இயற்பியல் :: வெப்பவியல் - பக்கம் - 1
1. வெப்பம் என்றால் என்ன?
பொருளின் ஆற்றல். வெப்பநிலை வேறுபாட்டால் மாறுவது. இயக்க நிலையில் உள்ளது. அலகு கலோரி அல்லது ஜூல்.
2. வெப்ப ஏற்புத்திறன் என்றால் என்ன?
ஒரு பொருள் முழுவதையும் 1" செக்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப அளவு. T = ms. கலோரிகள். T - வெப்ப ஏற்புத்திறன். m - நிறை. S. வெப்ப எண்.
3. வெப்பமாற்றி என்றால் என்ன?
பாய்மங்கள் ஒன்றோடு மற்றொன்று கலவாமல் அவை ஒவ்வொன்றிற்கும் வெப்பம் செலுத்துங் கருவி.
4. வெப்ப ஓட்டம் என்றால் என்ன?
ஒரலகு நேரத்தில் ஓரலகு பரப்பில் இடமாற்றம் பெறும் வெப்பம்.
5. வெளிக்கவரல் வெப்பம் என்றால் என்ன?
நிலையான அழுத்தத்தில் ஒரு மோல் அளவுள்ள பொருள் மற்றொன்றின்மீது வெளிக்கவரப்படும் வெப்பம். உள்ளிட்டு வெப்பத்தால் உயர்வது.
6. அணுவாதல் வெப்பம் என்றால் என்ன?
ஒரு மோல் அளவுள்ள பொருளை அணுக்களாகச் சிதைக்கத் தேவையான வெப்பம்.
7. கனற்சி வெப்பம் என்றால் என்ன?
மிகு உயர்வளியில் ஒரு மோல் அளவுள்ள பொருளை எரிக்க உண்டாகும் வெப்ப அளவு நடைமுறை அலகு வாட்.
8. படிகமாதல் வெப்பம் என்றால் என்ன?
தன் உறைநிலையில் நீர்மத் தொகுதி படிகம் ஆகும்பொழுது உண்டாகும் வெப்ப அளவு.
9. நீர்த்தல் வெப்பம் என்றால் என்ன?
நிலையான வெப்பநிலையில் குறிப்பிட்ட அளவு கரைப்பானைச் சேர்க்க உண்டாகும் உள்ளிட்டு வெப்ப உயர்வு.
10. பிரிகை வெப்பம் என்றால் என்ன?
நிலையான அழுத்தத்தில் இணைதிறன் பிணைப்பு விடுபடும் போது ஏற்படும் உள்ளிட்டு வெப்ப உயர்வு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெப்பவியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வெப்பம், என்ன, என்றால், வெப்ப, அளவு, உண்டாகும், உள்ளிட்டு, அளவுள்ள, மோல், நிலையான