இயற்பியல் :: வெப்பவியல் - பக்கம் - 2
11. தோன்றுதல் வெப்பம் என்றால் என்ன?
நிலையான வெப்பநிலையில் ஒரு மோல் அளவுள்ள பொருள் தன் தனிமங்களிலிருந்து உருவாகத் தேவையான வெப்பம்.
12. உருகுதல் வெப்பம் என்றால் என்ன?
உருகு நிலையில் ஒரளவு பொருள் திணிவுள்ள தனிமத்தை நீர்மமாக்கத் தேவையான கலோரிகளின் எண்ணிக்கை.
13. உருகுதலின் உள்ளுறை வெப்பம் என்றால் என்ன?
வெப்பநிலை மாறாமல் ஒரு கிராம் திண்மப் பொருள் நீர்மமாக எடுத்துக் கொள்ளும் வெப்பம்.
14. ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் என்றால் என்ன?
வெப்பநிலை மாறாமல் ஒரு கிராம் நீர்மம் தன் இயல்பான கொதிநிலையில் ஆவியாக எடுத்துக் கொள்ளும் வெப்பம்.
15. நீரின் உள்ளுறை வெப்பம் என்ன?
ஒரு கிராமுக்கு 80 கலோரி.
16. நீராவியின் உள்ளுறை வெப்பம் என்ன?
ஒரு கிராமுக்கு 537 கலோரி.
17. உள்ளுறை வெப்பத்தைக் கண்டறிந்தவர் யார்?
ஜோசப் பிளேக், 1761.
18. நீராவியால் ஏற்படும் புண் கடுமையாக இருக்கும். ஏன்?
வெப்பம் 537 கலோரியாக உள்ளது.
19. வெப்ப நிகழ்வுகள் எத்தனை வகைப்படும்?
வெப்பமாறு நிகழ்வுகள், வெப்பம் மாறா நிகழ்வுகள்.
20. வெப்பம் மாறு நிகழ்வு என்றால் என்ன?
இதில் வெப்பநிலை ஒரே அளவாக இருக்கும். காரணம் கலத்தின் பக்கங்கள் கடத்திகளாக இருப்பதால் சுற்றுப்புறத்திற்கு வெப்பம் செல்கிறது. எ-டு.பனிகட்டி உருகுதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெப்பவியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வெப்பம், என்ன, உள்ளுறை, என்றால், நிகழ்வுகள், பொருள், வெப்பநிலை