இயற்பியல் :: வெப்பவியல் - பக்கம் - 10
91. மீப்பாய்மம் என்றால் என்ன?
உராய்வின்றி ஒடும் நீர்மம். இதற்கு இயல்பு மீறிய உயர் கடத்தும் திறன் உண்டு.
92. மீப்பாய்மத்திறன் என்றால் என்ன?
குறைந்த வெப்பநிலையில் தடையில்லாமல் ஒடும் நீர்மத்தின் பண்பு. எ-டு. ஈலியம்.
93. வெப்பஏற்புத்திறன் என்றால் என்ன?
ஒரு கிலோகிராம் நிறையுள்ள பொருளின் வெப்ப நிலையை ஒரு கெல்வின் உயர்த்த ஜூல் அளவில் தேவைப்படும் வெப்ப ஆற்றல்.
94. வெப்பங் கடத்துதிறன் என்றால் என்ன?
ஓரலகு வெப்ப நிலை வாட்டம் நிலவும்போது, ஓரலகு குறுக்குப் பரப்பின் வழியே ஒரு வினாடியில் ஜூல் அளவில் கடத்தப்படும் வெப்ப ஆற்றல்.
95. வெப்பத் தகைவு என்றால் என்ன?
உலோகப் பொருள்களாலான தண்டுகள் வெப்பத்தினால் விரிவடையும் பொழுது உண்டாகும் விசை.
96. இதன் பயன் யாது?
இது பாலங்கள் கட்டுவதில் பயன்படுகிறது.
97. காரணி என்றால் என்ன?
இது மாறிலியைக் குறிக்கும். எ-டு சுருக்கக் கூற்றெண்.
98. ஹென்றி விதியைக் கூறுக.
நிலையான வெப்பநிலையில் ஒரு நீர்மத்தின் வளிக் கரைதிறன், அவ்வளியழுத்தத்திற்கு நேர்வீதத்திலிருக்கும் இதைப் பிரிட்டிஷ் வேதியியலாரும் மருத்துவருமான ஜோசப் ஹென்றி 1801இல் வகுத்தார்.
99. கலோரிமானி (கனல் அளவி) என்றால் என்ன?
உருவாகும் வெப்பத்தை அளக்கப் பயன்படுங் கருவி.
100. சமநீர் எடை என்றால் என்ன?
ஒரு பொருளின் சமநீர் எடை என்பது அதே வெப்ப ஏற்புத்திறனுள்ள நீரின் நிறையாகும். E=ms, E-சமஎடை m - நிறை. S- வெப்ப எண்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெப்பவியல் - பக்கம் - 10 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, வெப்ப