ஒரு கிராம் நீரை 1o செக்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்குமுள்ள வீதம்.
88. நீருக்கு வெப்ப எண் 1 என்னும் அளவில் இருப்பதால் என்ன பயன்?
அது வெப்பத்தை மெதுவாகப் பெறுகிறது. மெதுவாக வெளிவிடுகிறது. இதனால், வீக்கத்திற்கு ஒற்றடம் கொடுக்க முடிகிறது.
89. மீக்குளிர்வு என்றால் என்ன?
குறிப்பிட்ட அழுத்தத்தில் உருகு வெப்பநிலைக்குக் கீழுள்ள வெப்பநிலைக்கு ஒரு நீர்மம் கெட்டியாகாமல் குளிர்தல்.
90. மீக்கடத்துதிறன் என்றால் என்ன?
சில பொருள்களைத் தனிச்சுழிநிலைக்குக் குளிர்விக்கும் பொழுது மின்தடை மறையும். பெரிய மின்காந்தப் புலங்கள் உண்டாக்க இது பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெப்பவியல் - பக்கம் - 9 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்